

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி தலையீடு மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு காரணமாக, இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 31 காசுகள் உயர்ந்து ரூ.89.87ஆக நிறைவடைந்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணிச் சந்தையில், இந்திய ரூபாய் டாலருக்கு நிகரான ரூ.90.20 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கியது. பிறகு ரூ.89.75 முதல் ரூ.90.23 என்ற வரம்பில் வர்த்தகமாகி, முடிவில், முந்தைய நாள் முடிவை விட 31 காசுகள் உயர்ந்து ரூ.89.87 ஆக நிலைபெற்றது.
நேற்றைய வர்த்தகத்தில், இந்திய ரூபாய் மதிப்பு தனது நான்கு நாள் தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து, டாலருக்கு நிகராக 12 காசுகள் உயர்ந்து ரூ.90.18 என்ற அளவில் நிலைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.