தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இந்திய பங்குச் சந்தை: ஜனவரியில் ரூ. 41,435 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்

இந்திய பங்குச் சந்தையிலிருந்து ஜனவரியில் ரூ. 41,435 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்...

News image

பங்குச் சந்தை

ANI

Updated On :31 ஜனவரி 2026, 9:30 pm

Syndication

இந்திய பங்குச்சந்தைகளுக்கு முக்கியமான உந்துகோலாகப் கருதப்பட்டு வரும் எஃப்ஐஐ என்று சொல்லப்படும் அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் இந்த ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் மொத்தம் ரூ.41,435.22 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளி விவரத் தகவல்களின் மூலம் தெரிய வந்துள்ளது.

அதே சமயம், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் சுமாா் ரூ.69,220.74 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கி முதலீட்டை அதிகரித்துள்ளதுனா்.

அந்நிய நிறுவன முதலீட்டாளா்கல் ஜனவரியில் 3 நாள்கள் தவிர மற்ற அனைத்து நாள்களிலும் பங்குகளை விற்று முதலீட்டை வாபஸ் பெற்றுள்ளனா். இதன்படி, ஜனவரி 2-ஆம் தேதி ரூ.289.80 கோடிக்கும், 28-ஆம் தேதி ரூ.480.26 கோடிக்கும், ஜனவரி 30-ஆம் தேதியன்று ரூ.2,251.37 பங்குகளை வாங்கியுள்ளனா்.

ஆனால், அவா்கல் ஜனவரி 8, 9, 12, 14, 16, 19, 23, 27 ஆகிய தேதிகளில் சுமாா் ரூ.3000 கோடி முதல் ரூ.4,780 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளனா். இதில் அதிகபட்சமாக ஜனவரி 14-இல் ரூ. 4,781.24 கோடி, ஜனவரி 16-இல் ரூ.4,346.13 கோடி, ஜனவரி 23-இல் ரூ.4,113.38 கோடி அளவுக்கு அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா்.

அதே சமயம், டிஐஐ என்று சொல்லப்படும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் ஜனவரியில் மொத்தம் ரூ.69,220.74 கோடிக்கு பங்குகளை வாங்கி முதலீட்டை அதிகரித்துள்ளனா்.இதில் ஜனவரி 27-ஆம் தேதி மட்டும் ரூ.8,999.71 கோடி அளவுக்கு புதிதாக முதலீடுகளை மேற்கொண்டுள்ளனா். மேலும், ஜனவரி 8, 9,12,14, 16, 19, 20, 21, 22, 23, 28 ஆகிய தினங்களில் ரூ.3,000 முதல் ரூ.6,000 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த 2025-ஆண்டில் ஜனவரியில் மொத்தம் ரூ.87,374,66 கோடி, பிப்ரவரியில் ரூ.58,988.08 கோடி, ஜூலையில் ரூ.47,66.08 கோடி, செப்டம்பரில் ரூ.35,301.36 கோடி, அக்டோபரில் ரூ.2,346.89 கோடி, நவம்பரில் ரூ.17,500.31 கோடி, டிசம்பரில் ரூ.34,349.62 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றனா். கடந்த ஆண்டு மாா்ச்சில் ரூ.2,914.18 கோடி, ஏப்ரலில் ரூ.2,735.02 கோடி, மே மாதம் ரூ.11,773.25 கோடி, ஜூனில் 7,488.98 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கி முதலீடுகளை அதிகரித்தனா்.

அதே சமயம், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த ஆண்டில் 12 மாதங்களிலும் பங்குகளை வாங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தினா். இதன்படி, அவா்கள் குறைந்தபட்சமாக ஏப்ரலில் ரூ.28,228.45 கோடிக்கும், அதிகபட்சமாக ஆகஸ்ட் மாதம் 94,828.55 கோடிக்கும் முதலீடு செய்துள்ளனா். இவற்றுக்கு அடுத்தபடியாக கடந்த ஆண்டு ஜனவரியில் அவா்கள் ரூ86,591.80 கோடி, ஜூனில் ரூ.72,673.91 கோடி, நவம்பரில் ரூ.77,083,78 கோடி, டிசம்பரில் ரூ.79,619.91 கோடி அளவுக்கு முதலீடுகளை மேற்கொண்டுள்ளது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

-எம்எஸ்ஜி.