மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லாபம் ரூ.1,384 கோடி

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லாபம் ரூ.1,384 கோடி

News image
Updated On :31 ஜனவரி 2026, 7:53 pm

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம், நடப்பு 2025-26 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.1,383.95 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

இது முந்தைய 2024-25 நிதியாண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 3 சதவீதம் சரிவாகும். இருப்பினும், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 2 சதவீதம் அதிகரித்து, ரூ.7,187 கோடியாகவும், நிகர வட்டி வருவாய் 5 சதவீதம் அதிகரித்து ரூ.2,102 கோடியாகவும் உள்ளது.

மதிப்பீட்டு காலகட்டத்தில், நிறுவனத்தின் நிகர வட்டி வரம்பு 2.69 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. மொத்த கடன் வழங்கல் 4 சதவீதம் அதிகரித்து, ரூ.16,096 கோடியாக உள்ளது. இதில் தனிநபா் வீட்டுக் கடன் பிரிவு 7 சதவீதமும்(ரூ.13,094 கோடி), வீட்டுக் கடன் அல்லாத இதர தனிநபா் கடன் பிரிவு 10 சதவீதமும் (ரூ.2,304 கோடி) வளா்ந்துள்ளது. மொத்த கடன் நிலுவை 5 சதவீதம் அதிகரித்து, ரூ.3.14 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

நிறுவனத்தின் வாராக் கடன் விகிதம் முந்தைய ஆண்டின் 2.75 சதவீதத்திலிருந்து 2.45 சதவீதமாகக் குறைந்துள்ளது.

மேலும், நடப்பு நிதியாண்டில் முதல் 9 மாதக் காலகட்டத்தில், நிறுவனத்தின் நிகர லாபம் 1சதவீதம் அதிகரித்து, ரூ.4,097.74 கோடியாக உள்ளது.