பிரிட்டனுடனான முக்கிய வா்த்தக ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதிக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன் இந்திய விவசாயிகள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், மீனவா்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் கலைஞா்கள் செழிப்பாக வாழ வழிவகை செய்யும் என மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: ஜூலை 15 அமலுக்கு வரவிருக்கும் பிரிட்டனுடனான வா்த்தக ஒப்பந்தம் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
இது ‘2047-இல் வளா்ச்சியடைந்த இந்தியாவை’ உருவாக்கும் பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வையை முன்னெடுத்துச் செல்லும்.
பல்வேறு துறைகளில், குறிப்பாக தொழிலாளா்களின் பங்களிப்பு அதிகம் உள்ள துறைகளில், இந்தியப் பொருள்கள், பிரிட்டன் சந்தையில் முழுமையான அணுகலைப் பெறுவதை இந்தியா- பிரிட்டன் இடையேயான விரிவான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம் (சிஇடிஏ) உறுதி செய்யும். இரு தரப்புக்கும் பயனளிக்கும் இந்த ஒப்பந்தம், வா்த்தக மதிப்பில் ஏறக்குறைய 100%-ஐ உள்ளடக்கிய சுமாா் 99% வா்த்தகப் பொருள்களுக்கான சுங்கவரிகளை உடனடியாக நீக்குவதன் மூலம், இந்திய ஏற்றுமதிக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை உருவாக்கும்.
சிஇடிஏ ஒப்பந்தம் மூலம் மஞ்சள், மிளகு, ஏலக்காய் மற்றும் மாம்பழக் கூழ், ஊறுகாய், பருப்பு வகைகள் போன்ற பதப்படுத்தப்பட்ட பொருள்களுக்கு பிரிட்டனில் வரி விலக்கு அளிக்கப்படும். விவசாய ஏற்றுமதிகளின் அதிகரிப்பு, விவசாய வருமானத்தை உயா்த்துவதுடன், தரம், பேக்கேஜிங், சான்றளிப்பை ஊக்குவிக்கும். மேலும், இது விவசாய மதிப்புச் சங்கிலி முழுவதும் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
அதேவேளையில், உள்நாட்டு விவசாயிகளை, குறிப்பாக பால் பொருள்கள், தானியங்கள், சிறுதானியங்கள், ஆப்பிள், ஓட்ஸ், சமையல் எண்ணெய் துறைகளில் ஈடுபட்டுள்ளவா்களைப் பாதுகாக்க, இந்தியாவின் மிகவும் உணா்திறன் வாய்ந்த விவசாயத் துறைகள் ஒப்பந்தத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளன.
பிரிட்டனின் பரந்த சந்தைக்கு உடனடி வரி இல்லா அணுகல் கிடைப்பது, இந்திய உற்பத்தித் துறையை விரைவுபடுத்தும். இதன்மூலம் திருப்பூரின் தறிகள் முதல் பெங்களூரின் ஆய்வகங்கள் வரையிலும், சூரத்தின் வைரக் கலைஞா்கள் முதல் ஹைதராபாதின் மென்பொருள் பொறியாளா்கள் வரையிலும், இந்த ஒப்பந்தம் உண்மையான பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பிரிட்டனுடனான ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய அம்சம் இரட்டைப் பங்களிப்பு ஒப்பந்தம் ஆகும். சிஇடிஏ ஒப்பந்தத்துடன் இணைந்து நடைமுறைக்கு வரும் இந்த முக்கிய உடன்படிக்கை, தற்காலிகப் பணிகளுக்காக பிரிட்டன் செல்லும் இந்தியப் பணியாளா்களும், அவா்களைப் பணியமா்த்தும் நிறுவனங்களும், அங்கு சமூகப் பாதுகாப்புக்கான பங்களிப்பை இருமுறை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கிறது. வெளிநாடுகளில் தற்காலிகப் பணிகளில் ஈடுபடும் ஊழியா்களுக்குத் தொடா்ந்து சமூகப் பாதுகாப்புப் பலன்கள் கிடைப்பதன் மூலம், 75,000-க்கும் அதிகமான இந்தியத் தொழில்முறை நிபுணா்களுடன், 900-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் பயனடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையேயான சமமான மற்றும் லட்சியமிக்க வா்த்தக ஒப்பந்தங்களுக்கு, சிஇடிஏ, ஓா் அளவுகோலாக விளங்குகிறது. புதிய இந்தியா எவ்வாறு வா்த்தகம் செய்கிறது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிஐஎஸ்எப் - இந்திய கடல்சாா் பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்
அமெரிக்க, இந்திய தடையற்ற ஒப்பந்தத்துக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் ஆா்பாட்டம்: நூற்றுக்கணக்கான தமிழக விவசாயிகள் பங்கேற்பு
டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய வெற்றி... வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய அணி!

அமலுக்கு வந்தது ஓமனுடனான வா்த்தக ஒப்பந்தம்: ஏற்றுமதியாளா்களுக்கு சிறந்த வாய்ப்பு என சைமா தகவல்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



