மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

சரிந்து மீளும் பங்குச்சந்தை! எண்ணெய் & எரிவாயுப் பங்குகள் சரிவு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

News image

IANS

Updated On :16 மார்ச் 2026, 6:13 am

இஸ்ரேல் - ஈரான் போரினால் கடந்த வாரம் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையான சரிவைச் சந்தித்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று(மார்ச் 16, திங்கள்) சரிவுடன் தொடங்கி தற்போது மீண்டு வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 74,415.79 என்ற புள்ளிகளில் சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை சரிந்த நிலையில் பின்னர் மீண்டெழுந்து சற்றே உயர்வுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 135.97 புள்ளிகள் அதிகரித்து 74,698.58 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 41.55 புள்ளிகள் உயர்ந்து 23,192.65 புள்ளிகளில் உள்ளது.

அல்ட்ராடெக் சிமென்ட், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், இன்டர்குளோப் ஏவியேஷன் ஆகியவை நிஃப்டி50 குறியீட்டில் அதிக லாபம் ஈட்டின.

நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.28 சதவீதம், 0.75 சதவீதம் சரிந்தன.

துறை வாரியாக, நிஃப்டி ரியல் எஸ்டேட் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. நிஃப்டி எஃப்எம்சிஜி உயர்வுடன் வர்த்தகமாகிறது.

வெளிநாட்டுப் பங்குகள் அதிகம் விற்பனையானதால் பங்குச்சந்தைகள் இன்று காலை கடும் சரிவைச் சந்தித்துள்ளன.

பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 100 டாலரைக் கடந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92.43 ஆக உள்ளது.

Summary

Stock Market: Sensex, Nifty flat; realty, oil and gas stocks decline

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.