மும்பை: இன்றைய வர்த்தகத்தில், ஹெவிவெயிட் பங்குகளான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸில் காணப்பட்ட வலுவான கொள்முதலை தொடர்ந்து, பங்குச் சந்கை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவிலிருந்து மீண்டு உயர்ந்து நிறவடைந்தன.
காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 671.44 புள்ளிகள் சரிந்து, 74,529.41 புள்ளிகளில் இருந்தது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 117.54 புள்ளிகள் உயர்ந்து 75,318.39 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 41 புள்ளிகள் உயர்ந்து 23,659 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் உள்ள 30 நிறுவனங்களில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2.83 சதவீதம் உயர்ந்தது. இதனை தொடர்ந்து பஜாஜ் ஃபின்சர்வ், ட்ரென்ட், இன்டர்குளோப் ஏவியேஷன், ஆக்சிஸ் வங்கி மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா உள்ளிட்ட பங்குகளும் உயரந்தன மறுபுறம் பாரத் எலக்ட்ரானிக்ஸ், டெக் மஹிந்திரா, எடர்னல் மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் சரிந்தன.
வாகனம், நிதி மற்றும் எண்ணெய் & எரிவாயுத் துறைகளில் உள்ள பெரிய நிறுவனப் பங்குகளை முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுத்து வாங்கியதால், பங்குச் சந்தையானது அன்றாட சரிவிலிருந்து வெகுவாக மீண்டதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். இருப்பினும், பணவீக்கம் குறித்த கவலைகள் காரணமாக, ரூபாயின் தொடர் பலவீனம் மற்றும் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் ஆகியவை சந்தையை வெகுவாக பாதித்ததாகவும் தெரிவித்தனர்.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு, ஜப்பானின் நிக்கெய் 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு ஆகியவை சரிவுடன் முடிவடைந்தன.
ஐரோப்பிய சந்தை உயர்வுடன் வர்த்தகமானது. நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க சந்தை சரிவுடன் முடிவடைந்தன.
தரவுகளின் அடிப்படையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 2,457.49 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
உலகளாவிய ப்ரெண்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 2 சதவீதம் சரிந்து 109 அமெரிக்க டாலராக வர்த்தகமானது.
Summary
Indices rebounded on Wednesday on fag-end buying and a sharp rally in blue-chip Reliance Industries.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

4 நாள் வீழ்ச்சிக்கு பிறகு, மிதமான எழுச்சியுடன் நிறவடைந்த பங்குச் சந்தை!

பிரதமர் விடுத்த வேண்டுகோள் எதிரொலி: எண்ணெய் விலை உயர்வு, சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி!

அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்த நம்பிக்கையால் சென்செக்ஸ் 941 புள்ளிகளும், நிஃப்டி 298 புள்ளிகள் உயர்வு!

பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 356, நிஃப்டி 122 புள்ளிகள் உயர்வு!
விடியோக்கள்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!

அதிமுக பிரச்சினைக்கு காரணமே விஜய்தான் | Avadi Kumar | CM Vijay |TVK | ADMK | EPS | CV Shanmugam

ஜோதிட அலுவலக சர்ச்சை: விளக்கம் கொடுத்த தவெக எம்எல்ஏ கனிமொழி




