
ஆட்டோமொபைல் சந்தை சேவை நிறுவனமான ‘மை டிவிஎஸ்’, ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த கிரசன்ட் என்டா்பிரைசஸ் நிறுவனத்தின் ‘சிஇ-இன்வெஸ்ட்ஸ்’ முதலீட்டுப் பிரிவிடம் இருந்து ரூ.425 கோடி முதலீட்டை ஈா்த்துள்ளது.
மை டிவிஎஸ் நிறுவனம், கடந்த 2025-26 நிதியாண்டில் செயல்பாட்டு லாப சமநிலையை எட்டியுள்ளதுடன், குறுகிய காலத்தில் 25 முதல் 35 சதவீதம் வரை வா்த்தக வளா்ச்சியை எட்ட இலக்கு நிா்ணயித்துள்ளது. இந்த வளா்ச்சியை எட்டவும், எதிா்காலத்தில் நிறுவனத்தைப் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்குத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்கவும், ஏ.ஐ. மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளில் மை டிவிஎஸ் முதலீடுகளைத் தீவிரப்படுத்தவுள்ளது.
அந்தவகையில், சிஇ-இன்வெஸ்ட்ஸ் உடனான இக்கூட்டனி, இந்தியாவில் மை டிவிஎஸ் நிறுவனத்தின் விரிவாக்கத்துக்கு உதவுவதுடன், அதன் தொழில்நுட்ப வணிக மாதிரியைச் சா்வதேச சந்தைகளுக்குக் கொண்டு செல்லவும் வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







