மிகப்பெரிய நீர்நிலைகள் ஏரி என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இயற்கையாக தோன்றிய ஏரிகளும் உள்ளன. செயற்கையாக கட்டப்பட்ட ஏரிகளும் உள்ளன. இந்தியாவிலுள்ள பெரிய ஏரிகள் பற்றிய விவரங்களை பார்ப்போம்.
தேபர் ஏரி: இந்த ஏரி ஜெய்சமன்ட் ஏரி என்றும் அழைக்கப்படுகிறது. இது ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய செயற்கை ஏரி ஆகும். இது போபலில் உள்ளது.
சாத்தால் ஏரி: உத்தர்கண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் உள்ள பிம்தால் என்ற இடத்தில் இந்த ஏரி அமைந்துள்ளது. இமயமலைத் தொடரின் கீழ் பகுதியில் 7 நன்னீர் எரிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து காணப்படுவதால் 'சாத்'தால் ஏரி என அழைக்கப்படுகிறது. ஹிந்தியில் 'சாத்' என்றால் 7 என்ற எண் ஆகும்.
நைனிடால் எரி: உத்தர்கண்ட் மாநிலத்தின் நைனிடால் நகரில் அமைந்துள்ள இயற்கையான நன்னீர் ஆகும்
வீராணம் ஏரி: தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் இருந்து 14 கி.மீ தொலைவில் இந்த ஏரி அமைந்துள்ளது.
செங்குன்றம் ஏரி: செங்குன்றம் ஏரி புழலேரி என்றும் அழைக்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் இந்த ஏரி அமைந்துள்ளது.
பழவேற்காடு ஏரி: இது இந்தியாவில் இரண்டாவது பெரிய கடல்நீர் ஏரி ஆகும். சென்னையிலிருந்து 60 கி.மீ தொலைவில் தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது. இதனை ஆங்கிலத்தில் புலிக்காட் ஏரி என்று அழைப்பர்.
ஊட்டி ஏரி: இது செயற்கை ஏரியாகும். சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை முக்கியமான ஏரிகளுள் இதுவும் ஒன்றாகும்.
செம்பரம்பாக்கம் ஏரி: இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக இது விளங்குகிறது.
பெரிஜாம் ஏரி: இந்த ஏரி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ளது. இந்த நீரை மக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.
சாங்கு ஏரி: இது சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஏரி கடல் மட்டத்தில் இருந்து 12,400 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது கிழக்கு சிக்கிம் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலாத்தலம் ஆகும். இங்கு யாக் எனப்படும் கவரிமா சவாரி உண்டு. உணவு, குளிருக்கான ஆடைகள் வாடகைக்குத் தரும் சில கடைகளும் உள்ளன.
குருதோங்மார் ஏரி: குருதோங்மார் ஏரி அல்லது குருதோக்மார் ஏரி என்றும் அழைக்கப்படும். இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு புனித ஏரியாகும். இது உலகின் உயரமான இடத்தில் அமைந்துள்ள ஏரிகளுள் ஒன்று. இது கடல் மட்டத்தில் இருந்து 17,100 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது சிக்கிம் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ளது.
பிச்சோலா எரி: ராஜஸ்தானில் அமைந்துள்ள இந்த ஏரியில் உள்ள நீர் சுத்தமானதாக இருக்கும். இந்த நீர் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், மக்களின் தாகம் தீர்க்கும் குடிநீராகவும் இது பயன்படுகிறது.
பதேஹ் சாகர் ஏரி: ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் நகரில் அமைந்துள்ளது. செயற்கை முறையில் உருவாக்கப்பட்டது. 1678ம் ஆண்டு வடமேற்கு பகுதியின் மஹாராணாப்பதேஹ்சிங் என்ற மன்னரால் உருவாக்கப்பட்டது.
சர்தார் சமன்டு ஏரி: இந்த ஏரி ஜோத்பூரில் உள்ளது. இந்த நீர் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
கைலானா ஏரி: ஜோத்பூரில் உள்ள கைலானா ஏரி ஜெய்சல்மேர் சாலையில் அமைந்துள்ள ஒரு செயற்கை நீர்த்தேக்கமாகும். இது அற்புதமான இயற்கை எழில் மிக்கதாகும். இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
புஷ்கர் ஏரி: ராஜஸ்தானில் புஷ்கர் ஏரி அமைந்துள்ளது. இது அஜ்மேரில் இருந்து 11 கி.மீ. தொலைவில் பாலைவன விளிம்பில் உள்ள அமைதியான ஏரி ஆகும். இந்துக்களின் புனித யாத்திரைத் தலமாக புஷ்கர் விளங்குகிறது.
ரோபர் ஏரி: பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீர் தூய்மையானதாகவும், மக்களின் தாகத்தை தீர்ப்பதாகவும் உள்ளது.
லோக்டாக் ஏரி: மணிப்பூரில் உள்ள இந்த ஏரியிலும் நன்னீராக உள்ளது. வடகிழக்கு இந்தியாவில் அமைந்துள்ளது.
உமியம் ஏரி: இந்த ஏரி மேகாலயாவில் செயற்கையாக உருவாக்கப்பட்டது. இது முக்கிய சுற்றுலா தலாமாக விளங்குகிறது. இந்த நீர் மீன்பிடித்தல் மற்றும் குடிநீர் போன்ற மனித தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுகிறது.
சிப்சாகர் ஏரி: சிப்சாகர் அஸ்ஸாமில் அமைந்துள்ளது. இது மிகப்பெரிய ஏரியாகும். இந்த ஏரி செயற்கையாக உருவாக்கப்பட்டதாகும்.
போவய் ஏரி: மும்பை நகரத்தில் அமைந்துள்ளது. இது செயற்கையாக உருவாக்கப்பட்டதாகும். இந்த ஏரியில் உள்ள நீர் மும்பை மக்களின் தாக்கத்தை தீர்க்கும் குடிநீராக பயன்படுகிறது.
லூனார் ஏரி: மும்பையில் இருந்து 800 கி.மீ தொலைவில் புல்தானா மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள ஏரி பறவைகளின் சரணாலயமாக விளங்குகிறது.
லோயர் ஏரி: இது மத்திய பிரதேசத்தின் தலைநகரமான போபாலில் அமைந்துள்ளது. இது சோடா தாலாப் (சிறிய குளம்) என்றும் அழைக்கப்படுகிறது.
அப்பர் ஏரி; இது போபால் நகரில் அமைந்துள்ளது. இது படாதாலாப் (பெரிய குளம்) என்றும் அழைக்கப்படுகிறது.
சாஸ்தாம் கோட்டை ஏரி: இது கேரளா மாநிலத்தில் அமைந்துள்ளது. இதை ஈரநிலம் என்றும் குறிப்பிடுவதுண்டு. கொல்லம் மாவட்டத்தில் சுமார் 5 லட்சம் மக்களுக்கு தேவையான குடிநீர் இந்த ஏரியில் இருந்து கிடைக்கிறது. மீன்வளம் மிகுந்த ஏரியாகும் இது உள்ளது.
வேம்பநாடு ஏரி: இது கேரளாவில் உள்ள மிகப்பெரிய ஏரியாகும். வேம்பநாடு காயல் என்றும் அழைக்கப்படுகிறது.
அஷ்டமுடி ஏரி: இது கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது. கேரளாவின் வளமையை உலக்கு எடுத்துக் காட்டும் வகையில் இந்த ஏரி அமைந்துள்ளது.
அல்சூர் ஏரி: இது பெங்களூரில் உள்ள மிகப் பெரிய ஏரிகளுள் ஒன்றாக திகழ்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.