சுடச்சுட

  

  தாஜ் மகால் செல்லும் தாய்மார்கள் கவனத்துக்கு: உங்களுக்காகவே சிறப்பு வசதி!

  By IANS  |   Published on : 31st August 2019 11:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  taj-mahal


  ஆக்ராவில் அமைந்துள்ள உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ் மகாலை சுற்றிப் பார்க்கச் செல்லும் தாய்மார்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

  அதாவது தாஜ் மகாலுக்கு வரும் தாய்மார்கள், தங்கள் பிள்ளைக்கு பாலூட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய அறை ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்தியர்கள் மட்டுமல்ல, சர்வதேச நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளையும் கவரும் ஒரு இடமாக தாஜ் மகால் உள்ளது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 22 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தாஜ் மகாலைப் பார்க்க வருகிறார்கள். எனவே தாஜ் மகாலைப் பார்க்க வரும் தாய்மார்களின் வசதிக்காக பாலூட்டும் அறை கட்டப்படும் என்று இந்த ஆண்டின் துவக்கத்தில் இந்திய தொல்லியல் துறை அறிவித்திருந்தது.

  இந்த நிலையில் கட்டி முடிக்கப்பட்ட பாலூட்டும் அறையை மத்திய கலாசாரத் துறை இணை அமைச்சர் பிரஹாத் ஸ்வர்ன்கார் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

  இந்திய சுற்றுலா மையங்களில் பாலூட்டும் அறை திறக்கப்பட்டிருப்பது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்று இந்திய தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தாஜ் மகால் வளாகத்துக்குள்ளேயே 12க்கு 12 அடி அகலமுள்ள இந்த அறை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதேப்போல ஆக்ரா கோட்டையிலும் பாலூட்டும் அறை அடுத்த மாதம் கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai