
ஜேஎன்யு விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்த போது, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி துணிச்சலுடன் அவையில் பதில் அளித்து, பிரதமர் மோடியின் பாராட்டுகளைப் பெற்றார். இந்த நிகழ்வுக்குப் பிறகு கட்சியிலும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மத்தியிலும் ஸ்மிருதி இரானிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. இந்தப் பின்னணியில் தனது நாடாளுமன்ற உரையைத் தொகுத்தளித்த பாஜகவின் கிருஷ்ண கோபாலை தனது இல்லத்துக்கு அண்மையில் வரவழைத்து நன்றியைத் தெரிவித்தார் ஸ்மிருதி இரானி. ஜேஎன்யு விவகாகரத்தை கிருஷ்ண கோபால் நன்கு அறிந்து வைத்திருந்ததால், அவரது உதவியுடன் பல ஆவணங்கள் ஸ்மிருதி இரானிக்கு கிடைத்ததாகக் கூறப்படுகிறது. முன்னதாக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைச் சமாளிக்கும் சக்தி கிடைக்க, சிவப்பு வண்ண குங்குமத்தை பெரிய அளவில் நெற்றிப்பொட்டில் வைத்திருக்க வேண்டும் என்று ஜோதிடர் ஒருவர் ஸ்மிருதி இரானிக்கு ஆலோசனை வழங்கினாராம். இதையடுத்து, சிவப்பு குங்குமத்துடன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஸ்மிருதி இரானி, அதன் பலனை உணர்ந்தவராய் தினமும் இப்போது பெரிய அளவில் குங்குமமிட்டு வலம் வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.