

மனத்தூய்மை மனிதனுக்கு மிகவும் அவசியம். அந்த மனத்தூய்மையை எப்படி அடைவது? மனத்தூய்மை அடைந்தால் தான் எதுவும் சாத்தியமாகும். இவருக்கு சுத்தமான மனசு என்பார்கள். கள்ளம் கபடு இல்லாத மனம் என்பார்கள். இவர் பொய் சொல்ல மாட்டார் என்பார்கள். ‘வாக்குல சுத்தம் வேணுங்க’ என்றும் சொல்வார்கள். இவை எல்லாமே மனிதனுடைய தூய்மையின் மனத்தைப் பற்றிப் பேசுவது தான்.
கொடுத்த வாக்கை காப்பாற்றுங்கள்
கொடுத்த வாக்கை இவர் காப்பாற்றுவார் என்று சொல்வார்கள். யாரெல்லாம் மனத்தூய்மையோடு வாழ்கிறார்களோ, அவர் எல்லோரும் நல்ல மனிதரென்றே சொல்வார்கள். ஆனால் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் யாரும் தன்னை தானே பரிசுத்தமானவர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியாது.
நான் பரிசுத்தமானவன் என்று யாரும் சொல்லவேண்டாம்
இறைவன் மட்டுமே பரிசுத்தமானவன். அவன் மட்டுமே தூய்மையானவன். இந்த உலகத்தையே படைத்த, இந்த மனிதர்களை படைத்த, அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அந்த ஒரே இறைவன் தான், அவன் தான் தூய்மையானவன். உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்கள் மீதும், அனைத்து பொருட்கள் மீதும் ஆற்றல் பெற்றவன். அதாவது அவற்றின் மீது ஆட்சி அதிகாரம் படைத்த அவனே தூய்மையானவன். இறைவன் தன்னை நாடியவர்களை தூய்மைப்படுத்துகிறான். எனவே நாம் இறைவனுடைய பொருத்தத்திற்கு உரியவர்களாக வாழ்வோம். எவர் அடக்கமும், பணிவும் உள்ளவர்களாக வாழ்ந்து இறைவனுக்கே முற்றிலும் அடிபணிந்து வாழ்கிறார்களோ, அவர்களை இறைவன் தூய்மையாக்குகிறான். அவர்களுடைய மனத்தையும்,உடலையும் தூய்மையாக்குகிறான்.
குழந்தைக்கு தூய்மையான தாய்ப்பாலை அருளியவன்
தாயின் கர்ப்பத்தில் பத்து மாதங்கள் யாருடைய கையும் படாமல், யாருடைய உதவியும் தேவைப்படாமலும் எந்த மருந்து மாத்திரை இல்லாமலும், வளரும் போது, அந்த குழந்தை தூய்மையாகிறது.
குழந்தை பிறந்த பிறகு, அந்த குழந்தைக்கு தூய்மையான தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. இறைவன் தாய்ப்பாலை அந்த குழந்தை பிறந்த 2 வருடங்களுக்கு நிரப்பமாக கொடுக்கிறான். தாய்ப்பாலுக்குப் பதிலாக புட்டிப் பால் கொடுக்கப்படும்போது அந்த தூய்மை கெட்டு விடுகிறது. அந்த தூய்மையான பாலை குடித்து வளரும் குழந்தைகள் ஞானமுள்ள குழந்தைகளாக வளருகிறார்கள். பெற்றோர்கள் இறை பிரார்த்தனையோடு இருந்தார்கள். ஆனால் அந்த குழந்தைகள் நோயினால் பீடிக்கப்படாமல் ஆரோக்கியமான குழந்தைகளாக வளர்க்கப்படுகிறார்கள். எப்போது குழந்தைக்கு மருந்து, மாத்திரை, கொடுக்கிறார்களோ, அப்போதே நோய்கள் படிப்படியாக ஆரம்பிக்கின்றன. 20-25 வயதில் கண் நோய்களும், மூளை நோய்களும், சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு, இவைகள் எல்லாமே சிறு வயதிலேயே கொடுக்கின்ற மருந்துகளின் காரணமாக உருவாகின்றன.
மருந்துகள் மனிதனை அசுத்தப்படுத்துகின்றன
ஆங்கில மருந்துகளான குரோசின் என்ற பாட்டில் மருந்துகள், ப்ருஃபைன் எனப்படும் பாட்டில் மருந்துகள் பிற்காலத்தில் ஆஸ்துமா நோயாக உருவாவதற்கு இவைகளே காரணமாகின்றன.
குழந்தைக்கு ஜூரம் வரும்போது ‘குரோசின்’ பாட்டில் மருந்தை கொடுக்கிறோம். இது ஜூரத்தை குறைத்துவிடுகிறது. அதே நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதே எல்லாவிதமான ஆங்கில மருத்துவத்தில் சொல்கிறார்களே ‘ஆட்டோ இம்யூன்’ கோளாறு, அதற்கு இதுதான் காரணம்.
எந்த நோயும் ஆங்கில மருந்தில் குணமாகாது
இந்த ஆட்டோ இம்யூன் கோளாறு என்று சொல்கிறார்களே அதைப் பற்றி இங்கு விரிவாகப் பார்ப்போம்.
ஆட்டோ இம்யூன் வியாதி என்றாலே அது குணமாகாது என்று அர்த்தம். எந்த மாத்திரை கொடுத்தாலும் நோய் குணமாகாது. ஜூரம் என்ற நோய் வரும்போது அதற்கு நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உண்டாகிறது. அந்த நோய் எதிர்ப்பு சக்தி நம் உடம்பை பாதுகாப்பதற்கு பதிலாக உடலை அழிக்க ஆரம்பிக்கிறது. எப்போது நாம் ஜூரம் வரும்போது அல்லது பேதி ஆகும் போது அல்லது சளி, இருமல் வரும் போது நாம் மாத்திரை சாப்பிடுவோமானால் உதாரணத்திற்கு குரோசின் மாத்திரைப்போட்டு ஜூரத்தை குறைக்கும் போது நாம் நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதை தடுத்து விடுகிறோம். திரும்ப, திரும்ப மாத்திரைகள் கொடுத்து நாம் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் போது நமது உடலை, பாதுகாக்கும் திறன் குறைந்து விடுகிறது. இதனுடைய விளைவாகத்தான் நமது உடல் பாதுகாப்பின்றி அழிய ஆரம்பிக்கின்றது. நம் உடலைப் பாதுகாக்க வேண்டிய இம்யூன் அமைப்பானது பாதுகாக்கத் தவறி அந்த இம்யூன் அணுக்களின் குணம் மாறி நமக்குத் தீங்கு செய்ய ஆரம்பிக்கிறது. இந்த இம்யூன் அமைப்பினுடைய செயல்பாட்டை மாற்றியது. இந்த அமைப்புகள் தான். இந்த பாதிக்கப்பட்ட இம்யூன் அமைப்பானது. கணையம் என்ற உறுப்பை பாதித்து சர்க்கரை நோயையும், தைராய்டு என்ற நோயையும் கால், கை மூட்டில் உள்ள தசை நார்கள், எலும்புகள், அதைச் சுற்றியுள்ள சவ்வு எல்லாமே அந்த பாதிக்கப்பட்ட இம்யூன் அணுக்களால் அழிந்து போக ஆரம்பிக்கின்றன. அதன் காரணமாக கை விரல்களில் வீக்கம், கெட்ட நீர் சுரக்கிறது கால் மூட்டுகளிலும் கெட்ட நீர் சுரக்கிறது. வலி ஏற்படுகிறது அந்த மூட்டுகள் வெந்து புண்ணாகிறது
தொடர்புக்கு- டாக்டர் கனகசபாபதி: 9840910033
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.