31. பெண்களின் பாலியல் நலப் பிரச்னைகளுக்கு இனிய தீர்வுகள்!
பாரம்பரிய மற்றும் பண்பாட்டின் பெயராலும், ஆன்மிக, பிற்போக்கு சிந்தனைகளாலும்


பாரம்பரிய மற்றும் பண்பாட்டின் பெயராலும், ஆன்மிக, பிற்போக்கு சிந்தனைகளாலும் காலம் காலமாக பெண்கள் ஒடுக்கப்பட்டு வந்துள்ளனர். பெண்களின் சமுதாய, பொருளாதார, வாழ்வியல் உரிமைகள் பல்வேறு காரணங்களால் மறுக்கப்பட்டுள்ளன. இதனால் பெண்களின் செக்ஸ் வாழ்க்கை நரகத்தை விடக் கொடுமையானதாக அமைந்திருந்தது. கற்பு, அறநெறி, மனை தர்மம், இல்லறம் என்று பல சுமைகளும் பெண்ணினம் மீது சுமத்தப்பட்டு செக்ஸைப் பற்றி பெண்கள் பேசுவதே தவறு என்று கருதப்பட்டது.
காலத்தின் ஆற்றல் வலிமையானது. சமுதாயத்தின் வடிவமும் உள்ளடக்கமும் விதவிதமான மாறுதல்களுக்கு உள்ளாகியுள்ளன. இன்று பெண் கல்வியும், பெண் உரிமைகளும் உரக்கப் பேசப்படுகின்றன. ஆனால் பெண்களின் பாலியல் நலப் பிரச்னைகளை பெண் சமூகம் சரியாகப் புரிந்து கொள்ளவோ, விவாதிக்கவோ, விடை காணவோ குறிப்பிடத்தக்க அளவு முன் வரவில்லை. ஆங்கில மருத்துவமனாலும் மாற்றுமருத்துவ முறைகள் என்றாலும் ஆண்களின் செக்ஸ் நலப் பிரச்னைகளைக் கவனிக்கும் அளவுக்கு பெண்களின் செக்ஸ் நலப் பிரச்னைகளைக் கவனிக்கவில்லை.
இனிய இல்லற வாழ்விற்கு பாலியல் அறிவு அடிப்படையானது. உளவியல் நிபுணர் சிக்மண்ட் ஃபிராய்டு மனித வாழ்வை இயங்கச் செய்வதும் இயக்கி வைப்பதும் லிபிடோ எனும் பாலின்ப வேட்கையே என்று சுட்டிக் காட்டுகிறார். இந்த (லிபிடோ) அடிப்படை உணர்வு பெண்ணுக்கு ஏற்படாமல் போனால், பாலியல் விருப்பமே இல்லாமல் போனால் அல்லது மிக மிக குறைவான விருப்பம் மட்டுமே இருக்குமானால் அதனை Hypoactive Sexual Disorder’ என்றழைக்கின்றனர்.
இதே போல பாலியல் ஆர்வமின்மை என்பதைக் கடந்து பெண்களிடம் செக்ஸ் மீதான வெறுப்புணர்ச்சி மனதில் ஏற்பட்டிருக்குமானால் அதற்கு Sexual Aversion Disorder என்று பெயர். லிபிடோ குறைபாடும், வெறுப்புணர்ச்சியும் அமைந்திருக்கும் பெண்ணின் மணவாழ்க்கை மயான வாழ்க்கையே. தாம்பத்தியம் எனும் இனிய சங்கீதம் இசைக்க முடியாது. சூறாவளியும், சுனாமியும் புகுந்த அலங்கோலமான வீடாக மாறும்.
சில பெண்களுக்கு மனத்தில் பாலுணர்வுச் சிந்தனைகளும் விருப்பமும் நிறைந்திருக்கும். ஆனால் உடலில் உரிய ரசாயன மாற்றங்கள் நிகழாது. ஆண்களிடம் காணப்படும் Erectyle Disorder எனப்படும் விறைப்பு பிரச்னைகள் போல பெண்களிடம் இனப்பெருக்க உறுப்பில் உறவுக்கு முந்திய கிளர்ச்சி நிலை, சுரப்பு நீர் (Lubricating fluid) தோன்றாமல் பிரச்னைகள் ஏற்படும். சில பெண்களுக்கு பிறப்புறுப்பு தசைகள் இறுக்கமடைந்து விட்டுவிட்டு வலி ஏற்படும். இதனை Vaginismus என்பார்கள். இவைகளால் உடலுறவு என்ற இனிய அனுபவத்திற்கு மாறாக கடுமையான வேதனையை அனுபவிக்க நேரிடும்.
சில பெண்கள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் குறைபாடு ஏதுமின்றி நலமாக இருந்தாலும் கணவரிடம் காணப்படும் விறைப்பின்மை இயலாமை, விரைவில் விந்து வெளியேறும் பலவீனம் (Weak Erection, Premature Ejaculation) காரணமாக முழு சுகத்தை ORGASM எனப்படும் இறுதி இன்ப நிலையை அடையமுடியாமல் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில் கணவர் உரிய ஆலோசனைகளும், மாற்றுமருத்துவ சிகிச்சைகளும் பெற்று இயல்பு நிலைக்கு திரும்பினால் வாழ்க்கை முழுதும் சந்தோஷம் நிறைந்திருக்கும்.
கல்வியும், விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளரும்போது உலகம் உள்ளங்கைக்குள் அடங்கி விடுகிறது. இதில் நன்மைகளும், தீமைகளும் கலந்தே இருக்கின்றன. அதீதமான கட்டுப்பாடுகளை மட்டுமே அனுபவித்த இந்தியப் பெண்ணினம் மேற்கத்திய சுதந்திரமான பெண் வாழ்க்கையை நெருக்கமாய் பார்க்கும் வாய்ப்பு இன்று ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாகவும், இதர காலச்சார சீர்கேடுகளாலும் சில பல பெண்களின் செக்ஸ் வாழ்க்கை தவறான பாதாஇகளிலும் செல்கிறது. ஓரினச் சேர்க்கை (Lesbeanism), சுய இன்ப அடிமைத்தனம் (Masturbation Addiction) போன்றவை அதிகரித்து வருகிறது. இவை பெண்களின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கக் கூடியவை. இத்தகைய பெண்களுக்கு உரிய ஆலோசனை, வழிகாட்டுதல், சிகிச்சை வழங்கினால் அவர்களால் நிச்சயம் இப்பிரச்னைகளிலிருந்து மீள முடியும்.

பெண்களின் பாலியல் நலப் பிரச்னைகளை ஹோமியோபதி, மலர் மருத்துவம், அக்குபஞ்சர் போன்ற இயற்கை முறைச் சிகிச்சைகளில் பக்க விளைவுகளின்றி தீர்த்துக் கொள்ள முடியும். பாதிக்கபட்ட பெண்ணின் உளவியல் ரீதியான, உடல்ரீதியான தனித்தன்மைகளையும், மொத்த அறிகுறிகளையும் ஆய்வு செய்து சிகிச்சை பெறுவதால் எத்தகைய பாலியல் சிக்கல்களுக்கும் எளிய முறையில் தீர்வுகள் கிடைக்கின்றன.
சமீப ஆண்டுகளில் முடிந்த கோர்ட்டு தீர்ப்புகளில் மிக அதிக சதவிகிதம் செக்ஸ் பிரச்னைகளைக் காரணம் காட்டித்தான் விவாகரத்து சட்டபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக செக்ஸ் உணர்வு சிலருக்கு மிகக் குறைவாகவும், செக்ஸ் உணர்வே இல்லாத நிலையும் இருக்கும். சிலருக்கு மிக அதிகமாக இருக்கும். ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ள நிலையில் Satyriasis என்று மருத்துவ உலகில் கூறப்படும். பெண்ணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இருப்பது Nymphomania என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய அதீத உணர்வு போக்கினால் தான் பால்வினை நோய்களும் HIV போன்றவை தலைவிரித்தாடுகிறது.
ஹோமியோபதி எனும் பிரம்மாண்டமான மருத்துவ சமுத்திரத்தில் ஆண், பெண் பாலியல் நலப் பிரச்னைகளைத் தீர்த்து நலம் அளிக்கக்கூடிய மருந்துகள் மட்டும் 200-க்கும் மேல் உள்ளன. 38-வித மலர் மருந்துகளில் உள்ளன.
பெண்களின் பாலியல் நலப் பிரச்னைகள் மனரீதியாக அல்லது உடல்ரீதியாக எந்த விதத்தில் இருந்தாலும் இம்மருந்துகள் மூலம் குணமாக்க முடியும். ஆயிரக்கணக்கான பெண்களின் கண்ணீரைத் துடைத்து இன்பமயமான வாழ்க்கைக்கு உதவக்கூடிய ஹோமியோ மருந்துகளில் சிலவற்றைப் பார்ப்போம்.
Sex arousal disorder
பெண்ணுக்கு பாலுணர்வு குறைவாக இருத்தல்
Graphites 1m, Thyroidinum 1m, Sepia 200, Muriatic acid 200, Ignatia 1m, Alumina 200, Kreosote 200, Nat.mur 200, Kaliphos 200, Damiana Q.
பெண்ணுக்கு பாலுணர்வு அதிகமாயிருத்தல் (Nymphomania)
Platinum – 1m, Nat.Mur.200, Kalicarb – am, LiLium Tig 30, Med.200.
Dyspareunia (உறவு நேர வலி)
Platina 200, Lilium Tig 200, Oophorinum-6x, Thyrodinum 6x, Alumina 30, Borax 30, Kreosote 30.
மேற்கூறிய மருந்துகள் அனைத்தும் பெண்ணின் பாலியல் நல குறைபாடு அறிகுறியின் தன்மைக்கேற்பவும், மனநிலையை கருத்தில் கொண்டும் முழுவதும் ஆய்ந்து அறிந்து மருந்துகளை தேர்வு செய்து கொடுத்தால் பெண்களின் பலவித பாலியல் நலப் பிரச்னைகளுக்கும் நிரந்தர குணம் கிடைக்கும்.
Dr.S. வெங்கடாசலம்
மாற்றுமருத்துவ நிபுணர்
சாத்தூர்,
செல் – 94431 45700
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...