
இந்தப் படத்தை நான்தான் எடுத்தேன். அன்று எனக்கு சரியான தலைவலி. சிறு வயதிலிருந்து எனக்குத் தலைவலி வந்ததே இல்லை. வீட்டில் உள்ளவர்கள் டாக்டரை அழைத்தார்கள்.
டாக்டர் வந்ததும், அம்மா அதைப் பார்த்து 'என்னப்பா டாக்டர் எல்லாம் வராங்கன்னு என்னிடம் கேட்டார்கள்.' 'இல்லையம்மா இது சாதாரண தலைவலிதான். வேற ஒண்ணுமில்லை' என்றேன்.
'நான் உயிரோடு இருக்கறப்ப டாக்டர் எல்லாம் வந்து உன்னைப் பார்க்கணுமா?' என்று கூறிய அம்மாவின் கண்களில் கண்ணீர்த் துளிகள். இந்தப் படத்தைப் பார்த்தால் அது தெரியும்.. அப்படியே அம்மாவை உட்கார வைத்து இந்த ஃபோட்டாவை எடுத்தேன்!
-இளையராஜா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.