4. உடல் எனும் ஞானி
நாம் எந்த அலோபதி மாத்திரையை விழுங்கினாலும், அதை நம் உயிரணுக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. சந்தேகத்தின் பேரில், அதை சோதனைச்சாலைக்கு அனுப்பிவிடும். அந்தச் சோதனைச்சாலையின் பெயர் லிவர். ஆம், நாம் விழுங்கும் எல்லா மாத்திரைகளும் கல்லீரலுக்குத்தான் முதலில் அனுப்பப்படும்.அம்மாத்திரைகளில் உள்ள விஷப்பொருள்களில் 90 சதவீதத்தை கல்லீரல் அழித்துவிடும். மிஞ்சும் கொஞ்சூண்டு விஷத்தன்மையுடன், அம்மாத்திரை லிவரிலிருந்து ’ரிலீஸ்’ ஆகி உடலில் கலக்கும்.















