ஆசனம் 25. உத்தன் பாதாசனம்
கலைச்செல்விக்குத் திருமணமானபோது, இவளுக்குப்போய் இப்படி ஒரு இடமா என்று சொந்தபந்தங்கள் வாய் பிளந்தன. ஊரே அன்னார்ந்து பார்த்தது.

அஷ்டாங்க யோகம்
இயமம்

பொறுத்தார் பூமி ஆள்வார்
கலைச்செல்விக்குத் திருமணமானபோது, இவளுக்குப்போய் இப்படி ஒரு இடமா என்று சொந்தபந்தங்கள் வாய் பிளந்தன. ஊரே அன்னார்ந்து பார்த்தது.
மாமியார் இல்லாத வீடு என்பதால், மகள் நிம்மதியாக இருப்பாள் என்று கொடுத்துவிட்டார்கள்.
திருமணமான ஒரே மாதத்தில் கலைச்செல்வி கருவுற்றாள். அடுத்த சில நாட்களில், சுமதி என்ற பெண் திடீரென்று வீட்டுக்குள் நடமாட ஆரம்பித்தாள். வீட்டில் பெரிய மனுஷி இல்லாத காரணத்தால், கலைச்செல்விக்குத் துணையாக இருக்கட்டுமே என்று வரச் சொன்னோம் என்றார் மாமனார் ராஜ்கண்ணு.
சுமதி வழக்கத்தைவிட சின்ன ஜாக்கெட் போட்டுக்கொண்டு வந்திருந்தாள். அடிவயிறு தெரியச் சேலை கட்டியிருந்தாள்.
ஜாக்கெட் பத்தாமப் போச்சா? என்றாள் கலைச்செல்வி.
குளியலறையிலிருந்து வெளிப்பட்ட கனகராஜ், என்ன சுமதிக்குத் திடீர்னு வெட்கம் வந்துடுச்சு? என்றான்.
சிரித்துக்கொண்டே, கால்விரலால் தரையில் கோலம் போட்ட சுமதி, செல்வி அக்கா ரொம்ப வெகுளியா இருக்காங்கண்ணா. உங்களுக்குத் தோதாத்தான் புடிச்சிட்டு வந்திருக்கீங்க என்றாள்.
பின்னே, உனக்குத் தோதாவா பண்ணிட்டு வரச்சொல்றே? என்றபடி தலையைத் துவட்டினான்.
அக்கா எனக்கு எப்படிண்ணா தோதாக முடியும். உனக்குத்தான் தோது! என்றாள் சுமதி.
கலைச்செல்விக்கு அதிர்ச்சி.
சுமதியும் தன் கணவனும் பேசிக்கொள்ளும் விதம் சரியில்லை என்று கலைச்செல்வியின் மனது சொன்னது. இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது.
இத பாரு கலைச்செல்வி. அம்மா இல்லாததால, உனக்கு ஒத்தாசையா சுமதிய அப்பாதான் வரச் சொல்லியிருக்காரு. சுமதி எங்க ஃபேமிலி ஃப்ரெண்டு. உனக்கு எது வேணும்னாலும் அவகிட்ட கேளு. நல்லா ரெஸ்ட் எடு என்று சொல்லிவிட்டு, இரவு டிபன் என்னவென்று சுமதியிடம் கேட்டான் கனகராஜ்.
நான் டிபன் பண்ணித் தரேன். அவகிட்ட எதுக்கு கேக்கறீங்க.
பாருண்ணா, அவ இவன்னு அக்கா மரியாதை இல்லாம பேசுது என்று கண்களைக் கசக்கினாள் சுமதி.
கலைச்செல்வி சற்றும் எதிர்பார்க்கவில்லை. கனகராஜ் வந்த வேகத்தில் அவள் கன்னத்தில் பளார் என்று ஓங்கி ஒரு அறை விட்டான்.
பாரு கலைச்செல்வி. ஹைசொசைட்டில நாலும் இருக்கும். நீ எதையும் கண்டுக்கக்கூடாது. அவளை அட்ஜஸ்ட் பண்ணிட்டுத்தான் இருக்கணும். அவ உனக்கு மட்டும் ஒத்தாசைக்கு வரலை. எங்களுக்கும்தான்… என்று அழுத்திச் சொல்லிவிட்டு வெளியேறினான் கனகராஜ்.
அந்த அதிர்ச்சியில் இருந்து கலைச்செல்வி மீளவில்லை.
சுமதி முந்தானையை இழுத்து மூடிக்கொண்டு, கடைக்கு போய்ட்டு வரேங்க்கா என்று சொல்லிவிட்டு, பதிலுக்குக் காத்திராமல் வெளியேறினாள்.
அவள் போனதுமே, வீட்டுக்குள் நுழைந்தார் மாமனார் ராஜ்கண்ணு.
சுமதியைப் பற்றி அவரிடம் சொல்ல முயன்ற கலைச்செல்வியை தடுத்த அவர், நீ என்ன சொல்லவர்றேன்னு தெரியும். உனக்கு ஒத்தாசையா இருக்கத்தான் சுமதியை வரச்சொன்னோம் என்றார்.
எனக்கு எதுக்கு ஒத்தாசை மாமா? ஒரு கஷ்டமும் இல்லை. எல்லா வேலையும் நானே பாத்துக்குவேன். அவ வேணாம். அதுவும் இல்லாம, உங்க புள்ளைகிட்ட அவ பேசறதே சரியில்ல மாமா என்று சொல்லி முடிப்பதற்குள்,
அடிக்க ஓங்கிய கையை மாமனார் ஏதோ நினைப்பில் கீழே போட்டு, ஏய், பெரிய இடத்துச் சமாசாரம். உனக்கு தெரிய வேணாம். சுமதி உனக்கு ஒத்தாசையா இருக்க வேணான்னா விட்டுடு. என் மகனுக்கு ஒத்தாசையா இருந்துட்டு போகட்டும். அவனுக்கு இப்பதான் கல்யாணம் ஆகியிருக்கு. இவ்ளோ சீக்கிரம் நீ உண்டாயிட்ட. அப்பறம் அவன் என்ன பண்ணுவான். ஒரு வருஷம் வரைக்கும் ‘பட்டினி’ கெடக்கனுமா. அதனால நீ எதையும் கண்டுக்காம, புள்ளைய ஒழுங்கா பெத்துக் குடுக்கற வழிய மட்டும் பாரு.
விழிகளை உருட்டியபடி ராஜ்கண்ணு சொன்னதைக் கேட்டு, சிங்கத்தின் கூண்டுக்குள் சிக்கிவிட்டோமோ என்று கலைச்செல்வி உடல் நடுங்கியது.
ராஜ்கண்ணு வெளியே போனதும், கறிகாய்களோடு வீட்டுக்குள் வந்தாள் சுமதி. கூடையில் இருந்த முருங்கைக்காயைப் பார்த்து, எதுக்கு இந்தக் காயை வாங்கிட்டு வந்த சுமதி. ராத்திரி சப்பாத்திக்கு கூட்டுதானே வெக்கணும் என்றாள் கலைச்செல்வி.
சோம்பும் தேங்காயும் அரைச்சு ஊத்தி முருங்கைக்கா தொக்கு பண்ணா சப்பாத்திக்கு சூப்பரா இருக்குங்க்கா. உங்களுக்குத் தெரியாதா? கல்யாணம் ஆன புதுப்பொண்ணு நீங்க. இந்த நேரத்துல அண்ணனுக்கு இதெல்லாம் சமைச்சிப் போடனும்.
சுமதி அக்கறையோடு சொல்வதை, கலைச்செல்வி அதிர்ச்சியோடு பார்த்தாள்.
இரவு, வீடு திரும்பிய கனகராஜும் ராஜ்கண்ணுவும், சப்பாத்தியையும் முருங்கைக்காய் கறியையும் சப்புக்கொட்டி சாப்பிட்டு வந்து ஹாலில் உட்கார்ந்தார்கள்.
பெட்ரூமுக்கு போன கனகராஜை தொடர்ந்து கலைச்செல்வியும் போனாள். அதைப் பார்த்து ராஜ்கண்ணு கைதட்டி அழைத்தார்.
செல்வி, நீ கர்ப்பமா இருக்கே. இந்தச் சமயத்துல நீ தனியாத்தான் படுத்துக்கனும். அவனோ முரட்டுப் பய. எசகுபிசகா எதாவது ஆயிடுச்சின்னா கஷ்டம். அதனால, நீ அந்த பெட்ரூம்ல போய் படுத்துக்கோ. உன்கூட சுமதிய படுக்கவெச்சிக்க என்றார்.
சோதனையிலும், சுமதியின் கைவிரல்களை ஆறுதலாகப் பிடித்துக்கொண்டாள் கலைச்செல்வி. இரவெல்லாம் படுக்கையில் உறக்கமின்றிப் புரண்டாள்.
ஏங்க்கா தூக்கம் வரலியா. ஓர அண்ணனோட படுத்துக்க முடியலியேன்னு வருத்தமா இருக்கா. ம்ஹும், என்ன பண்றது. வயித்துல இருக்கற புள்ளய பார்க்கணுமே என்று ஆறுதல் சொன்னாள்.
பேசிக்கொண்டே தூங்கிப்போனாள் கலைச்செல்வி. அதிகாலை மூன்று மணிக்கு கண் விழித்த கலைச்செல்வி, அருகில் படுத்திருந்த சுமதியைக் காணாமல் அதிர்ச்சியுற்றாள். விளக்கைப் போட்டுத் தேடினாள்.
எங்கும் காணவில்லை. கதவைத் திறக்க முயன்றாள். முடியவில்லை. வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. சுமதி சுமதி என்று கத்தினாள்.
திடீரென்று, கதவைத் திறந்துகொண்டு சுமதி உள்ளே வந்தாள். தலைமுடி கலைந்து, ஆடையும் அலங்கோலமாக இருந்தாள். அவளை அதிர்ச்சியோடு பார்த்தாள் கலைச்செல்வி.
எதிரில் இருந்த கனகராஜின் படுக்கை அறைக் கதவு திறந்திருந்தது. முறைத்தவாறு எட்டிப் பார்த்தான். அவன் முகமெல்லாம் வியர்த்திருந்தது.
அவனுக்கு எப்போதெல்லாம் அப்படி வியர்க்கும் என்பது கலைச்செல்விக்கு மட்டும்தான் தெரியும்.
உள்ள காத்து இல்லக்கா. அதான் ரூமுக்கு வெளியில படுத்திருந்தேன், அசடு வழிந்தாள் சுமதி.
சரி, எதுக்கு கதவை வெளிய பூட்டின.
மாமாதான் பூட்டிக்கச் சொன்னாரு. அண்ணன் திடீர்னு உள்ள வந்துட்டாருன்னா. அதான் என்று சமாளித்தாள்
கலைச்செல்வி ஏதோ கேட்க வாயைத் திறக்க, எரிச்சலுடன் இருந்த கனகராஜ் அங்கு வந்து, ஏய் வாய மூடிக்கிட்டு உள்ள போய் படுடி. நேரம் கெட்ட நேரத்துல கேள்வி கேட்டுக்கிட்டு என்று கத்தினான்.
கலைச்செல்வியின் பின்னாலேயே வந்து கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டு ஒரு மூலையில் போய் உட்கார்ந்துகொண்டாள் சுமதி.
கலைச்செல்விக்கு ஏதோ நெருடலாக இருந்தது. எல்லாரும் நாடகம் ஆடுகிறார்கள் என்று உணர்ந்த கலைச்செல்வி, காலையில் எழுந்ததுமே மாமனாரிடம் போய் முறையிட்டாள்.
பாரும்மா. நீயோ இல்லாத வீட்டுப் பொண்ணு. எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாம உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்கோம். நாங்க பரம்பரைப் பணக்காரங்க. இங்கு உனக்கு ஒரு குறையும் இல்லை. எதையும் கண்டுக்காம இருந்தா, மகாராணியாட்டமா இருக்கலாம். எங்க பேச்சை மீறி இங்க நடக்கறதை வெளியில மூச்சுவிட்ட… அப்பறம் நீ உசுரோடவே இருக்க முடியாது. ஜாக்கிரதை என்று சொல்லிவிட்டார்.
அன்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது, துணி துவைத்துக்கொண்டிருந்த வேலைக்கார ஆயாவிடம் சொல்லிக் கண்ணீர் வடித்தாள் கலைச்செல்வி.
அந்த ஆயா, தன் இடுப்பிலிருந்த ஒரு சிறிய புத்தகத்தை கலைச்செல்வியிடம் நீட்டி,
கந்த சஷ்டி கவசம் புத்தகம்மா. தெனமும் முப்பத்தாறு தடவை இதைப் படி. அந்த முருகன் உனக்கு துணையா இருப்பான். முருகனை நெனச்சி விபூதி பூசிக்கோ. போகப்போக எல்லாம் சரியாகும் என்றாள்.
வேலைக்கார ஆயா போனதும், அவள் சொன்னதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு தினமும் கந்த சஷ்டி கவசம் படித்தாள் கலைச்செல்வி
அவளுக்குக் குழந்தை பிறந்து வளர்ந்தான். கந்தன் என்று பெயரிட்டு, அவனை முருகனாகவே கருதி வளர்த்தாள் கலைச்செல்வி.
மூன்று ஆண்டுகள் கடந்தன.
ராஜ்கண்ணுவின் வியாபாரம் திடீரென்று படுத்துக்கொண்டது. அந்த அதிர்ச்சியில் இந்த உலகத்தை விட்டே போய்விட்டார்.
கனகராஜ், அப்பாவின் இழப்பை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இறுதிச் சடங்குக்கு வந்திருந்த குடும்ப டாக்டர், கனகராஜை தேற்றி, உங்க குடும்பத்துக்கே இதய நோய் இருக்கு. கவலைய விட்டு, அடுத்து ஆக வேண்டிய காரியத்தை பாருங்க என்று அறிவுரை சொன்னார்.
சுடுகாட்டில் இருந்து திரும்பிய கனகராஜ், கால்களைக் கழுவிக்கொண்டு நேராக ஓடிச் சென்று கலைச்செல்வியின் கால்களில் விழுந்தான். என்னை மன்னிச்சிடு செல்வி. இனிமே எனக்கு நீதான் துணை என்றான்.
ஐயோ என்ன காரியம் பண்றீங்க என்று பதறினாள் கலைச்செல்வி. அவன் தலைமுடியைக் கோதி ஆறுதல்படுத்தினாள்.
அவளது அரவணைப்பில் தெளிந்த கனகராஜ், சுமதி எங்கே என்று தேடினான்.
உன் அப்பா பொணத்தை சுடுகாட்டுக்குத் தூக்கினதுமே அவ கிளம்பிட்டா. இனி இங்க இருந்தா வேலைக்கு ஆகாதுன்னே சொல்லிட்டு, போயிட்டா. விட்டது சனியன். இனிமேலாவது ஒழுங்கா குடும்பத்த பாருப்பா. உன் மகன்தான் உனக்கு முருகன் என்றாள் வேலைக்கார ஆயா.
கலைச்செல்வியையும் மகன் முருகனையும் அணைத்துக்கொண்டு கண்ணீர் சிந்தினான் கனகராஜ்.
இயமம் என்பது பொறுமை. பொறுத்தார் பூமி ஆள்வார்.

பெயர்க் காரணம்
உத்தன் என்றால் மேலே என்று பொருள். அதாவது, கால்களை மேலே உயரமாகத் தூக்கிச் செய்யும் ஆசனம் என்பதால், இதற்கு உத்தன் பாதாசனம் என்று பெயர்.
செய்முறை
விரிப்பின் மீது மல்லார்ந்து படுத்துக்கொள்ளவும்.
பின்னர் இரண்டு கால்களையும் மேலே உயரமாகத் தூக்கி நிறுத்தவும். ஆழ்ந்த சுவாசங்கள் எடுக்கவும்.
பின்னர் கால்கள் இரண்டையும் சேர்த்தாற்போல் நீட்டி, கீழே வைத்துவிடவும்.
சற்றே இளைப்பாறிவிட்டு மீண்டும் செய்யவும்.

பலன்கள்

கால்கள் இரண்டும் மேல்நோக்கி இருப்பதால் உடலுக்கு நல்ல ரத்தஓட்டம் கிடைக்கிறது.

இதயத்துக்கு ரத்தம் நன்கு பாய்வதால் இதயத் துடிப்பு தூண்டப்படுகிறது.

ரத்தக்குழாய்களில் அடைப்பு இருந்தால் அவை நீங்கும்.

மார்பகம் விரிவடைவதால், ஏராளமான காற்று உள்ளிழுக்கப்படுகிறது.

தலைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைப்பதால், முகத்துக்குப் பொலிவும், உடலுக்குப் புத்துணச்சியும் கிடைக்கிறது.

வீடியோ மாடல்: புஷ்பா, ஆசனா ஆண்டியப்பன் யோகா மையம்
புகைப்பட மாடல்: சிவகாமி இளமதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...