தேவையானவை:
அவல் - 1 கிண்ணம்
வெல்லம் - அரை கிண்ணம்
தண்ணீர் - ஒன்னே கால் டம்ளர்
தேங்காய் - கால் கிண்ணம் (துருவியது)
ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
செய்முறை: முதலில் அவலை மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியில் வெல்லத்தை தட்டிப் போட்டு, அரை கிண்ணம் தண்ணீர் ஊற்றி, வெல்லம் முற்றிலும் உருகியதும் இறக்கி, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
பின்பு மீண்டும் அந்த வெல்லப் பாகுவை வாணலியில் ஊற்றி, மீதமுள்ள நீரை சேர்த்து கொதிக்க விட வேண்டும். கலவை கொதிக்க ஆரம்பித்ததும், அதில் தேங்காய், ஏலக்காய் பொடி மற்றும் நெய் சேர்த்து கிளறி, மெதுவாக பொடித்த அவலையும் சேர்த்து, கலவை ஓரளவு கெட்டியாகும் வரை கிளறி இறக்கி குளிர்ந்ததும், அதனை சிறு கொழுக்கட்டைகளாக பிடித்து, இட்லி தட்டில் வைக்க வேண்டும். பின் இட்லி பாத்திரத்தில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், அவல் கொழுக்கட்டை ரெடி.
- தவநிதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சா் பி. மூா்த்தி

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்
மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா

தில்லியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் சம்பவங்கள் குறைவு: போக்குவரத்துத் துறை அமைச்சா் தகவல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


