ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பாசிப்பருப்பு நெய் உருண்டை

பாசிப் பருப்பை வாணலியில் லேசாக வறுக்கவேண்டும். வாசனை வரும் வரை வறுத்தால் போதுமானது.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2016, 6:52 am


தேவையானவை:
பாசிப் பருப்பு - 2 கிண்ணம்
சர்க்கரை - 2 கிண்ணம்
நெய் -  200 கிராம்
ஏலக்காய் - 6
முந்திரி உடைத்தது - 50 கிராம்

செய்முறை:  பாசிப் பருப்பை வாணலியில் லேசாக வறுக்கவேண்டும். வாசனை வரும் வரை வறுத்தால் போதுமானது.

வறுத்த பருப்பை மிக்சியில் அரைக்கவும். அதனை  சலித்து எடுத்து நைசான மாவை லட்டுக்கு வைத்துக் கொள்ளவும். அதேபோன்று சர்க்கரையையும் மிக்சியில் அரைத்து,  பாசிப் பருப்பு மாவுடன் சேர்த்து கலக்கவும்.  அதனுடன் ஏலக்காயைப் பொடித்து  சேர்க்கவும்.

முந்திரிப் பருப்பை சிறிது நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு  கலந்து  கொள்ளவும்.

பின்னர் வாணலியில் 200 கிராம் நெய்யை லேசாக உருக்கி அதை மாவில் ஊற்றவும்.  மாவை நன்கு கலந்து வெது வெதுப்பான சூட்டிலேயே கையால்  லட்டு பிடிக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.