ஈஸி குக்கர் பனானா கேக்

ஈஸி குக்கர் பனானா கேக்

குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு பாத்திரத்தின்
Published on

(முட்டை இல்லாதது)

தேவையானவை:
வாழைப்பழம்  (பெரியது ) - 2
சர்க்கரை - அரை கிண்ணம்
மைதா மாவு - 1 கிண்ணம்
சோடா மாவு - 1 சிட்டிகை
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
வெண்ணிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி
முந்திரி, அக்ருட், உலர் திராட்சை - அரை கிண்ணம்
வெண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

வாழைப்பழத்துடன் சர்க்கரையைச் சேர்த்து மசித்துக் கொள்ளவும். அத்துடன், உருக்கிய வெண்ணெய்யைச் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அவற்றுடன், மைதா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் இவற்றை சலித்து அதில் கொட்டி நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர்,  வாழைப்பழ கலவையுடன் பால் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும். கடைசியாக ட்ரை ப்ரூட்ஸ் சேர்த்து நன்கு  கலக்கவும். அல்லது பிளண்டர் உபயோகித்து கொள்ளலாம்.

 பின்னர்,   குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு பாத்திரத்தின் மேல் மற்றொரு பாத்திரத்தில் கேக் மாவை வைத்து 45 நிமிடம் மூடி, 3 விசில் வந்ததும் இறக்கிவிடவும். சுவையான முட்டையில்லா பனானா கேக் தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com