தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பட்டாணி மசாலா

முதலில் பச்சை பட்டாணியைக் குக்கரில் 3 விசில் விட்டு வேகவைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

News image
Updated On :12 ஜூலை 2016, 7:27 am

தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி - 1 கிண்ணம்

சீரகம் - அரை தேக்கரண்டி

இஞ்சிப் பூண்டு விழுது - 1

தேக்கரண்டி

வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

மல்லித் தூள் - அரைத் தேக்கரண்டி

கரம் மசாலா - அரைத் தேக்கரண்டி

கொத்துமல்லி - சிறிது

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

வெங்காயம் - 1 (நறுக்கியது)

தக்காளி - 3 (நறுக்கியது)

செய்முறை: முதலில் பச்சை பட்டாணியைக் குக்கரில் 3 விசில் விட்டு வேகவைத்து இறக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும். பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, அரைத்து வைத்துள்ள வெங்காயம் தக்காளி கலவையைச் சேர்த்து பச்சை வாசனைப் போக 3-4 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கிவிட்டு பிறகு, சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வதக்கி, வேக வைத்துள்ள பட்டாணியைச் சேர்த்து குறைவான தீயில் 5 நிமிடம் புரட்டி, கொத்துமல்லியைத் தூவி இறக்கினால், பட்டாணி மசாலா ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.