சாமை வெண்பொங்கல்

செய்முறை: நன்கு கழுவி சுத்தம் செய்த  சாமை அரிசியுடன் பாசிப்பருப்பு,  தண்ணீர், உப்பு சேர்த்து குழைய
சாமை வெண்பொங்கல்
Updated on
1 min read

தேவையானவை:

சாமைஅரிசி - 100 கிராம்

பாசிப்பருப்பு - 50 கிராம்

சீரகம் - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - 50 மில்லி

பெருங்காயத்தூள் - ஒரு தேக்கரண்டி

மிளகுத்தூள்  } தேவையானஅளவு (மிளகு 8-10)

உப்பு - தேவையானஅளவு

இஞ்சி - ஒருதுண்டு

தண்ணீர் - 450 மில்லி.

முந்திரி - 3  (பொடித்துக்கொள்ளவும்)

செய்முறை: நன்கு கழுவி சுத்தம் செய்த  சாமை அரிசியுடன் பாசிப்பருப்பு,  தண்ணீர், உப்பு சேர்த்து குழைய வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சீரகம், பொடியாய் நறுக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயத்தூள், மிளகுத்தூள், முந்திரி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, குழைய வேகவைத்த அரிசியுடன் இதைச்சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

குறிப்பு: கர்ப்பிணிப்பெண்களுக்கு மிகவும் அவசியமான நார்ச்சத்துக்கள் சாமையில் அதிகம் உள்ளன.

•••

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com