தேவையான பொருள்கள் :
மஷ்ரூம் - 100 கிராம்
பாஸ்மதி அரிசி - 1 கிண்ணம்
வெங்காயம் - 2
ப.மிளகாய் - 3
புதினா - 1 கைப்பிடி
கொத்துமல்லி - 1 கைப்பிடி
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை - தலா 2
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தயிர் - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
நெய் - 2 தேக்கரண்டி
செய்முறை : வெங்காயம், ப.மிளகாய், புதினா, கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும். அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளித்து அதனுடன் புதினா, கொத்துமல்லி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர், வெங்காயம், பச்சை மிளகாய், காளான் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் தயிர் சேர்த்து அதனுடன் ஊறவைத்துள்ள அரிசியை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பிறகு 1 1/2 கிண்ணம் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும். நன்கு கொதித்தவுடன் குக்கரை மூடி விசில் போட்டு 10 நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும். பின்பு 10 நிமிடம் கழித்து நன்கு கிளறி சிறிது நெய் சேர்த்து பரிமாறவும். சுவையான மஷ்ரூம் புலாவ் ரெடி.
***
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும்: ஓபிஎஸ்

பேருந்து சேவை இல்லாததால் பயணிகள் சாலை மறியல்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


