ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ரிப்பன் பக்கோடா

அதனுடன் காரப்பொடி, மிளகு தூள், வெண்ணெய் எல்லாவற்றையும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைய வேண்டும்.

News image
Updated On :7 நவம்பர் 2016, 6:30 pm

தேவையானவை:
கடலைமாவு - 2 கிண்ணம்
அரிசிமாவு  - 1 கிண்ணம்
காரப்பொடி - 1 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
வெண்ணைய் - கால் கிண்ணம்
உப்பு, எண்ணைய்  - தேவைகேற்ப

செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் கடலைமாவு, அரிசிமாவு இரண்டையும் சேர்த்து கலக்க வேண்டும்.

உப்பையும், பெருங்காயத்தையும் சிறிது தண்ணீரில் கரைத்து மாவில் விடவேண்டும்.

அதனுடன் காரப்பொடி, மிளகு தூள், வெண்ணெய் எல்லாவற்றையும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைய வேண்டும்.

பின்னர், வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த பின் முறுக்கு குழாய் அச்சில் நாடா வில்லையைப்போட்டு, சிறிது சிறிதாக மாவை அதில் சேர்த்து எண்ணெய்யில் பிழியவும்.

இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும். ரிப்பன் பக்கோடா ரெடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.