தேவையான பொருள்கள்:
(சிறுகீரை, அரைக் கீரை, மூளைக் கீரை, பாலக்கீரை)
ஏதாவது ஒரு கீரை - அரை கட்டு
உருளைக் கிழங்கு - 2
மைதா மாவு - 5 தேக்கரண்டி
மேரி கோல்ட் பிஸ்கட் தூள் - அரை கிண்ணம்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
செய்முறை:
கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
பின்னர், மசித்த உருளைக்கிழங்கு, கீரை, உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வடைமாவு போன்று பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
பின்பு, மைதா மாவில் சிறிது தண்ணீர்விட்டு கரைத்து கொள்ளவும். ஒரு தட்டில் பிஸ்கட் தூளை வைத்துக் கொள்ளவும்.
பின்னர், ஒவ்வொரு உருண்டையாக எடுத்து வடை போன்று தட்டையாக தட்டி, கரைத்து வைத்துள்ள மைதா மாவில் தோய்த்து, பிஸ்கட் தூளில் புரட்டிக் கொள்ளவும்.
பின்னர், தோசைக் கல்லில் எண்ணெய்விட்டு சுட்டு எடுக்கவும். சுவையான கீரைக் கட்லெட் தயார். கீரையைச் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் கீரை கட்லெட்டை விரும்பி உண்பர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

