நீட்-2026 மறுதேர்வு வினாக்கள் கசிந்தனவா? சைபர் கிரைம் விசாரணைக்கு என்டிஏ உத்தரவுதிமுக தோல்விக்கு யார் காரணம்? முன்னாள் அமைச்சர் மூர்த்தி வேதனை!எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் எல் நினோ! ஜூன் - ஆகஸ்ட் வரை வெய்யில்தான்!முதல்வர் விஜய் முன்னிலையில் 3 திட்டங்களுக்கு ஒப்பந்தம் கையொப்பம்!நீதித் துறையில் செய்யறிவு! வரைவு விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்! கல்விதான் ஒளிமயமாக்கும் சக்தி! முதல்வர் விஜய் வாழ்த்து!பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!
/

அல்லம் பச்சடி

News image
Updated On :18 ஏப்ரல் 2017, 12:00 am IST

தெலுங்கில் அல்லம் என்றால், இஞ்சி. பச்சடி என்றால் ஊறுகாய். 10 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். வயிற்றுக்கு மிகவும் நல்லது, இந்த அல்லம் பச்சடி.


தேவையான பொருட்கள்

தோல் சீவி பொடியாக நறுக்கின இஞ்சி - முக்கால் கிண்ணம்
வெல்லம் - முக்கால் கிண்ணம்
புளி பேஸ்ட் - ஒன்றரை மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
பூண்டு - 1 பல்
வறுத்த வெந்தயம் - 1 தேக்கரண்டி
தாளிக்க:
நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு  - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2, கிள்ளியது
உப்பு - ருசிக்கேற்ப

செய்முறை:
இஞ்சி, பூண்டு, உப்பு, புளி பேஸ்ட், மிளகாய்த்தூள் ஆகியவற்றை, மிக்சியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பிறகு வெல்லம், மற்றும் எண்ணெய் விடாமல் வறுத்த  வெந்தயம் ஆகியவற்றையும் சேர்த்து  அரைக்கவும். ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சுட வைத்து, மேற்கூறிய தாளிப்புக்களைச் சேர்க்கவும்.

பிறகு அரைத்த இஞ்சி விழுதையும் சேர்த்து, 3-4 நிமிடங்கள் சிறு தீயில் வதக்கி இறக்கவும். அல்லம் பச்சடி தயார். சூடான பெசரெட்டுடன், பரிமாறவும். சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.