வெஜிடபிள் ரவா இட்லி

வெஜிடபிள் ரவா இட்லி
Updated on
1 min read


தேவையான பொருட்கள் :
வறுத்த வெள்ளை ரவை - ஒரு கிண்ணம்
தயிர் - ஒரு கிண்ணம்
கேரட் - 2
பீன்ஸ் - 5
தேங்காய் - சிறிதளவு
இஞ்சி - 1 துண்டு

செய்முறை:

ரவை, தயிர் இரண்டையும் உப்பு போட்டு கலந்து  அரை மணி நேரம்  ஊற வைக்கவும். பிறகு, துருவிய கேரட், மிகவும் பொடியாக நறுக்கிய பீன்ஸ், சிறு சிறு பல்லாக நறுக்கிய தேங்காய்,  பொடியாக நறுக்கிய இஞ்சி  அனைத்தையும் ஊறவைத்த ரவை மாவுடன் நன்கு கலந்து கொள்ளவும். பின்பு  இட்லி பாத்திரத்தில் சாதாரணமாக  இட்லி வேகவைப்பது போல்   அனைத்து மாவையும் இட்லிகளாக  வேகவைத்து எடுக்கவும். மிகவும் சுவையான, சத்தான வெஜிடபிள் ரவா இட்லி ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com