ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சுண்டைக்காய் கூட்டு

News image
Updated On :15 பிப்ரவரி 2017, 6:30 pm

தேவையான பொருட்கள் :
சுண்டைக்காய் - கால் கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
கடுகு - முக்கால் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
கல் உப்பு - அரை தேக்கரண்டி
துவரம் பருப்பு - 25 கிராம்
கறிவேப்பிலை - 2 கொத்து

செய்முறை:  

குக்கரில் துவரம் பருப்பை போட்டு மூழ்கும் அளவு  தண்ணீர் விட்டுக் கொள்ளவும். அத்துடன் இரண்டாக நறுக்கி அலசிய சுண்டக்காயைச் சேர்க்கவும். அத்துடன், புளியைச் சேர்த்து மூடி 3 விசில் விடவும். பின்னர், பிரஷர் போனதும் குக்கரை திறந்து அத்துடன் மிளகாய் தூள், தேங்காய் விழுது போட்டு கிளறி அரை தேக்கரண்டி சீனி போட்டு கலக்கி விடவும். 2 நிமிடம் கழித்து இறக்கி வைத்து கறிவேப்பிலை போடவும்.

வாணலியில்  எண்ணெய்விட்டு கடுகு தாளித்து கூட்டில் சேர்க்கவும். சுவையும் மணமும் நிறைந்த சுண்டைக்காய் கூட்டு ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.