தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஸ்ரீரங்கம் வத்தக் குழம்பு

அடுத்து, அதில் புளிச்சாறு  சேர்த்து கிளறி, பின் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து,

News image
Updated On :3 ஜனவரி 2017, 6:30 pm

கவிதா பாலாஜி

தேவையான பொருள்கள்:

சுண்டைக்காய்  வத்தல் - 1 கிண்ணம்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
மல்லி - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
வரமிளகாய் - 4
புளி - 75 கிராம் ( சாறு எடுத்துக் கொள்ளவும்)
சின்ன வெங்காயம் - 10
வெல்லம் - 1 தேக்கரண்டி
அரிசி - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையானஅளவு
தாளிப்பதற்கு கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயத்தை போட்டு வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், மிளகு, அரிசி, மல்லி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள  பொருட்களைப்போட்டு தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் சுண்டைக்காயைச் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் வெந்தயப் பொடி சேர்த்து கிளறி விட வேண்டும்.

 அடுத்து, அதில் புளிச்சாறு  சேர்த்து கிளறி, பின் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெல்லம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்கவிட்டு, அதன் மேல் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால், ஸ்ரீரங்கம் வத்த குழம்பு ரெடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.