விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

ஆபத்தான மின் கம்பம்

சென்னை ஐ.சி.எஃப். பேருந்து நிலையத்திலிருந்து டாக்டர் அம்பேத்கர் சாலை வழியாக ரயில் நிலையம் செல்லும் சாலையில் தமிழ்நாடு மின்சார வாரிய அச்சகத்தின் எதிரில் உயர்மின் அழுத்த மின் கம்பத்தைச் சுற்றிலும் செடி, கொடிகள் சூழ்ந்துள்ளது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2014, 4:00 am IST

சென்னை ஐ.சி.எஃப். பேருந்து நிலையத்திலிருந்து டாக்டர் அம்பேத்கர் சாலை வழியாக ரயில் நிலையம் செல்லும் சாலையில் தமிழ்நாடு மின்சார வாரிய அச்சகத்தின் எதிரில் உயர்மின் அழுத்த மின் கம்பத்தைச் சுற்றிலும் செடி, கொடிகள் சூழ்ந்துள்ளது.

இதனால் எந்த நேரத்திலும் மின் அழுத்தம் ஏற்பட்டு வீட்டு உபயோகப் பொருள்கள் பழுதடைய வாய்ப்புள்ளது. மேலும் மின்தடை ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த மின் கம்பத்தின் எதிரிலேயே தமிழக மின்சார வாரிய அச்சகமும், மின்வாரிய அலுவலகமும் உள்ளன. ஆனால், இந்த மின் கம்பத்தைப் பற்றி எந்தவொரு அக்கறையும் இல்லாதது வருத்தமாக உள்ளது.

எனவே குறிப்பிட்ட மின் கம்பத்தைச் சுற்றியுள்ள செடி, கொடிகளை அகற்றி சரி செய்ய தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.