மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தாஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!
/

பகுதி - 80

மயில் விருத்தத்துக்கான பலச்ருதியைச் சொல்கிறார் குருநாதர்.  ‘மயிலைப் பலகாலமாக வணங்கிவரும் அருணகிரிநாதன் சொன்ன

Updated On :1 டிசம்பர் 2015, 9:21 am

மயில் விருத்தத்துக்கான பலச்ருதியைச் சொல்கிறார் குருநாதர்.  ‘மயிலைப் பலகாலமாக வணங்கிவரும் அருணகிரிநாதன் சொன்ன பாடல்’ என்று சொல்வது இருக்கட்டும்.  நம் பிரான் ஆன மயிலுடைய பாதங்களைப் பலகாலமாகத் தொழுதுவரும் அருணகிரிநான் சொன்ன இந்த மயில் விருத்தப் பாடல்கள் பத்தையும் படிப்பவர்களுக்கு இன்னின்ன பலன்கள் கிட்டும் என்று அறுதியிட்டுச் சொல்கிறார்.  வேல் விருத்தத்தில் ‘அண்டருலகுஞ்சுழல’ என்ற நான்காம் பாடலில் ‘மண்டல நிறைந்தரவி சதகோடி மதி’ என்று பாடும்போது, முருகன் வேறு, அவனுடைய வேல் வேறு இல்லை என்பதைச் சொன்னார் என்று பார்த்தோம்.  இப்போது மயிலை ‘நம் பிரான்’ என்று பாடி, அதன் பாதத்தைப் பலகாலமாக வணங்கும் அருணகிரிநாதன் என்று தன்னை அறிவித்துக் கொள்வதால், மயில் வேறு, மயிலை வாகனமாக உடையவன் வேறில்லை என்றும் சொல்லக் கேட்கிறோம்.  வேலும் மயிலும் துணை என்பதன் பொருள் விளக்கம் பெறக் காண்கிறோம்.  இப்போது பலச்ருதியைப் பார்ப்போம், பதிவைக் கேட்போம்.

எந்நாளும் ஒருசுனையில் இந்த்ரநீ லப்போ
   திலங்கிய திருத்த ணிகைவாழ்

எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏறும்ஒரு
   நம்பிரா னான மயிலைப்

பன்னாளும் அடிபரவும் அருணகிரி நாதன்
   பகர்ந்தஅதி மதுர சித்ரப்

பாடல்தரு மாசறு விருத்தம்ஒரு பத்தும்
   படிப்பவர்கள் ஆதி மறைநூல்

மன்னான் முகம்பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர்
   வாணிதழு வப்பெ றுவரால்

மகரால யம்பெறுவர் உவணம் ஏறப்பெறுவர்
   வாரிச மடந்தை யுடன்வாழ்

அந்நாயகம் பெறுவர் அயிராவ தம்பெறுவர்
   அமுதா சனம்பெ றுவர்மேல்

ஆயிரம் பிறைதொழுவர் சீர்பெறுவர் பேர்பெறுவர்
   அழியா வரம்பெ றுவரே.

</p><p align="justify"><iframe height="250" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/235549298&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="75%" /></p><p align="justify"> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.