மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தாஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!

பகுதி - 83

அழியாத வனங்களும் உள்ள, (நந்துதல்: அழிதல், குன்றுதல்.  நந்தா: அழியாத, குன்றாத.  எனவே நந்தாவிளக்கு: என்றும் அணையாமல் தொடர்ந்து எரியும் விளக்கு) (இவற்றால் நிறைந்த)

Updated On :11 டிசம்பர் 2015, 8:51 am

சேவல் விருத்தத்தின் காப்புச் செய்யுளுக்கான பொருளைக் காண்போம்.

பதச் சேதம்

சொற் பொருள்

கொந்து ஆர் குழல் வரி வண்டு ஓலிடும் இயல் கொண்டு ஏழ் இசை மருளக்கொந்து: கொத்து; குழல்: கூந்தல்; ஓலிடும்: ஒலிக்கும்; ஏழ் இசை: சப்த ஸ்வரங்களால் அமைந்த இசை; மருள: மருட்சி அடைய
குதலை மொழிந்து அருள் கவுரி சுதந்தரி குமரன் இதம் பெறுகுதலை: மழலை; கவுரி: கௌரி; சுதந்தரி: சுதந்தரம் உடையவள், தன்வயம் நிறைந்தவள்; இதம்பெறு: இனிமையான;
பொன் செந்தாமரை கடம் நந்தா வனம் உள செந்தூர் எங்கும் உளான்பொன்: அழகிய; கடம்: காடு; நந்தாவனம்: நந்தவனம், அழியாத வனங்கள்.  நந்துதல்: அழிதல், நந்தா: அழியா.
திலக மயிலில் வரு குமரன் வரிசை பெறு சேவல் தனைப் பாடதிலக மயில்: திலகம்போன்ற, சிறந்த மயில்; வரிசைபெறு: புகழ் பெற்ற,
வந்தே சமர்பொரு மிண்டு ஆகிய கய மாமுகனைக் கோறிமிண்டு ஆகிய: மதம் கொண்ட; கயமாமுகன்: கஜமுகாசுரன்; கோறி: கொன்று;
வன்கோடு ஓன்றை ஒடித்துப் பாரதம் மா மேருவில் எழுதிப்வன்கோடு: வலிய தந்தம்
பைந்தார் கொடு பல ராவணன் அன்பொடு பணி சிவலிங்கம் அதைப்பைந்தார்: பசிய மாலை; பல ராவணன்: வலிமை (பலம்) நிறைந்த ராவணன்;
பார் மிசை வைத்த விநாயகன் முக்கண் பரமன் துணையாமே.தரையிலே வைத்த முக்கண் உடைய விநாயகன் துணை

கொந்து ஆர் குழல் ... கொத்துக் கொத்தான மலர்களைச் சூடியிருக்கும் கூந்தலிலே,

வரி வண்டு ... வண்டுகள்,

ஓலிடும்... ஒலிக்கின்ற, ரீங்கரிக்கின்ற,

இயல் கொண்டு ... தன்மையைக் கொண்டு,

ஏழ் இசை மருள ... இசையின் ஏழு ஸ்வரங்களும் மருண்டு பின்வாங்கும்படியாக;

குதலை மொழிந்தருள் ... மழலை மொழியை உடையவளும், அடியாருக்கு அருள்பவள்;

கவுரி ... பொன்னிறம் உடையவளான கௌரி;

சுதந்தரி ... எவரிடமும் வசப்படாத தன்வசம் உள்ளவள், (இப்படிப்பட்ட உமாதேவியின்)

குமரன் ... மகனான முருகன் (வீற்றிருப்பதும்);

இதம் பெறு ... இனிமையுள்ளதும்,

பொன் ... அழகானதுமான,

தாமரைக் கடம் ... தாமரைக் காடுகளும்,

நந்தா வனம் உள ... அழியாத வனங்களும் உள்ள, (நந்துதல்: அழிதல், குன்றுதல்.  நந்தா: அழியாத, குன்றாத.  எனவே நந்தாவிளக்கு: என்றும் அணையாமல் தொடர்ந்து எரியும் விளக்கு) (இவற்றால் நிறைந்த)

செந்தூர் ... திருச்செந்தூரிலும்,

எங்குமுளான் ... மற்ற எல்லாத் தலங்களிலும் விளங்குபவனான குமரக் கடவுளுடையமற்ற பல தலங்களிலும் குடிகொண்டு உள்ள,

திலக மயிலில் வரு ... (பறவைகளுக்கெல்லாம்) திலகமான, (சிறப்பு மிக்க) மயிலில் ஏறிவருகின்ற,

குமரன் ... முருகப் பெருமானுடைய,

வரிசை பெறு ... கீர்த்தி (புகழ்) மிக்க,

சேவல் தனைப் பாட ... (கொடியில் விளங்குகின்ற) சேவலை அடியேன் துதித்துப் பாடுவதற்கு—

வந்தே சமர் பொரு ... போருக்கு வந்து பொருத,

மிண்டாகிய ... மதம் நிறைந்த,

கயமாமுகனைக் கோறி ... கஜமுகாசுரனைக் கொன்று,

வன் கோடு ஓன்றை ஒடித்து ... தன்னுடைய வலிய தந்தம் ஒன்றை ஒடித்து,

பாரதம் மா மேருவில் எழுதி ... மேரு மலையின்மேல் பாரதக் கதையை எழுதியவரும்*,

பைந்தார் கொடுபல ... பசியவையும், அப்போதுதான் பூத்தவையுமான மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை(ச் சூட்டி)

ராவணன் அன்பொடு பணி சிவ லிங்கமதை ... மிகுந்த நேயத்தோடு ராவணன் வழிபட்டு பூஜித்ததான சிவலிங்கத்தை (மஹாபலேஸ்வரர்),

பார் மிசை வைத்த ... கோகர்ணமாகிய தலத்தில் தரையில் வைத்த,

விநாயகன் ... கணபதியாகிய,

முக்கண் பரமன் துணையாமே ... மூன்று கண்களை உடைய பரம
தெய்வம் எனக்கு துணை புரியட்டும்.

சேவல் நாதவடிவானது; பிரணவத்தை ஒலிவடிவாக உணர்த்துவது என்பார் வாரியார் சுவாமிகள்.  ஒலிவடிவான சேவலைப் பாட, முதலில் ஒலிவடிவான அம்பிகையைச் சொல்லித் தொடங்குகிறார்.

நிஜ-ஸல்லாப-மாது4ர்ய-வினிர்ப4ர்த்ஸித-கச்சபீ |

என்கிறது லலிதா ஸஹஸ்ரநாமம்.

தனது பேச்சின் இனிமையால் ஸரஸ்வதியின் வீணை இசையைத் தோல்வியடையச் செய்தவள். (கச்சபீ என்பது ஸரஸ்வதியுடைய வீணையின் பெயர்; விபஞ்சி, கின்னரி என்றெல்லாமும் சொல்வதுண்டு.)

இப்படிப்பட்ட மதுரமான பேச்சை உடையவளுடைய கூந்தலில் ஒலிக்கும் வண்டுகளின் ரீங்காரமே இசையின் ஏழு ஸ்வரங்களையும் தோற்கடிக்கின்றன.  இவள் மழலையில் வேறு பேசுகிறாள்.  காட்சியே நாதமயமாக இருக்கிறது.

பூங்கொத்துகள் நிறைந்த கூந்தலில் ஒலிக்கும் வண்டுகளின் ரீங்காரத்துக்கு ஸப்த ஸ்வரங்களும் தோற்றுப் போக, மழலை மொழிபவளும் அருள் புரிபவளும், தன்வயமானவளுமான பொன்னிற கௌரியுடைய புதல்வன்;

இனிமையுடைய அழகிய செந்தாமரைக் காடுகளும், அழியாத சோலைகளும் உள்ள செந்தூரிலும் மற்ற எல்லாத் தலங்களிலும் எழுந்தருளியிருப்பவன்;

சிறந்த மயில் வாகனத்தின் மீது ஏறி உலாவுபவன்—

இப்படிப்பட்ட முருகனுடைய கொடியில் விளங்குவதான சேவலை நான் பாடித் துதிப்பதற்கு,

எதிர்த்துவந்து போர்புரிந்த கஜமுகாசுரனைக் கொன்றவர்;

தன்னுடைய வலிய தந்தங்களில் ஒன்றை ஒடித்து மஹாபாரதத்தை மேருவில் எழுதியவர்;*

புதிய மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளைச் சூட்டி, தான் வழிபட்டதாகிய ஆத்மலிங்கமான மஹாபலேஸ்வரரைத் தரையிலே வைத்தவர்;

தனக்குமேல் நாயகன் அற்றவர் (வி-நாயகர்)

மூன்று கண்களை உடைய பரமர்,

எனக்குத் துணை நிற்கட்டும்.

இராவணன், சிவபெருமானிடம் ஓர் ஆத்மலிங்கத்தை வேண்டிப் பெற்றுக் கொண்டு திரும்புகையில், இந்த லிங்கத்தை இவன் எடுத்துச் சென்றால் இவனுடைய பலம் பெருகும் என்று கருதிய தேவர்கள் விநாயகரை வேண்ட, விநாயகருடைய எண்ணப்படி இராவணனுக்கு சிறுநீர் உபாதை அதிகரிக்க, கையில் லிங்கத்தை வைத்துக் கொண்டு தவித்தான்.  லிங்கத்தை எந்த இடத்தில் வைக்கிறானோ, அந்த இடத்திலேயே அது ஸ்தாபிதம் ஆகிவிடும் என்பதனால், தான் திரும்ப வருமளவும் அதை யாரிடமாவது கையில் தாங்கியபடி வைத்திருக்கும்படி கேட்டுக்கொள்ள ஆள் கிடைப்பார்களா என்று இராவணன் தேடியபோது விநாயகமூர்த்தி ஒரு சிறுவன் வடிவில் அங்கு வர, அவரிடம் லிங்கத்தை வைத்துவிட்டு இயற்கை உபாதைக்காக இராவணன் போனபோது, விநாயகர் லிங்கத்தைத் தரையில் வைத்துவிட்டார்.  லிங்கம் அங்கேயே பிரதிஷ்டை ஆகிவிட்டது.   கைலாய மலையைப் பெயர்த்தவனான இராவணன் அந்த லிங்கத்தைப் பெயர்க்கப் பெருமுயற்சி செய்தான்.  லிங்கம் பசுவின் காதைப்போல குழைந்ததுதான் மிச்சம்.  இந்த இடம்தான் கோகர்ணம்.  இராவணன் எடுத்தே பெயராததால் இறைவனுக்கு மஹாபலேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.  இத்தலம் உத்தர கர்நாடகாவில் உள்ளது.  இராவணன் குட்டியதன் அடையாளத்தோடு விநாயகப் பெருமான் இத்தலத்தில் காட்சியளிக்கிறார்.  இதைத்தான் இந்தக் காப்புச் செய்யுளின் இறுதிப் பகுதியில் அருணகிரியார் பாடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.