சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!

பகுதி - 30

மிக அரிய தத்துவப் பொருட்களை உள்ளடக்கியுள்ள இந்தப் பாடலின் சொற்பொருளையும், ஓரளவுக்குத் தத்துவப் பொருளையும் காண்போம்.

Updated On :14 அக்டோபர் 2015, 6:48 am

மிக அரிய தத்துவப் பொருட்களை உள்ளடக்கியுள்ள இந்தப் பாடலின் சொற்பொருளையும், ஓரளவுக்குத் தத்துவப் பொருளையும் காண்போம்.

பதச் சேதம்

பொருள் சாரம்

அமல கமல உரு சங்கம் தொனித்தமாசற்றதாகவும், (ஆறு ஆதாரங்களுக்கு அப்பால் உள்ள ஸஹஸ்ராரம் எனப்படும் 1008 இதழ் கொண்ட) தாமரை(யான குருகமல) உருவத்தில் (பிராணவாயுவைச் செலுத்துவதால் உண்டாகும்) சங்கின் ஒலி முழங்க,
மறை அரிய பரம வெளி எங்கும் பொலித்த செயல் அளவும் அசலம் அது கண்டுஅரியதான ஞான ஆகாசம் முழுவதும் பொலிவு பெற, (அப்படிப் பொலிவடைவதை) அளவிட்டு அறியும் (நிலைபெற்ற தன்மையை) ரகசியமாக (மறை) கண்டு (அறிந்து)

அங்கு ஒருத்தரு(ம்) உளவு அறியாதது

அங்கே யாராலும் உளவு அறிய முடியாமல் (ஒருவராலும் உண்மைத் தன்மையை அறிய முடியாமல்)
அகர முதல் உரு கொள் ஐம்பந்தொரு அக்ஷரமொடு (வடமொழியில்) அகரம் தொடங்கி க்ஷகரம் இறுதியாக உள்ள ஐம்பத்தோரு எழுத்துகளுக்கும்
அகில புவன நதி அண்டங்களுக்கு முதல்  எல்லா உலகங்களுக்கும் நதிகளுக்கும் அண்டங்களுக்கும் முதன்மை பெற்றதாய்
அருண கிரண ஒளி எங்கும் எங்கும் உற்று  (அருண=செந்நிற) செந்நிற ஒளி எங்கெங்கும் பரவிப் பொருந்தியதாய்;

முதல் நடுவான கமல துரியம் அதில் இந்தும் கதிர் பரவு

கனக நிறமுடைய பண்பு அம் படி(க)க் கதவம்

ககனம்

முதலும், நடுவுமான (யோகியர், தன்மயமாய் நிற்கும் உயரிய நிலையான, பிரமரந்திரம் எனப்படும்) துரிய நிலையான தாமரையில், சந்திரனின் ஒளி பரவ, பொன்மயமான நிறமுடையதும் ஸ்படிகத்தால் ஆன (தூய) வாயிலைக் கொண்ட ஆகாய வெளியில்
சுழி முனையில் அஞ்சும் களித்த அமுத சிவயோகம்சுழிமுனை நாடியின் உச்சியில், ஐம்புலன்களும் இன்பம் அடையக்கூடியதாக விளங்கும் அமிர்தம் போன்ற சிவயோக நிலையில்
கருணை உடன் அறிவு விதம் கொண்டிட  உன்னுடைய கருணையால் அறியும்படியான வழியை நான் அடைய
கவுரி குமர குமர குரு என்று என்று உரைப்ப முது கனிவு வர கௌரீ குமர = பார்வதி மைந்தனே, குமரகுருவே என்றெல்லாம் சொல்லிச் சொல்லி, முதிர்ந்து கனிந்த (பக்தி) நிலை ஏற்பட,
இளமை தந்து உன் பதத்தில் எனை அருள்வாயே(பலம் நிறைந்த) இளமையைக் கொடுத்து, உன் திருவடியில் என்னைச் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
இதன் திரண்ட பொருளைக் கீழே காணலாம்.

திமிலை பல முருடு திந்திந் திமித்.............................................. திகுதீதோ

செகண செகண செக செம் செம் செகக்கண என

(திமிலை = ஓசை) முருடு எனப்படும் வாத்தியங்கள் பல முழங்கும் திந்திம்.. செககண, செம்செம் எனும்படியான பலவகை நாதங்கள்,
அகில முரகன் முடி அண்டம் பிளக்க வெகு திமிர்த(ம்) குல விருது சங்கம் தொனித்து அசுரர் களம் மீதே (அகிலம், உரகன் = அகிலத்தைத் தாங்குவதான பாம்பு) ஆதிசேஷனுடைய ஆயிரம் முடிகளும், அண்டங்களும் பிளக்கும்படியாக எழ, (திமிர்தம் = பேரொலி) எழும்படி, பல சிறந்த அடையாளச் சின்னங்களை சங்கொலிகள் எழுப்பவும், அசுரர்களோடு போரிடும் களத்தில்,
அமரர் குழுமி மலர் கொண்டு அங்கு இறைத்து அருள தேவர்கள் கூட்டமாகக் கூடி நின்று மலர்மாரி பொழிய,
அரிய குருகு கொடி எங்கும் தழைத்து அருள அரிய சேவற் கொடியானது எல்லா இடங்களிலும் பரந்து வீச,
அரியொடு அயன் முனிவர் அண்டம் பிழைத்து அருள விடும் வேலா திருமால், பிரமன், முனிவர்கள் அண்டங்கள் எல்லாம் பிழைக்கும்படியாக வேலை வீசுபவனே
அரியின் மகள் தனமொடு எங்கும் புதைக்க முக அழகு புயமொடு அணை இன்பம் களித்து மகிழ் திருமாலின் மகளான (வள்ளியின்) மார்புகள் புதையுமாறு தழுவி, திருமுகத்தின் அழகுடன், திருத்தோள்களோடு அவளை அணைத்துக் களிப்புற்று மகிழ்பவனே!
அரிய மயில் அயில் கொடு இந்தம்பலத்தில் மகிழ் பெருமாளே. அருமை வாய்ந்ததான மயிலையும் கூர்மையான வேலையும் கொண்டு, இந்தம்பலம் என்னும் தலத்தில் மகிழ்ந்திருக்கின்ற பெருமாளே.

அமல கமல உரு சங்கம் தொனித்த ... மாசற்றதாகவும் (ஆறு ஆதாரங்களுக்கு* அப்பால் உள்ளதான, ஆயிரத்தெட்டு இதழ்களோடு கூடிய ஸஹஸ்ராரம் என்ற குருகமல) உருவத்துள்ளே (பிராணவாயுவைச் செலுத்துவதால் உண்டாகும்) சங்கநாதம் ஒலிக்கவும்…

(*மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞா ஆகிய ஆறு ஆதாரங்களைக் கடந்து, ஸஹஸ்ராரம் (அல்லது) பிந்து சக்ரம் (அல்லது) துவாதசாந்தம் (அல்லது) பிரமரந்திரம் எனப்படும் ஆயிரத்தெட்டு இதழ்களைக் கொண்ட தாமரை விரிகிறது. அதனுள் பிராணவாயுவைச் செலுத்துவதால் சங்கின் ஒலி உண்டாகிறது என்பது யோக மரபு)

மறை அரிய பரம வெளி எங்கும் பொலித்த செயல் அளவும்
அசலம் அது கண்டு ... (அந்த ஒலியால்) அற்புதமான ஆகாச வெளி எங்கணும் பொலிவுறும் செயலை அளவிட்டு அறியும் (அசலம் = மலை அல்லது அசையாதது, நிலை பெற்றது) நிலை பெற்றதான தன்மையை
(மறை கண்டு என்று கூட்டிக்கொள்ள வேண்டும்) ரகசியமாய் உணர்ந்தும்,

அங்கு ஒருத்தரு(ம்) உளவு அறியாதது ... அவ்விடத்தில் (அந்த நிலையிலும்) யாராலும் தன்னுடைய உண்மைத் தன்மை இன்னது என்பதை உணரமுடியாத தன்மையே நிலவும்.

அகர முதல் உரு கொள் ஐம்பந்தொரு அக்ஷரமொடு ... வடமொழியில் அகரம் தொடங்கி க்ஷகரம் வரையிலுள்ள ஐம்பத்தோரு அட்சரங்களுக்கும்,

அகில புவன நதி அண்டங்களுக்கும் எல்லா உலகங்களுக்கும், நதிகளுக்கும், அண்டங்களுக்கும்,

முதல் அருண கிரண ஒளி எங்கெங்கும் உற்று ...முதன்மை பெற்று, சிவந்த நிறமுடைய சுத்த ஜோதிப் பேரொளி எல்லா இடங்களிலும் பரவிப் பொருந்தி, நிறைந்து

முதல் நடுவான கமல துரியம் அதில் ... முதலும் நடுவுமான
யோகியர் தன் மயமாய் இருந்து தியானிக்கும் உயர் நிலையான (பிரமரந்திரம் என்ற) பேரின்ப கமலத்தில்,

இந்தும் கதிர்ப் பரவு கனக நிறமுடைய பண்பு அம் படி(க)க்
கதவம் ககனம் ... சந்திரனுடைய கதிர்கள் பரந்துள்ளதும், பொன்னொளி
வீசும், அழகிய ஸ்படிக நிறமான சுத்த வாயிலைக் கொண்டதுமான ஆகாய
வெளியில்,

சுழி முனையில் அஞ்சும் களித்த அமுத சிவயோகம் ... சுழி
முனை நாடியின்* உச்சியில், (மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும்)
ஐந்து இந்திரியங்களும் இன்பம் பெறக் கூடியதாய் அமுதம் போல்
விளங்கும் சிவ யோக நிலையை

(*சுழிமுனை, சுழுமுனை என்பது இடகலை, பிங்கலை நாடிகளுக்கு இடையில் உள்ளது, ஆறு ஆதாரங்களிலும் பின்னி நிற்பது என்பது யோக மரபு)

கருணை உடன் அறிவு இதம் கொண்டிட ... உன்னுடைய கருணையால், அருளால், அறிவதற்கான வழியை நான் அடைவதற்காக,

கவுரி குமர குமர குரு என்று என்று உரைப்ப ... கௌரீ குமாரா, குமரகுருவே என்று பலமுறை, பலவிதங்களில் உன்னை அழைத்து,

முது கனிவு வர இளமை தந்து உன் பதத்தில் எனை
அருள்வாயே ... முதிர்ந்து கனிந்ததாகிய பக்த நிலையை நான் அடைய, (அப்படிப்பட்ட நிலையை அடையும் உடல்வலிமையைக் கொண்டதான) இளமையை எனக்குத் தரவேண்டும்.

திமிலை பல முருடு ... முருடு என்பது ஒரு தோல்வாத்தியம். இப்படிப்பட்ட பல முருடுகள் ஒன்றாக ஒலிப்பதால் உண்டாகும் திமிலை (ஓசை)

திந்திந் திமித் திமித டுமுட டுமுடுமுட டுண்டுண் டுமுட்டுமுட திகுட திகுடதிகு திந்திந் திகுர்த்திகுர்த திகுதீதோ செகண செகண செக செம் செம் செகக்கண என ... என்று பலவிதமான ஓசைகளோடு தாளலயம் பிசகாமல் ஒலிப்பதனால், (அந்த ஒலியானது)

அகிலம் உரகன் முடி அண்டம் பிளக்க வெகு திமிர்த(ம்) குல
விருது சங்கம் தொனித்து ... அகிலம் என்றால் உலகம். உரகன் என்றால் பாம்பு. அகிலத்தைத் தாங்கும் பாம்பாகிய ஆதிசேஷனுடைய ஆயிரம் முடிகளையும் அண்டங்களையும் பிளக்கும்படி ஒலிக்க, போர்க்களத்தில் புகுந்த அரக்கர்களை அழித்து, உன்னுடைய ஜயகோஷத்தை முழங்குவதாகிய சங்குகளின் ஒலி பேரோசையாக எழ,

அசுரர் களம் மீதே அமரர் குழுமி மலர் கொண்டு அங்கு
இறைத்து அருள ... அரக்கர்கள் போரிட்டு மடிந்த போர்க்களத்தில் தேவர்கள் ஒன்றுகூடி பூமாரி பொழிய,

அரிய குருகு கொடி எங்கும் தழைத்து அருள ... (குருகு=பறவை. இங்கே சேவல்) அரிதாகிய சேவற்கொடியானது எல்லா இடங்களிலும் வீசிப் பறக்க,

அரியொடு அயன் முனிவர் அண்டம் பிழைத்து அருள விடும்
வேலா ... திருமாலும், பிரமனும், முனிவர்களும், அண்டங்களும்
பிழைத்து உய்ய, வேலாயுதத்தைச் செலுத்தியவனே,

அரியின் மகள் தனமொடு அங்கம் புதைக்க முக அழகு
புயமொடு அணை இன்பம் களித்து மகிழ் ... திருமாலின் மகளான*
வள்ளியின் மார்பகங்களில் உனது உடல் புதையும்படி, திருமுக அழகுடன்
திருத்தோள்களால் அவளை அணைத்து இன்பத்தில் திளைத்து மகிழ்ந்து,

அரிய மயில் அயில் கொடு இந்தம்பலத்தில் மகிழ்
பெருமாளே. ... அருமை வாய்ந்த மயிலுடனும், வேலாயுதத்துடனும்
இந்தம்பலம் என்ற ஊரில் ஆனந்தமாக அமர்ந்த பெருமாளே.

வள்ளியைப் பற்றிப் பலவிதமாக அருணகிரிநாதர் பாடியிருக்கிறார். திருமாலின் மகள், (திருமா லளித்தருளு ஒருஞான பத்தினியை —இருநோய் மலத்தை திருப்புகழ்) இலக்குமியின் மகள், பிரமன் தங்கை, சுந்தரவல்லி என்ற பெயரை உடையவள், சிவமுனிவர் மகள், மான் ஈன்ற மகள், வேடர் குலத்து விநோத மகள் என்றெல்லாம் பாடியுள்ளார்.

சுருக்கமான பொருள்

(திமிலை பலமுருடு என்ற அடியிலிருந்து தொடங்கி, மூன்றாம் நான்காம் அடிகளுக்குப் பிறகு முதலிரண்டு அடிகளின் பொருளை கூட்டிக்கொள்கிறோம். திருப்புகழில் இப்படிப் பொருள் காண்பதே மரபு.)

பலவிதமான பறைகள் முழங்குவதால் ஏற்படும் பேரொலி, ஆதிசேடனுடைய முடிகளையும் பல அண்டங்களையும் பிளப்பதைப்போல் ஒலிக்கும்படியாக போர்க்களத்துக்குள் புகுந்த அசுரர்கள் இறந்துபட்ட போர்க்களத்திலே தேவர்கள் ஒன்றுகூடி நின்று மலர்மாரி பொழிய திருமால், பிரமன், முனிவர்கள் முதலானவர்கள் உய்யுமாறு வேலைவிடுத்தவனே!

வள்ளியம்மையின் தனங்களைத் தழுவிய புயங்களை உடையவனே! இந்தம்பலம் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளவனே!

மாசற்றதும், ஆறு ஆதாரங்களைக் கடந்துள்ளதுமான குருகமலத்தில் உண்டாகும் சங்கொலியாகிய மேலான ஞானவெளியின் உண்மையான தன்மை இன்னது என்பதை யாராலும் அளவிட்டு அறிய முடியாது.

ஐம்பத்தோரு அட்சரங்களுக்கும், எல்லா உலகங்களுக்கும், நதிகளுக்கும், அண்டங்களுக்கும் முதன்மை கொண்ட, சிவந்த சுத்த ஜோதியாகிய பெரிய ஒலி (the excessive divine tumultuousness of light என்று கிட்டத்தட்ட மொழிபெயர்க்கலாம்) பரவியிருக்கும் நிலையே

ஆரம்பம், நடு, இறுதிகளாக விளங்கும் யோகியர்கள் தன்மயமாக விளங்கும் துரிய நிலை, அமிர்தமான சிவயோக நிலை. (சிவயோக சாதனையை பற்றிப் பல இடங்களில் பாடுகிறார்).

இந்த நிலையை அறிவதற்காக நான் உன்னைப் பார்வதீ பாலா, குமரகுருவே என்று பலவிதமாக அழைத்து முதிர்ந்த பக்திநிலையில் நான் கனியும்படியாக என்னை உன் திருவடியில் சேர்த்துக் கொள்வாயாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.