பதச் சேதம் | சொற் பொருள் |
சருவி இகழ்ந்து மருண்டு வெகுண்டு உறு சமயமும் ஒன்றிலை என்றவரும் பறி தலையரு(ம்) நின்று கலங்க விரும்பிய தமிழ் கூறும்
| சருவி: சண்டையிட்டு; மருண்டு: அஞ்சி; வெகுண்டு: கோபித்து; சமயம்: நெறி—அல்லது—இறைவன்; பறிதலையர்: சமணர்; |
சலிகையு(ம்) நன்றியும் வென்றியும் மங்கள பெருமைகளும் கனமும் குணமும் பயில் சரவணமும் பொறையும் புகழும் திகழ் தனி வேலும்
| சலிகை: செல்வாக்கு; நன்றி: உபகார குணம்; கனம்: மிகுதி; பயில் சரவணம்: பழகிய சரவணப் பொய்கை; பொறை: பொறுமை; தனிவேல்: ஒப்பற்ற வேல்; |
விருது துலங்க சிகண்டியில் அண்டரும் உருகி வணங்க வரும் பதமும் பல விதரணமும் திறமும் தரமும் தினை புன மானின்
| விருது: வெற்றிச் சின்னம்; துலங்க: விளங்க; சிகண்டி: மயில்; அண்டர்: தேவர்கள்; விதரணம்: கொடை; திறம்: ஆற்றல்; தரம்: மேன்மை; தினைப்புன மான்: வள்ளி; |
ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்து அடி வருடி மணந்து புணர்ந்ததுவும் பல விஜயமும் அன்பின் மொழிந்து மொழிந்து இயல் மறவேனே
| ம்ருகமதம்: மிருகமதம், கஸ்தூரி; விஜயம்: வெற்றிச் செயல்; |
கருதி இலங்கை அழித்து விடும்படி அவுணர் அடங்க மடிந்து விழும்படி கதிரவன் இந்து விளங்கி வரும்படி விடு மாயன்
| அவுணர்: அரக்கர்; அடங்க: அனைவரும், முழுவதும், முற்றிலும்; இந்து: சந்திரன்; |
கட கரி அஞ்சி நடுங்கி வருந்திடு மடுவினில் வந்து உதவும் புயல் இந்திரை கணவர் ரங்க முகுந்தன் வரும் சகடு அற மோதி
| கடம்: மதம்; கடகரி: மதயானை—கஜேந்திரன்; புயல்: மேகம், மேக நிறத்தவன்; இந்திரை: திருமகள்; சகடு: சக்கரம்—சகடாசுரன்; |
மருது குலுங்கி நலங்க முனிந்திடு வரதன் அலங்கல் புனைந்து அருளும் குறள் வடிவன் நெடும் கடல் மங்க ஓர் அம்பு கை தொடும் மீளி
| மருது: மருதமரம்; நலங்க: நொந்து போக; முனிந்திடு: கோபிக்கும்; அலங்கல்: மாலை; குறள்: வாமனன்; மீளி: பராக்கிரமம், வலிமை உடையவன்; |
மருக புரந்தரனும் தவம் ஒன்றிய பிரம புரம் தனிலும் குகன் என்பவர் மனதினிலும் பரிவு ஒன்றி அமர்ந்து அருள் பெருமாளே.
| மருக: மருமகனே; புரந்தரன்: இந்திரன்; பிரமபுரம்: சீர்காழி; |

சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு... (மாறுபட்ட மதங்களைச் சேர்ந்தவர்கள் தமக்குள்ளே) சண்டையிட்டும், ஒருவரை ஒருவர் இகழ்ந்து பேசியும், பயந்தும், கோபித்தும்;

(சதையைச் சிலகைக் கொளமற் றதனைச் சருவிச் சருவிப் பறிக்கு மொருதிரள்—செருக்களத்து அலகை வகுப்பு. முருகன் போரிட்ட களத்தில் பேய்களில் சில சதைகளைக் கையில் எடுத்துக் கொள்ளும்; அப்படி எடுத்துக் கொண்ட சதையை, மற்ற பேய்கள் சண்டையிட்டு சண்டையிட்டுப் பிடுங்கிக் கொள்ளும்)

சமயமும்  ஒன்றிலை யென்ற வரும் ... நெறிமுறை என்றொன்று (அல்லது தெய்வம் என்றொன்று) இல்லை என்பவர்களும்;

பறிதலையரு நின்று கலங்க ... சமணர்களும் என எல்லோரும் நின்று கலங்கும்படியாக,

(சமணர் தலைமுடியை மழிக்காமல் கையாற் பறித்துக் களைவதால் பறிதலையர் என்பது அவர்களைக் குறிக்கும்)

விரும்பிய தமிழ்கூறுஞ் சலிகையும் ... அனைவரும் விரும்புகின்ற தேவாரப் பண்களைப் பாடிய (திருஞான சம்பந்தராக அவதரித்த உன்னுடைய) செல்வாக்கையும்;

நன்றியும் வென்றியு மங்கள பெருமைகளும் ... உபகார குணத்தையும் வெற்றியையும் மங்களம் நிறைந்ததான பலவிதமான பெருமைகளையும்;

கனமுங்குணமும்பயில் சரவணமும் ... மிகுதியான—அளவிறந்த—நற்குணங்களையும்; (உன்னுடைய குழந்தைப் பருவத்திலே நீ) நடை பழகிய சரவணப் பொய்கையையும்;

பொறையும்புகழுந்திகழ் தனிவேலும் ... உன்னுடைய பொறுமையும் புகழும் விளங்கித் தோன்றும் ஒப்பற்ற வேலையும்;

விருது துலங்க சிகண்டியில் ... வெற்றிச் சின்னங்கள் விளங்கித் தோன்றும்படியாக மயிலில் (தோன்றி),

அண்டரும் உருகி வணங்கவரும்பதமும் ... அனைத்து தேவர்களும் மனமுருகி வணங்குவதற்காக வந்து அடையும் திருவடியையும்;

பல விதரணமுந்திறமுந் தரமும் ... (உன்னுடைய) பலவகையான கொடைகளையும்; ஆற்றலையும்; மேன்மையையும்;

தினைப் புனமானின் ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்து ...தினைப்புனத்தில் மான்போல விளங்கி வள்ளிப் பெருமாட்டியுடைய—கஸ்தூரியையும் குங்குமத்தையும் அணிந்த—மார்பகத்தில் மயங்கிச் சாய்ந்து;

அடி வருடி மணந்து புணர்ந்ததுவும் ... அவரது திருவடிகளை வருடி, திருமணம் செய்துகொண்டு கலந்தததையும்;

பல விஜயமும் ... பலவகையான வெற்றிச் செயல்களையும்;

அன்பின் மொழிந்து மொழிந்து இயல் மறவேனே ... அன்போடு சொல்லிச் சொல்லிப் பாராட்டுகின்ற தன்மையை நான் ஒருபோதும் மறவேன்.

கருதி யிலங்கை யழிந்து விடும்படி ... ராவணன் செய்த பிழையைக் கருதி, அந்தக் காரணத்தால் இலங்கை அழிந்து போகும்படியும்;

அவுணர் அடங்க மடிந்து விழும்படி ... அத்தனை அரக்கர்களும் இறந்து போகும்படியும்;

கதிரவ னிந்து விளங்கி வரும்படி விடுமாயன் ... சூரிய சந்திரர்கள் முன்போல ஒளியோடு விளங்கும்படியும் செய்த (ராமனாகிய) திருமாலுக்கு;

கடகரி யஞ்சி நடுங்கி வருந்திடு ... மதங்கொண்ட யானையான கஜேந்திரன் (முதலையால் துன்புற்று) பயந்து நடுங்கி வருத்தமடைந்து நின்ற,

மடுவினில் வந்துதவும் புயல் ... குளத்துக்கே வந்து உதவிய மேகவண்ணனும்,

இந்திரை கணவன் அரங்க முகுந்தன் ... திருமகள் கணவனும், திருவரங்கத்தில் பள்ளிகொண்ட முகுந்த(னுமாகிய திருமாலுக்கு);

வருஞ்சகடற மோதி ... கொல்வதற்காக உருண்டுவந்த சகடாசுரனைக் காலால் உதைத்து நொறுக்கியவனும்

மருது குலுங்கி நலங்க முனிந்திடுவரதன் ... மருதமரங்கள் குலுங்கு நொந்து போகும்படிக் கோபித்த வரத(ன் கண்ணனாகிய திருமாலுக்கு);

அலங்கல் புனைந்தருளுங்குறள் வடிவன் ... மாலையை அணிந்து கொண்டு அருளியவனான வாமன மூர்த்தி(யாக வந்த திருமாலுக்கு);

நெடுங்கடல் மங்க ஒர் அம்பு கை தொடுமீளி மருக ... நீண்ட கடல் வற்றிப் போகும்படி ஓர் அம்பைக் கையில் பற்றி எடுத்த பராக்ரமசாலியான (ராமனாக வந்த திருமாலுக்கு) மருமகனே!

(திருமால் கடலை வற்ற அடித்தது ராமாயணத்தில் சேதுபந்தன சமயத்தில்)

புரந்தரனுந் தவ மொன்றிய பிரமபுரந் தனிலும் ... இந்திரனும் பொருந்தியிருந்து தவம் செய்ததான சீர்காழியிலும்,

குக னென்பவர் மனதினிலும் ... ‘குகா!’ என்று அழைப்பவர்களுடைய மனங்களிலும்,

பரி வொன்றிய மர்ந்தருள் பெருமாளே. ... அன்பு பொருந்த வீற்றிருந்து அருளும் பெருமாளே!

சுருக்க உரை

ராவணன் செய்த பிழையை எண்ணி இலங்கை அழியும்படியும், அரக்கர்கள் மாளும்படியும், சூரிய சந்திரர்கள் பழையபடி ஒளியுடன் விளங்கும்படியும் செய்த ராமன்; முதலையால் கவ்வப்பட்டு அஞ்சி நடுங்கி வருந்தியிருந்த மதங்கொண்ட யானையான கஜேந்திரன் இருந்த குளத்துக்கே நேரில் வந்தருளிய பெருமான்; திருமகளுடைய கணவன்; ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும் முகுந்தன்; தன்னைக் கொல்லவந்த சகடாசுரனைக் காலால் உதைத்து அழித்த, மருதமரங்கள் குலுங்கும்படி அவற்றை வீழ்த்திய வரதனான கண்ணன்; நீண்ட கடல் வற்றிப் போகும்படி கையில் அம்பைப் பிடித்த ராமன்—என்று இவ்வாறெல்லாம் வந்தும் அருளியும் செய்த திருமாலுடைய மருமகனே! இந்திரனும் பொருந்தியிருந்து தவமியற்றிய சீர்காழிப் பதியிலும், ‘குகா’ என்று அழைப்பவர்களுடைய மனங்களிலும் ஒன்றுபோல அன்புடன் வீற்றிருக்கும் பெருமாளே!

மாறுபாடுடைய மதங்களைச் சேர்ந்த, ஒருவரையொருவர் பழித்தும் அஞ்சியும் கோபித்தும் திரியும் மதவாதிகளும்; கடவுளென்று ஒருவர் இல்லை என்பவர்களும்; முடியைக் கையால் பறித்து நீக்கும் சமணர்களும்—அனைவரும் கலங்கும்படியாக; அனைவரும் விரும்பும்படியான தேவாரப் பதிகங்களைப் பாடிய திருஞான சம்பந்தராக அவதரித்த உன்னுடைய ஆற்றலையும்; உபகார குணத்தையும்; வெற்றியையும்; பெருமையையும்; நற்குணங்களையும்; பொறுமையையும்; புகழையும்; ஒப்பற்ற வேலையும்; வெற்றிச் சின்னங்கள் விளங்கும்படி நீ மயில்மீது தோன்றுகையில் தேவர்களும் வந்து வணங்குகின்ற உன்னுடைய திருவடிகளையும்; உன் கொடைத் தன்மையையும்; நீ வள்ளியம்மையைச் சுற்றி வந்து அவரது திருவடிகளை வருடி, மணம்புரிந்து கொண்டதையும் என்னாளும் சொல்லிச் சொல்லித் துதிப்பேன். ஒருநாளும் மறவேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிகமாக தோல்வியடைந்து இருக்கிறேன்... வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த சஞ்சு சாம்சன்!

மேட்டூர் அணை நிலவரம்!

அம்பேத்கருக்காக ஓடுங்கள், அரசியலமைப்புக்காக ஓடுங்கள்: மாரத்தானை தொடக்கி வைத்த ராகுல் காந்தி!

அஜித் - ஷாலினியின் அமர்க்களம் படத்தின் மறுவெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை