இன்றைய பாடல் ரத்னகிரி தலத்துக்கானது. குளித்தலையிலிருந்து மணப்பாறை செல்லும் வழியில் உள்ள அப்பர் பாடிய தலம் இது. 1017 படிகள் கொண்ட மலைக் கோவிலில் இறைவன் இரத்னகிரீஸ்வரர் – அம்பிகை சுரும்பார்குழலியோடு எழுந்தருளியுள்ள தலம். இங்கே ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களுமாக மயில்மீது அமர்ந்த கோலத்தில், இருபுறமும் தேவியர் விளங்க முருகன் எழுந்தருளியிருக்கிறான்.
நான் சுமக்கும் இந்த உடல் வெறும் ஒருபிடிசாம்பலாகப் போகத்தானா என்று நேற்றைய சீகாழித் திருத்தலப் பாடலில் வினவியிருந்தார். இன்றைய பாடலில் இன்னும் ஒருபடி மேலே சென்று, மோகவலையில் விழுந்து வாடிவாடி அழிந்து போவேனோ என்று கேட்டு, ‘சீசீ இது நாற உடல்’ என்று அருவருக்கிறார். அடியார்களுக்கென்று ஒரு செல்ல உரிமை உண்டு. இறையனாருக்கு உபதேசம் செய்த முருகனையே குருவாகக் கொண்டு அவனிடமிருந்தே உபதேசம் பெற்ற குருநாதருக்கு இல்லாத உரிமையா! கேலியைப் பாருங்கள். ‘நான் காம வலையில் சிக்கிக் கொள்ளாமல் அருள்க’ என்று வேண்டும் அதேமூச்சில், ‘வள்ளிப்பிராட்டியின் மேல் காதல் கொண்ட காமுகன்தானே நீ’ என்று சொல்வதைப் போல கடைசியடியில், ‘காமுக குகா!’ என்றே அழைக்கிறார். செந்தமிழாலே வைதாரையும் வாழவைக்கும் பெருமானுக்கு இது உவப்பாக இருக்கும்தானே!
பாடலின் இரண்டாம் பகுதியில் சந்தம் துள்ளத் தொடங்குகிறது. அனைத்து இறைவர்களும் ஆடுகிறார்கள். ‘அதல சேடனாராட’ (பார்க்க: தவணை 122) பாடலை நினைவூட்டும் பாடல் இது. சந்தங்களும் தாளங்களும் செய்யும் ரகளையை ரசிக்கிறோம்.
தத்ததன தானதன தானதன தானதன
தத்ததன தானதன தானதன தானதன
தத்ததன தானதன தானதன தானதன தனதான
சுற்றகப டோடுபல சூதுவினை யானபல
கற்றகள வோடுபழி காரர்கொலை காரர்சலி
சுற்றவிழ லானபவி ஷோடுகடல் மூழ்கிவரு துயர்மேவித்
துக்கசமு சாரவலை மீனதென கூழில்விழு
செத்தையென மூளுமொரு தீயில்மெழு கானவுடல்
சுத்தமறி யாதபறி காயமதில் மேவிவரு பொறியாலே
சற்றுமதி யாதகலி காலன்வரு நேரமதில்
தத்துஅறி யாமலொடி யாடிவரு சூதரைவர்
சத்தபரி சானமண ரூபரச மானபொய்மை விளையாடித்
தக்கமட வார்மனையை நாடியவ ரோடுபல
சித்துவிளை யாடுவினை சீசியிது நாறவுடல்
தத்திமுடி வாகிவிடு வேனொமுடி யாதபத மருள்வாயே
தித்திமித தீதிமித தீதிமித தீமிதத
தத்ததன தானதன தானனன தானனன
திக்குடுடு டூடமட டாடமட டூடுடுடு எனதாளம்
திக்குமுகி லாடஅரி யாடஅய னாடசிவ
னொத்துவிளை யாடபரை யாடவர ராடபல
திக்கசுரர் வாடசுரர் பாடமறை பாடஎதிர் களமீதே
எத்திசையு நாடியம னார்நிணமொ டாடபெல
மிக்கநரி யாடகழு தாடகொடி யாடசமர்
எற்றிவரு பூதகண மாடவொளி யாடவிடு வடிவேலா
எத்தியொரு மானைதினை காவல்வல பூவைதனை
சித்தமலை காமுககு காநமசி வாயனொடு
ரத்நகிரி வாழ்முருக னேயிளைய வாவமரர் பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/257205143&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"> </p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிகமாக தோல்வியடைந்து இருக்கிறேன்... வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த சஞ்சு சாம்சன்!

மேட்டூர் அணை நிலவரம்!

அம்பேத்கருக்காக ஓடுங்கள், அரசியலமைப்புக்காக ஓடுங்கள்: மாரத்தானை தொடக்கி வைத்த ராகுல் காந்தி!

அஜித் - ஷாலினியின் அமர்க்களம் படத்தின் மறுவெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

