பதச் சேதம் | சொற் பொருள் |
சுருதி மறைகள் இரு நாலும் திசையில் அதிபர் முநிவோர்கள் துகள் இல் இருடி எழு பேர்கள் சுடர் மூவர்
| சுருதி: வேதங்கள்; மறைகள்: உபநிடதங்கள், ஆகமங்கள் முதலானவை; இருநாலும் திசையில் அதிபர்: எட்டு திசைகளின் அதிபர்கள்; துகளில் இருடி எழுபேர்கள்: குற்றமற்ற ஏழு ரிஷிகள் (சப்த ரிஷிகள்); சுடர் மூவர்: அக்கினி, சூரியன் சந்திரன் ஆகிய முச்சுடர்கள்; |
சொல இல் முடிவில் முகியாத பகுதி புருடர் நவ நாதர் தொலைவில் உடுவின் உலகோர்கள் மறையோர்கள்
| சொலவில்: சொல்ல முடியாத; முகியாத: முடியாத; பகுதி புருடர்: பிரகிருதி புருடர்கள்; நவநாதர்: ஒன்பது நாதர்கள்; உடு: விண்மீன்; மறையோர்: வேதம் வல்லார்; |
அரிய சமயம் ஒரு கோடி அமரர் சரணர் சதகோடி அரியும் அயனும் ஒரு கோடி இவர் கூடி
| அரிய சமயம்: அரிதான, அருமையான; அமரர்: தேவர்; சரணர்: அடியார்கள்; சதகோடி: நூறுகோடி; அரியும் அயனும் ஒருகோடி: திருமால், பிரமன் இவர்களோடு மேலும் ஒருகோடிப் பேர்; |
அறிய அறிய அறியாத அடிகள் அறிய அடியேனும் அறிவு உள் அறியும் அறிவு ஊற அருள்வாயே

வரைகள் தவிடு பொடியாக நிருதர் பதியும் அழிவாக மகர சலதி அளறு ஆக முது சூரும்
| வரை: மலை; நிருதர் பதி: அரக்கர்களின் ஊர்கள்; மகர: பெரிய மீன்கள் (வாழும்); சலதி: கடல்; அளறு: சேறு; முதுசூர்: தொன்மையானவனான சூரபத்மன்; |
மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக மவுலி சிதறி இரை தேடி வரு நாய்கள்
| அலகை: பேய்; விஜய வனிதை: விஜய லட்சுமி; மவுலி: கிரீடம், முடி, தலை; |
நரிகள் கொடிகள் பசி ஆற உதிர நதிகள் அலைமோத நமனும் வெருவி அடி பேண மயில் ஏறி
| கொடிகள்: காக்கைகள்; நமன்: யமன்; வெருவி: அஞ்சி |
நளின உபய கர வேலை முடுகு முருக வட மேரு நகரி உறையும் இமையோர்கள் பெருமாளே.
| நளின: தாமரை; உபய: மகிமை; முடுகு: விரைவாக; வடமேரு நகரி: உத்தரமேரூர்; |

சுருதி மறைகள் ... வேதங்களும், உபநிஷதங்கள் முதலான ஆகமங்களும்;

இருநாலு திசையில் அதிபர் முநிவோர்கள் ... எட்டுதிசைகளையும் காக்கும் அஷ்டதிக் பாலர்களும்; முனிவர்களும்

(இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என திக்பாலர்கள் எண்மர்)

துகளில் இருடி யெழுபேர்கள் சுடர்மூவர் ... குற்றமற்ற ஏழு ரிஷிகளும்; சூரியன், சந்திரன், அக்கினி என்ற மூன்று சுடர்களும்;

(அத்ரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கௌதமர், காஸ்யபர், அங்கீரஸர் என்று ரிஷிகள் எழுவர்)

சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர் ... முடிவாக (இவ்வளவுதான் என்று) சொல்ல முடியாத பிரகிருதி புருஷர்களும் (இவர்கள் பிரபஞ்ச மாயையின் அதிகாரிகள்), சித்தர்களில் முதல்வர்களான ஒன்பதுபேரும்;

(சத்தியநாதர், சதோகநாதர், ஆதிநாதர், அனாதிநாதர், வகுளநாதர், மதங்கநாதர்,

மச்சேந்திரநாதர், கடேந்திரநாதர், கோரக்கநாதர் ஆகிய ஒன்பது பேர்களும் குகைகளிலிருந்து சிவனை நோக்கித் தவம்செய்து சித்தர்களானவர்கள். முதன்மையான சித்தர்கள்)

தொலைவில் உடுவின் உலகோர்கள் மறையோர்கள் ...வெகுதொலைவிலுள்ள நட்சத்திர மண்டலங்களில் வாழ்பவர்களும்; வேதம் வல்லவர்களும்;

அரிய சமய மொருகோடி அமரர் சரணர் சதகோடி ... கோடிக்கணக்கான அரிய சமயங்களும்; அடியார்களாக உள்ள பல நூறுகோடிப் பேர்களும்;

அரியும் அயனும் ஒருகோடி யிவர்கூடி ... திருமால், பிரமன், இவர்களைத் தவிர்த்த கோடிக்கணக்கானவர்களும்—அனைவரும் ஒன்றுதிரண்டு,

அறிய அறிய அறியாத அடிகள் அறிய அடியேனும்... எத்தனைதான் முயன்று முயன்று அறிந்துகொண்டாலும், அதற்குமேலும் அறிய முடியாதவையான உனது திருவடிகளை அடியேன்,

அறிவுள் அறியும் அறிவூற அருள்வாயே ... என்னுள்ளேயே அறியும்படியான அறிவு எனக்குள் ஊறும்படியா அருளவேண்டும்.

வரைகள் தவிடு பொடியாக நிருதர் பதியும் அழிவாக ... கிரெளஞ்சம் முதலான பல மலைகள் தவிடுபொடியாகும்படியும்; அசுரர்கள் வாழும் ஊர்களெல்லாம் அழியும்படியும்;

மகர சலதி அளறாக முதுசூரும் மடிய ... மிகப்பெரிய மீன்களான மகரங்கள் வாழும் கடல் வற்றிச் சேறாகும்படியும்; தொன்மையானவனான சூரபத்மன் மடியும்படியும்;

அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக ... பேய்கள் நடனமாடவும்; விஜய லட்சுமி மகிழ்ச்சி அடையவும்;

மவுலி சிதறி இரைதேடி வருநாய்கள் ... அசுரர்களின் தலைகள் சிதறி விழவும்; இரை தேடிவரும் நாய்களும்,

நரிகள் கொடிகள் பசியாற உதிர நதிகள் அலைமோத ... நரிகளும் காக்கைகளும் பசியாறும்படி ரத்தவெள்ளமானது அலைமோதி வீசும்படியாகவும்;

நமனும் வெருவி யடிபேண ... யமனும் பயமடைந்து உனது திருவடிகளைத் துதிக்கவும்;

மயிலேறி நளின வுபய கரவேலை முடுகு முருக ... மயிலில் ஏறிக்கொண்டு, தாமரை போன்றதும், மகிமைவாய்ந்ததும் திருக்கரத்து வேலாயுதத்தை விரைந்து செல்லும்படி எறிகின்ற முருகனே!

வடமேரு நகரி யுறையும் இமையோர்கள் பெருமாளே. ... உத்தரமேரூர் தலத்தில் வீற்றிருப்பவனே! தேவர்களுடைய பெருமாளே!

சுருக்க உரை

கிரெளஞ்சம் முதலான பலமலைகளும் தவிடுபொடியாக; அசுரர்களுடைய ஊர்கள் அழிந்துபட; மிகப்பெரிய மகரமீன்கள் வாழும் கடல் வற்றிச் சேறாக; பேய்கள் நடனமாட; விஜயலட்சுமி மகிழ்ச்சியடைய; அசுரர்களுடைய தலைகள் சிதறிவிழ; இரைதேடி வரும் நாய்கள், நரிகள், காக்கைகள் எல்லாமும் பசியாறும்படி ரத்தவெள்ளம் அலைமோத; யமனும் அச்சம் கொண்டு உனது திருவடிகளிலே வணங்க—

மயிலில் அமர்ந்து மகிமை நிறைந்த தாமரைக் கரத்திலே வேலை எடுத்து, அது விரைந்துசெல்லும்படி வீசுபவனே! உத்தரமேரூர் திருத்தலத்தில் வீற்றிருப்பவனே! தேவர்களுடைய பெருமாளே!

வேதங்களும் ஆகமங்களும் எட்டுதிக்கு பாலர்களும் முனிவர்களும் ஸப்தரிஷிகளும் மூன்று சுடர்களும் பிரகிருதி புருஷர்களும் நவநாதர்களும் நட்சத்திர மண்டலங்களில் வாழ்பவர்களும் வேதம் வல்லோர்களும் கோடிக்கணக்கான சமயங்களும் சிவனடியார்களும் திருமாலும் பிரமனும் அவர்களுக்கு மேலும் பலகோடிப் பேர்களும் கூடி, முயன்று முயன்று அறிய நினைத்தாலும் அறியமுடியாதவையான உனது திருவடிகளை அடியேன் என்னுடைய அறிவின் எல்லைக்குள் அறியக்கூடியதான அறிவு எனக்குள் ஊறும்படி அருளவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழக பாஜக செயல்வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரதமர் மோடி

அதிகமாக தோல்வியடைந்து இருக்கிறேன்... வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த சஞ்சு சாம்சன்!

மேட்டூர் அணை நிலவரம்!

அம்பேத்கருக்காக ஓடுங்கள், அரசியலமைப்புக்காக ஓடுங்கள்: மாரத்தானை தொடக்கி வைத்த ராகுல் காந்தி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை