பதச் சேதம் | சொற் பொருள் |
பாதி மதி நதி போதும் அணி சடை நாதர் அருளிய குமரேசா
| பாதிமதி: பிறைச் சந்திரன்; நதி: கங்கை; போது: மலர்கள்; சடைநாதர்: சிவனார்; |
பாகு கனி மொழி மாது குற மகள் பாதம் வருடிய மணவாளா
| பாகு: வெல்லப் பாகு; |
காதும் ஒரு விழி காகம் உற அருள் மாயன் அரி திரு மருகோனே
| காதும்: கொத்தும்; |
காலன் எனை அணுகாமல் உனது இரு காலில் வழி பட அருள்வாயே

ஆதி அயனொடு தேவர் சுரர் உலகு ஆளும் வகை உறு சிறை மீளா
| அயன்: பிரமன்; சுரர் உலகு: அமரலோகம்; |
ஆடும் மயிலினில் ஏறி அமரர்கள் சூழ வர வரும் இளையோனே

சூதம் மிக வளர் சோலை மருவு சுவாமி மலை தனில் உறைவோனே
| சூதம்: மாமரம்; |
சூரன் உடல் அற வாரி சுவறிட வேலை விட வ(ல்)ல பெருமாளே.
| வாரி: கடல்; சுவறிட: வற்ற |

பாதி மதிநதி போதும் ... பிறை நிலவையும், கங்கை நதியையும், கொன்றைப் பூவையும்,

அணிசடை நாத ரருளிய குமரேசா ... சடையில் அணிந்துள்ள சிவபெருமான் அருளிய குமரேசனே!

பாகு கனிமொழி மாது குறமகள் ... தேன்பாகையும் பழங்களையும் போன்ற மதுரமான மொழிகளைப் பேசும் குறமகளான வள்ளியுடைய,

பாதம் வருடிய மணவாளா ... பாதங்களைப் பிடித்துவிடும் மணவாளனனே!

காது மொருவிழி காகமுற அருள் ... கொத்துகிற காகாசுரன் ஒரேஒரு விழியை மட்டும் உடையவனாக ஆகி (அனைத்துக் காகங்களும் ஒருவிழி கொண்டனவாக ஆக்கிய)

(காகாசுரானக வந்த இந்திரன் குமாரனான ஜயந்தன் சீதாப்பிராட்டியாரின் மார்பில் கொத்த, இராமன் ஒரு புல்லை மந்திரித்து பிரமாத்திரமாக விட, இறுதியில் அடைக்கலம் கேட்ட காகாசுரனும், காக்கையினம் மொத்தமும் ஒரு கண்ணை இழந்த இராமாயண நிகழ்வு)

மாயன் அரி திரு மருகோனே ... இராமனாக அவதரித்த மாயன் ஹரியின் திருமருகனே!

காலனெனை யணுகாமல் ... யமன் என்னை அணுகாதபடி,

உனதிரு காலில் வழிபட அருள்வாயே ... உன்னுடைய இரண்டு திருவடிகளையும் வழிபடும் புத்தியை எனக்குத் தந்தருள்வாயாக.

ஆதி யயனொடு தேவர் ... தொன்மையான பிரமனும், அனைத்து தேவர்களும்,

சுரருலகு ஆளும் வகையுறு சிறைமீளா ... தேவலோகத்தை மீண்டும் ஆள்கின்றபடி அவர்களைச் சூரபத்மன் வைத்த சிறையிலிருந்து மீட்டவனே!

ஆடு மயிலினி லேறி ... நடனம் ஆடும் மயில்மீது ஏறி அமர்ந்து,

அமரர்கள் சூழ வர ... தேவர்கள் புடைசூழ்ந்து வர

வரும் இளையோனே ... அவர்கள் புடைசூழ்ந்த கோலத்தில் வருகின்ற இளையவனே!

சூத மிகவளர் சோலை ... மாமரங்கள் அதிகமாக வளர்ந்த சோலைகள்

மருவு சுவாமிமலைதனில் உறைவோனே ... நிறைந்த சுவாமிமலையில் வீற்றிருப்பவனே,

சூர னுடலற ... சூரனுடைய உடல் மடிந்துவிழ,

வாரி சுவறிட ... கடல் வற்றிப்போக,

வேலை விடவல பெருமாளே. ... வேலினைச் செலுத்தவல்ல பெருமாளே.

சுருக்க உரை

தொன்மையான பிரமனும் அனைத்துத் தேவர்களும் மீண்டும் விண்ணுலகத்தை ஆளும்படி அவர்களைச் சூரபதுமன் வைத்த சிறையிலிருந்து மீட்டவனே! தேவர்கள் புடைசூழ ஆடும் மயிலில் ஏறிவரும் இளையவனே! ஏராளமான மாமரங்கள் வளர்ந்துள்ள சோலைகள் நிறைந்த சுவாமிமலையில் வீற்றிருப்பவனே! சூரனுடைய உடல் கிழிபடுமபடியும், கடல் வற்றிப்போகும்படியும் வேலைச் செலுத்திய பெருமாளே!

இளம்பிறையையும் கங்கையையும் கொன்றை மலர்களையும் சூடிய சடையையுடைய சிவனாருடைய குமாரனே! தேன்பாகும் கனிகளுமென மதுரமான மொழிகளைப் பேசும் குறமகளான வள்ளிப்பிராட்டியின் பாதங்களை வருடிய மணவாளனே! சீதாப்பிராட்டியின் மார்பகத்தைக் கொத்திய காகாசுரன் (ஒருகண்ணை இழந்து) ஒரே கண்ணுடன் இருக்கும்படி புல்லை மந்திரித்து ஏவிய இராமனுடைய மருமகனே! யமன் என்னை அணுகாதபடி உன் பாதங்களைப் பணிந்து வழிபடும் அறிவை எனக்கு அருளவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழக பாஜக செயல்வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரதமர் மோடி

அதிகமாக தோல்வியடைந்து இருக்கிறேன்... வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த சஞ்சு சாம்சன்!

மேட்டூர் அணை நிலவரம்!

அம்பேத்கருக்காக ஓடுங்கள், அரசியலமைப்புக்காக ஓடுங்கள்: மாரத்தானை தொடக்கி வைத்த ராகுல் காந்தி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை