ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா

பகுதி - 207

யானைமுகத்தைக் கொண்ட கணபதிக்கு இளையவனே!  உமையம்மைக்கு மகனே!  எனக்கு ஜபமாலையைத் தந்தருளிய சற்குருநாதா!  திருவாவினன்குடியில் வீற்றிருக்கும் பெருமாளே!

Updated On :8 ஏப்ரல் 2016, 7:36 am

பதச் சேதம்

சொற் பொருள்

அபகார நிந்தை பட்டு உழலாதே

அபகாரம்: தீங்கு; நிந்தை: வசவு;

அறியாத வஞ்சரை குறியாதே

அறியாத: நன்னெறியை உணராத; குறியாதே: கருதாமல்;

உபதேச மந்திர பொருளாலே

உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ

இபமா முகன் தனக்கு இளையோனே

இபம்: யானை; மாமுகன்: பெரிய, உயர்ந்த முகன்;

இமவான் மடந்தை உத்தமி பாலா

ஜெமாலை தந்த சற் குரு நாதா

திருவாவினன் குடி பெருமாளே.

அபகார நிந்தைபட்டு ... மற்றவர்களுக்குச் செய்த தீங்குகளால் வசவுக்கு ஆளாகி

உழலாதே ... துன்பத்தால் உழன்று திரியாமலும்;

அறியாத வஞ்சரை ... நன்னெறியை அறியாத வஞ்சகர்களை

குறியாதே ... மனத்தாலும் கருதாமலும்;

உபதேச மந்திரப் பொருளாலே ... ‘சும்மா இரு சொல்லற’ என்று எனக்கு நீயருளிய உபதேச மந்திரத்தின் பொருளையே கடைப்பிடித்து,

உனை நான் நினைந்து ... நான் எப்போதும் உன்னை நினைத்தபடி

அருள் பெறுவேனோ? ... உன்னுடைய திருவருள் பெறக் கிடைப்பேனோ?

இபமா முகன் ... சிறந்த யானைமுகத்தை உடையவனான கணபதி

தனக் கிளையோனே ... தனக்குத் தம்பியானவனே

இமவான் மடந்தை ... இமயராஜன் மகளான (உமையம்மையாகிய)

உத்தமிபாலா ... உத்தமியின் பிள்ளையே

ஜெபமாலை தந்த ... ஜெபம் செய்யக்கூடிய மாலையை எனக்களித்த

சற் குருநாதா ... நல்ல குரு நாதனே

திருவாவினன் குடி பெருமாளே. ... திருவாவினன்குடி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை

யானைமுகத்தைக் கொண்ட கணபதிக்கு இளையவனே!  உமையம்மைக்கு மகனே!  எனக்கு ஜபமாலையைத் தந்தருளிய சற்குருநாதா!  திருவாவினன்குடியில் வீற்றிருக்கும் பெருமாளே!

பிறருக்குத் தீமை செய்து அதனால் நிந்தனைக்கு ஆளாகித் துன்பத்தில் உழலாமாலும்; நன்னெறியைக் கடைப்பிடிக்காத வஞ்சகரை மனத்தாலும் கருதாமலும்; நீ எனக்கு உபதேசித்த மந்திரத்தின் பொருளைக் கடைப்பிடித்து, உன் திருவருளைப் பெறுவேனோ?  (அப்படிப் பெறுவதற்கு அடியேனுக்குத் துணைசெய்ய வேண்டும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.