தணிகைமணி குகத்திரு வ சு செங்கல்வராய பிள்ளையவர்கள் தன்னுடைய திருப்புகழ் உரை நூலை வெளியிட்டபோது 1304 பாடல்களே கிடைத்திருந்தன. பின்னால் மேலும் சில பாடல்கள் கிடைக்க, இந்த எண்ணிக்கை மெல்லமெல்ல விரிவடைந்து தற்போது 1330-ஐத் தொட்டிருக்கிறது. இவற்றுள் சில பாடல்களுக்கு உரை கிடையாது.
இன்றைய பாடலும் அவ்வாறு கிடைத்த புதிய பாடல்களுள் ஒன்று. சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை, சேலம் வெளியிட்ட திருப்புகழ் பதிப்பில் இடம் பெற்றுள்ளது. இந்தப் பாடலுக்கு kaumaram.com தளத்தில் உரை எழுதப்பட்டிருக்கிறது. (http://kaumaram.com/thiru/nnt1323_u.html). இந்தத் தளத்திலும் இடம்பெறாத ‘வறுமைப் பாழ்பிணி’ என்ற பாடலுக்கு உரையே இல்லை. கனடாவைச் சேர்ந்த திருப்புகழ் அன்பர் குஹத்திரு பேராசிரியர் பசுபதி அவர்கள் அந்தப் பாடலை 2004ம் ஆண்டு அனுப்பி, ‘இதற்கு உரை எழுத முடியுமா’ என்று கேட்டிருந்தார்கள். அதற்கு அடியேன் எழுதிய உரையை இனிவரும் நாட்களில் தருகிறேன். இந்தப் பாடல்களெல்லாம் இன்ன தலத்துக்கானவை என்று வரையறுக்க முடியவில்லை. பொதுப்பாடல்கள் என்றுதான் கொள்ள வேண்டும். இன்றைய பாடல், பழநித் திருப்புகழான ‘கருவில் உருவாகிவந்து’ பாடலை ஒத்திருக்கிறது.
தனதன தான தனதன தான
தனதன தான தனதான
கருவெனு மாயை உருவினில் மூழ்கி
வயதள வாக நிலமீதில்
கலைதெரி வாணர் கலைபல நூல்கள்
வெகுவித மாக கவிபாடித்
தெருவழி போகி பொருளெனு மாசை
திரவியம் நாடி நெடிதோடிச்
சிலைநுதல் மாதர் மயலினில் மூழ்கி
சிறுவித மாக திரிவேனோ
அருளநு போக குருபர னேஉன்
அடியவர் வாழ அருள்வோனே
அரனிரு காதில் அருள்பர ஞான
அடைவினை ஓதி அருள்பாலா
வெருவிடு சூரர் குலஅடி வேரை
விழவிடு சாசு வதிபாலா
மிடலுட லாளர் அடரசுர் மாள
விடுமயில் வேல பெருமாளே.
</p><p> </p><p><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/259174862&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிகமாக தோல்வியடைந்து இருக்கிறேன்... வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த சஞ்சு சாம்சன்!

மேட்டூர் அணை நிலவரம்!

அம்பேத்கருக்காக ஓடுங்கள், அரசியலமைப்புக்காக ஓடுங்கள்: மாரத்தானை தொடக்கி வைத்த ராகுல் காந்தி!

அஜித் - ஷாலினியின் அமர்க்களம் படத்தின் மறுவெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

