உலகத்தில் லோபியரை வெறுத்துப் பாடாத புலவரில்லை.
சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்
என்றார் வள்ளுவர். சான்றோரிடத்தில் போய்ச் சொன்னால் சொன்ன அளவிலே உதவுவார்கள்; கீழ்மக்களோ, கரும்பைச் சாறுபிழிவதுபோலக் கசக்கிப் பிழிந்தால்தான் தருவார்கள் என்கிறார். இவர் இப்படியென்றால்,
இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே
‘என்னிடத்திலே பொருளில்லை என்று சொல்லிக்கொண்டு ஒருவரிடத்திலே போய் நிற்காமல் இருப்பதை நினைப்பீர்களானால், தவம் என்பதையே கற்காமல் இருப்பதையே கற்றவர்களான கயவர்களிடம் சென்று நில்லாதபடி என்னை வைத்திருக்கும் திரிபுரையின் பாதங்களை அடையுங்கள்’ என்கிறார் அபிராம பட்டர்.
இன்றைய சுவாமிமலைத் திருப்புகழும் இதையே பேசுகிறது. அனைத்துத் திசைகளையும் அளந்து, கடலைக் கடந்து, கால்தேய நடந்து நடந்து, கருமிகளை அடைந்து அவர்களைப் புகழ்ந்தபடி நில்லாமையை வேண்டும் பாடல் இது.
தனதனன தந்த தான தனதனன தந்த தான
தனதனன தந்த தான தனதான
கதிரவனெ ழுந்து லாவு திசையளவு கண்டு மோது
கடலளவு கண்டு மாய மருளாலே
கணபணபு யங்க ராஜன் முடியளவு கண்டு தாள்கள்
கவினறந டந்து தேயும் வகையேபோய்
இதமிதமி தென்று நாளு மருகருகி ருந்து கூடு
மிடமிடமி தென்று சோர்வு படையாதே
இசையொடுபு கழ்ந்த போது நழுவியப்ர சண்டர் வாச
லிரவுபகல் சென்று வாடி யுழல்வேனோ
மதுகரமி டைந்து வேரி தருநறவ முண்டு பூக
மலர்வளநி றைந்த பாளை மலரூடே
வகைவகையெ ழுந்த சாம வதிமறை வியந்து பாட
மதிநிழலி டுஞ்சு வாமி மலைவாழ்வே
அதிரவரு சண்ட வாயு வெனவருக ருங்க லாப
அணிமயில்வி ரும்பி யேறு மிளையோனே
அடைவொடுல கங்கள் யாவு முதவிநிலை கண்டபாவை
அருள்புதல்வ அண்ட ராஜர் பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/259175804&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

நெசவு செய்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

அதிரடி சதமடித்து சல்யூட்..! பயிற்சியாளருக்குச் சமர்ப்பித்த சஞ்சு சாம்சன்!

ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

