ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பகுதி - 216

மனிதர்களைப் பாடும் வழக்கத்தை அறியேன் என்று இந்தக் குருடிமலைத் திருப்புகழில் அருணகிரியார் கூறுகிறார்.

Updated On :19 ஏப்ரல் 2016, 6:39 am


மனிதர்களைப் பாடும் வழக்கத்தை அறியேன் என்று இந்தக் குருடிமலைத் திருப்புகழில் அருணகிரியார் கூறுகிறார்.  கோயமுத்தூருக்கு அடுத்த துடியலூர் ரெயில் நிலையத்துக்கு அருகில் உள்ள மலை குருடிமலை.

அருணகிரியார் இத்தனைத் தலங்களுக்கும் நேரில் சென்றிருப்பாரா, அது முடியுமா என்று கேட்பவர்கள் உண்டு.  ‘மனத்திலேயே பயணித்துப் பாடியிருக்கிறார்’ என்பார்கள்.  ஆனால் எத்தனையோ தலங்களைப் பாடுகையில் அந்தந்தத் தலத்துக்கு உரிய விசேடமானவற்றைக் குறிப்பிடுகிறார்.  அருகில் ஓடும் நதியின் பெயர், அந்த இடத்தில் வாழும் குறிப்பிட்ட பிராணிகள் என்றெல்லாம் வரும் குறிப்புகளைப் பார்க்கும்போது இவற்றை நேரில்தான் பார்த்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.  குருடி மலையைப் பாடும்போது அங்குள்ள வருடைகளையும் சொல்கிறார்.  வருடை என்றால் மலை ஆடு.  இப்படி ஒவ்வொரு தலத்துக்கும் உரிய பிராணிகள், ஆறுகளுடைய பெயர்கள் அந்தந்தத் தலத்துக்கான பாடல்களில் இடம்பெறுவதைப் பார்க்கலாம்.

தனன தனதன தனன தனதன
     தனன தனதன        தனதான

கருடன் மிசைவரு கரிய புயலென
கமல மணியென        வுலகோரைக்
கதறி யவர்பெயர் செருகி மனமது
கருதி முதுமொழி        களைநாடித்
திருடி யொருபடி நெருடி யறிவிலர்
செவியில் நுழைவன        கவிபாடித்
திரியு மவர்சில புலவர் மொழிவது
சிறிது முணர்வகை        யறியேனே
வருடை யினமது முருடு படுமகில்
மரமு மருதமு           மடிசாய
மதுர மெனுநதி பெருகி யிருகரை
வழிய வகைவகை        குதிபாயுங்
குருடி மலையுறை முருக குலவட
குவடு தவிடெழ         மயிலேறுங்
குமர குருபர திமிர தினகர
குறைவி லிமையவர்      பெருமாளே

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/259803356&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.