அருணகிரியார் முருகனை தரிசிதுப் பாடிய பற்பல தலங்களிலே ஒன்று ஊதி மலை. கோயமுத்தூரில் தாராபுரத்திலிருந்து காங்கேயத்துக்குப் போகும் வழியிலே உள்ளது. இங்கேதான் சிவபெருமானைக் கொங்கண சித்தர் கண்டு வணங்கினாராம். கொங்கண சித்தர் ‘ஊதி ஊதி’ ரசவாதத்தால் பொன்னைச் செய்ததால் இதன் பெயர் ஊதி மலையென்று இதற்குப் பெயர்க்காரணம் சொல்கிறார்கள். இருந்தாலும் இதன் பெயர்க் காரணம் இன்னதென்று நிச்சயமாகத் தெரியவில்லை. ‘அவனருளாலே அவன்தாள் வணங்கி’ என்றதைப் போல இந்தப் பாடல், முருகனை வணங்குவதற்கு இறைவன் திருவருளைக் கேட்கிறது.
அதுவும் ‘ஆதி அருணேசன் என்று ஆளும் உனையே வணங்க’ அருள் தா என்று கேட்கிறார். அதைத் தொடர்ந்து, சிவனார் காதிலே செய்தருளி உபதேசத்தை அடியேனுக்கும் செய்யவேண்டும் என்ற ஒரு கோரிக்கையையும் வைக்கிறார். பாடலைப் பார்ப்போம்.
தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த தனதான
ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த
ஆவுடைய மாது தந்த குமரேசா
ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று
ஆளுமுனை யேவ ணங்க அருள்வாயே
பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து
பூரணசி வாக மங்க ளறியாதே
பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகையே நினைந்து
போகமுற வேவி ரும்பு மடியேனை
நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபுரிந்து
நீதிநெறி யேவி ளங்க வுபதேச
நேர்மைசிவ னார் திகழ்ந்த காதிலுரை வேத மந்த்ர
நீலமயி லேறி வந்த வடிவேலா
ஓதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து
ஊழியுணர் வார்கள் தங்கள் வினைதீர
ஊனுமுயி ராய் வளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த
ஊதிமலை மீது கந்த பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/259803893&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"> </p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

நெசவு செய்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

அதிரடி சதமடித்து சல்யூட்..! பயிற்சியாளருக்குச் சமர்ப்பித்த சஞ்சு சாம்சன்!

ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

