பதச் சேதம் | சொற் பொருள் |
ஆதி மகமாயி அம்பை தேவி சிவனார் மகிழ்ந்த ஆ உடைய மாது தந்த குமரேசா
| ஆவுடைய மாது: ஆவுடையாள்—பசுவை வாகனமாக உடையவள்; |
ஆதரவு அதாய் வருந்தி ஆதி அருணேசர் என்று ஆளும் உனையே வணங்க அருள்வாயே
| அருணேசர்: அருணம்—சிவந்த; அருணேசன்: செம்பொருளான ஈசன்; |
பூதம் அதுவான ஐந்து பேதம் இடவே அலைந்து பூரண சிவ ஆகமங்கள் அறியாதே
| பூதமதுவான ஐந்து: ஐந்து பூதங்களால் ஆன உடல்; |
பூணு முலை மாதர் தங்கள் ஆசை வகையே நினைந்து போகம் உறவே விரும்பும் அடியேனை
| பூணும்: ஆபரணங்களைப் பூண்ட; |
நீ தயவதாய் இரங்கி நேச அருளே புரிந்து நீதி நெறியே விளங்க உபதேச

நேர்மை சிவனார் திகழ்ந்த காதில் உரை வேத மந்த்ர நீல மயில் ஏறி வந்த வடிவேலா

ஓது மறை ஆகமம் சொல் யோகம் அதுவே புரிந்து ஊழி உணர்வார்கள் தங்கள் வினை தீர
| ஊழி: யுகம்—அல்லது ஊழ்+இ=விதி; |
ஊனும் உயிராய் வளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த ஊதி மலை மீது உகந்த பெருமாளே.
| ஓசையுடன்: புகழுடன்; |

ஆதிமக மாயி யம்பை ...ஆதி என்றும்; மகமாயி என்றும்; அம்பாள் என்றும்;

தேவி சிவனார்மகிழ்ந்த ஆவுடைய மாது ... தேவியென்றும்; சிவபெருமான் மனம் மகிழும் ஆவுடை நாயகியென்றும் நாமங்களைப் பெற்ற உமாதேவியார்—

(ஆவுடைய மாது—திருப்பரங்குன்றத்திலுள்ள உமையம்மைக்கு ஆவுடைய நாயகி என்று பெயர். பசுவை வாகனமாக உடையவள்)

தந்த குமரேசா ... மகனாகப் பெற்றருளி குமரேசனே!

ஆதரவதாய் வருந்தி ... அன்பால் மனம் கசிந்து உருகி,

ஆதியருணேச ரென்று ... ஆதிமுதல்வனும் செம்பொருளுமான ஈசனே என்று (துதித்து),

ஆளும் உனையே வணங்க அருள்வாயே ... அடியார்களை ஆட்கொள்ளும் உன்னை வணங்க அருளவேண்டும்.

பூதமதுவான ஐந்து பேதமிடவே அலைந்து ... பஞ்ச பூதங்களின் வேறுபாட்டால் உருவான இந்த உடலைச் சுமந்துகொண்டு அலைந்து திரிந்து,

பூரண சிவாகமங்கள் அறியாதே ... சிவாகமங்களை முழுமையாக அறிந்து கொள்ளாமல்,

பூணுமுலை மாதர் தங்கள் ... ஆபரணங்களைப் பூண்ட மார்பகங்களை உடைய பெண்களின்மீது

ஆசைவகை யேநி னைந்து ... பலவகைகளிலும் உண்டாகும் ஆசைகளையே நினைத்தபடி,

போகமுறவே விரும்பும் அடியேனை ... இன்பத்தை அனுபவிக்க விரும்புகின்ற என்மீது,

நீதயவதாய் இரங்கி ... நீ பரிவோடு மனமிரங்கி,

நேசவருளே புரிந்து ... மிகுந்த நேசத்துடன் உன்னுடைய திருவருளைச் செய்து,

நீதிநெறியே விளங்க ... நீதி மார்க்கம் விளங்கித் தோன்றுமாறு,

உபதேச நேர்மை ... எனக்குச் செய்வித்த உபதேசத்தின் தன்மையும்,

சிவனார் திகழ்ந்த காதிலுரை ... சிவபெருமானுடைய காதுகளிலே சொன்ன,

வேத மந்த்ர ... ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் தன்மையும் (ஒன்றேயாகும்).

நீலமயி லேறி வந்த வடிவேலா... எனக்கு உபதேசிப்பதற்காகவே நீலமயிலில் ஏறியமர்ந்து வந்த கூர்மையான வேலாயுதத்தைத் தரித்தவனே!

ஓதுமறை யாகமஞ்சொல் ... ஓதப்படும் வேதங்கள், ஆகமங்கள் ஆகியவை கூறும்

யோகமதுவே புரிந்து ... சிவயோகத்தையே கடைப்பிடித்து,

ஊழியுணர்வார்கள் தங்கள் வினைதீர... விதியின் தன்மையை நன்கு உணர்ந்த அடியார்களுடைய எல்லா வினைகளும் தீரும்படி,

ஊனும் உயிராய் வளர்ந்து ... அவர்களுடைய எலும்பு, சதை, ரத்தம், உயிர் அனைத்திலும் கலந்து நின்று,

ஓசையுடன் வாழ்வு தந்த ... அவர்களுக்குப் புகழோடு இயைந்த நல்வாழ்வைத் தருகின்ற,

ஊதிமலை மீது உகந்த பெருமாளே. ... ஊதிமலையின் மேல் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே!

(இதை ஊதிமலை மீது கந்த என்று பிரித்தால், ஊதிமலையில் வீற்றிருக்கும் கந்தனே என்றும்; ஊதிமலை மீதுகந்த என்று சேர்த்தால், ஊதிமலையின் மேல் உகந்து வீற்றிருக்கும் என்றும் பொருள்படும்.)

சுருக்க உரை

ஐம்பூதங்களின் மாறுபட்ட சேர்க்கையாலே உண்டான இந்த உடலைச் சுமந்து, அலைந்து திரிந்து, சிவாகமங்களை முழுமையாக ஓதி உணராமலும்; ஆபரணங்களைப் பூண்ட மார்பகங்களை உடைய பெண்களின்மேல் மையல் கொண்டு இன்பம் துய்க்க விரும்புபவனான என்மீது இரக்கமும் தயவும் கொண்டு நேசத்துடன் அருள்புரிந்து, நீதிமார்க்கம் விளங்கும்படி அடியேனுக்கு உபதேசித்த பொருளும், சிவபெருமானுடைய திருச்செவிகளிலே நீ ஓதியருளிய ப்ரணவத்தின் பொருளும் ஒன்றே.

ஆதி, மகமாயி, அம்பை, தேவி, சிவபிரான் மகிழ்வும் ஆவுடைய நாயகி என்றெல்லாம் போற்றப்படும் அம்பிகையின் குமாரனே! அன்புகொண்டு, மனம் கசிந்து, ஆதி முதல்வனாகவும் செம்பொருளாகவும் விளங்கும் உன்னையே நான் என்றும் வணங்க அருள் பாலிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

நெசவு செய்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

அதிரடி சதமடித்து சல்யூட்..! பயிற்சியாளருக்குச் சமர்ப்பித்த சஞ்சு சாம்சன்!

ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை