ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

பகுதி - 340

யமன் வந்து முன்னே நிற்பதற்கு முன்னால் மனத்தில் பக்தி தோன்றவேண்டும் என்ற கோரிக்கையை, பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்த இந்தத் திருப்புகழ் முன்வைக்கிறது.

Updated On :23 ஆகஸ்ட் 2016, 7:11 am

யமன் வந்து முன்னே நிற்பதற்கு முன்னால் மனத்தில் பக்தி தோன்றவேண்டும் என்ற கோரிக்கையை, பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்த இந்தத் திருப்புகழ் முன்வைக்கிறது.

அடிக்கு 22 எழுத்துகள் கொண்ட இப்பாடலில் ஒவ்வொரு சீரிலும் முதலெழுத்து நெடில்; மூன்றாவது எழுத்து வல்லொற்று.  பாடலைப் பார்ப்போம்.

தானத்த தானத்த தானத்த தானத்த

      தானத்த தானத்த                  தனதான

தோலத்தி யாலப்பி னாலொப்பி லாதுற்ற

         தோளுக்கை காலுற்ற             குடிலூடே

      சோர்வுற்று வாழ்வுற்ற கால்பற்றி யேகைக்கு

         வேதித்த சூலத்த                 னணுகாமுன்

கோலத்தை வேலைக்கு ளேவிட்ட சூர்கொத்தொ

         டேபட்டு வீழ்வித்த               கொலைவேலா

      கோதற்ற பாதத்தி லேபத்தி கூர்புத்தி

         கூர்கைக்கு நீகொற்ற             அருள்தாராய்

ஆலத்தை ஞாலத்து ளோர்திக்கு வானத்த

         ராவிக்கள் மாள்வித்து            மடியாதே

      ஆலித்து மூலத்தொ டேயுட்கொ ளாதிக்கு

         மாம்வித்தை யாமத்தை          யருள்வோனே

சேலொத்த வேலொத்த நீலத்து மேலிட்ட

         தோதக்கண் மானுக்கு            மணவாளா

      தீதற்ற நீதிக்கு ளேய்பத்தி கூர்பத்தர்

         சேவிக்க வாழ்வித்த              பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.