“முற்றா நித்தா அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே” என்ற ஈற்றடியில் முடியும் 11 திருப்புகழ்ப் பாக்களில் ஒன்று இது. இப்பாடல் காஞ்சீபுரம் தலத்துக்கானது. இதற்கு முன்னால் இந்த வரிசையில் ‘உற்பாதப்பூ’ (19ம் தவணை), ‘எற்றா வற்றா’ (148ம் தவணை), ‘செட்டா கத்தே’ (256ம் தவணை) ஆகிய பாடல்களைப் பார்த்திருக்கிறோம். இந்த வரிசையில் இன்றைய பாடலை நான்காவதாகப் பார்க்கிறோம்.
அடிக்கு ஒற்றொழித்துப் பதினாறு எழுத்துகளும்; 2, 4, 6, 8, 10, 12 ஆகிய எழுத்துகள் நெடிலாகவும்; ஒற்று சேர்த்து 2, 5, 8, 11, 14, 17 ஆகிய எழுத்துகள் வல்லொற்றாகவும் அமைந்த பாடல்.
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தா தனதான
கொத்தார் பற்கா லற்றே கப்பாழ்
குப்பா யத்திற் செயல்மாறிக்
கொக்கா கிக்கூ னிக்கோல் தொட்டே
கொட்டா விக்குப் புறவாசித்
தித்தா நிற்றார் செத்தார் கெட்டேன்
அஆ உஉ எனவேகேள்
செற்றே சுட்டே விட்டே றிப்போ
மப்பே துத்துக் கமறாதோ
நித்தா வித்தா ரத்தோ கைக்கே
நிற்பாய் கச்சிக் குமரேசா
நிட்டூ ரச்சூர் கெட்டோ டப்போர்
நெட்டோ தத்திற் பொருதோனே
முத்தா ரத்தோ ளிற்கோ டற்பூ
முட்டா திட்டத் தணிவோனே
முற்றா நித்தா அத்தா சுத்தா
முத்தா முத்திப் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ், தமிழ்நாடு என்றாலே பாஜகவுக்கு வெறுப்பு : மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் 18,000 பாலியல் வழக்குகள் பதிவு: எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

காரைக்குடி தொகுதி ஒரு குடும்பத்தின் பிடியில் இருப்பதால் வளா்ச்சியில்லை: அண்ணாமலை யாரை சொல்கிறார்..?

அண்ணாமலை கூட்டணிக்காக முழு உழைப்பைக் கொடுக்கிறார்: எடப்பாடி பழனிசாமி
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

