பதச் சேதம் | சொற் பொருள் |
| சீரான கோலகால நவ மணி மால் அபிஷேக பார வெகு வித தேவாதி தேவர் சேவை செயு முக மலர்ஆறும் | கோலகால: கோலாகல; அபிஷேக(ம்): (ஆகுபெயராக) கிரீடம் (விளக்கத்தில் காண்க); வெகுவித: பலவகைப்பட்ட; சேவைசெயும்: சேவிக்கின்ற; |
| சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும் நீளும் வரி அளி சீராகம் ஓதும் நீப பரிமள இருதாளும் | சீர்ஆடு: சிறப்புற்ற; வீரமாது: வீரலக்ஷ்மி; மருவிய: பொருந்தியுள்ள; வரி அளி: வரிகளைக் கொண்ட வண்டு—வரிவண்டு; சீராகம்: ஸ்ரீராகம்; நீப(ம்): கடப்ப மலர்; பரிமள(ம்): நறுமணம்; |
| ஆராத காதல் வேடர் மடமகள் ஜீமூதம் ஊர் வலாரி மடமகள் ஆதார பூதமாக வலம் இடம் உறைவாழ்வும் | ஆராத: தீராத, முடிவற்ற; ஜீமூதம்: மேகம்; ஜீமூதம் ஊர்: மேகத்தை வாகனமாககக் கொண்ட; வலாரி: வலன் என்ற அசுரனைக் கொன்ற இந்திரன்; ஆதாரபூதமாக: (அடியார்களுக்குப்) பற்றுக்கோடாக; உறைவாழ்வு: உறைகின்ற திருக்கோலம்; |
| ஆராயும் நீதி வேலும் மயிலும் மெய்ஞான அபிராம தாப வடிவமும் ஆபாதனேனும் நாளும் நினைவது பெறவேணும் | அபிராம: பேரழகு வாய்ந்த; தாப வடிவம்: (பிர)தாப வடிவம்—கீர்த்தியுள்ள திருவுருவம்; ஆ-பாத-னேன்: அந்தப் பாதத்தைப் போல (கீழ்ப்பட்ட நான்); |
| ஏர் ஆரும் மாட கூட மதுரையில் மீது ஏறி மாறி ஆடும் இறையவர் ஏழேழு பேர்கள் கூற வருபொருள் அதிகாரம் | ஏர்: அழகு; ஆரும்: நிறைந்த; மாறி ஆடும் இறையவர்: கால்மாற்றி, வலதுபாதம் தூக்கி ஆடும் இறைவர்; ஏழேழு பேர்கள்: நாற்பத்தொன்பது புலவர்கள்; கூறவரு: உரையைச் சொல்லிவந்த; பொருளதிகாரம்: இறையனார் அகப்பொருள் என்ற நூலின் உரை; |
| ஈடாய ஊமர் போல வணிகரில் ஊடாடி ஆலவாயில் விதி செய்த லீலா விசார தீர வரதர குருநாதா | ஈடுஆய: தகுதிவாய்ந்த; ஊமர்: ஊமை; வணிகரில் ஊடாடி: வணிகர் குலத்தில் தோன்றி; ஆலவாய்: மதுரை; லீலா: திருவிளையாடல்; விசார: விசாதித்த; வரதர: வரம் தரும்; |
| கூர் ஆழியால் முன் வீய நினைபவன் ஈடேறுமாறு பாநு மறைவுசெய் கோபாலராய நேயம் உளதிரு மருகோனே | கூர்ஆழி: சக்கரப் படை; வீய: அழிய, இறந்து போக எண்ணிய—அர்ச்சுனன்; பாநு: சூரியனை; கோபால ராய: கோ-பால ராஜன். இடையர்களின் அரசன்; |
| கோடாமல் ஆரவார அலை எறி காவேரி ஆறு பாயும் வயலியில் கோனாடு சூழ் விராலி மலைஉறை பெருமாளே. | கோடாமல்: தவறாமல்; வயலி: வயலூர்; கோனாடு சூழ் விராலிமலை: கோனாட்டைச் சூழ்ந்து இருப்பதாகிய விராலிமலை. |

சீரான கோலகால நவ மணி மால் அபிஷேக பார ... வரிசையானதும்; கோலாகல (அலங்காரமான) நவரத்தினங்கள் பதிக்கப்பட்டதுமான கிரீடங்களுடைய பாரத்தைத் தாங்கியிருப்பவையும்;

(அபிஷேகம் என்பது எப்போதும் உச்சியிலிருந்து செய்யப்படுவதால், உச்சியில் சூடுகின்ற கிரீடத்துக்கு ஆகி வந்தது.)

வெகு வித தேவாதி தேவர் சேவை செயு முக மலர் ஆறும் ... பல்வேறுபட்ட தேவர்களும் அவர்களுக்கு அதிதேவர்களும் வந்து சேவிக்கின்ற ஆறு திருமுகங்களையும்;

சீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும் ... சிறப்புமிக்கதான வீரலக்ஷ்மி குடிகொண்டிருப்பதாகிய பன்னிரண்டு தோள்களையும்;

நீளும் வரி அளி சீராகம் ஓதும் நீப பரிமள இரு தாளும் ...நீண்ட வரிகளை உடைய வண்டுகள் ஸ்ரீராககத்தில் (ஸ்ரீராகமாகிய ராகத்தில்) ரீங்கரிப்பதான கடப்ப மலர்களின் மணம் கமழ்கின்ற இரண்டு திருவடிகளையும்;

ஆராத காதல் வேடர் மட மகள் ஜீமூதம் ஊர் வலாரி மட
மகள் ... என்றும் தீராத காதலை உடையவளும், வேடர் குல இளமகளுமான வள்ளியும்; மேகத்தை (ஜீமுதம்) வாகனமாகக் கொண்டவனும்; வலன் என்ற அசுரனைக் கொன்றவனுமான இந்திரனுடைய மகளான தேவானையும்;

ஆதார பூதமாக வலம் இடம் உறை வாழ்வும் ... அடியார்களுக்குப் பற்றுக் கோடாக உன்னுடை வலது, இடதுபுறங்களில் விளங்குவதான திருக்கோலக் காட்சியும்;

ஆராயும் நீதி வேலும் மயிலும் ... நீதியை ஆராய்ந்த பரிபாலிப்பதான உன்னுடைய வேலையும், மயிலையும்;

மெய்ஞ் ஞான அபிராம தாப வடிவமும் ... பேரழகு கொண்டதும், மெய்ஞ்ஞான வடிவினன் என்று புகழ்பெற்றதான உன்னுடைய திருவுருவத்தையும்;

ஆபாதனேனும் நாளும் நினைவது பெற வேணும் ... (கீழ்ப்பட்டதாகிய பாதங்களைப் போல) கீழ்ப்பட்டவனான நானும்கூட தினந்தோறும்—மேலே சொல்லியுள்ள அனைத்தையும்—மனத்தில் இருத்தி தியானிக்கும் பேறு கிடைக்கும்படியாக வேண்டுகிறேன்.

ஏர் ஆரும் மாட கூட மதுரையில் மீது ஏறி மாறி ஆடும்
இறையவர் ... அழகு திகழும் மாடகூடங்கள் உள்ள மதுரையம்பதியிலே வெள்ளியம்பலத்திலே (எங்குமில்லாத விதத்தில்) வலது பாதத்தை உயர்த்தி, கால்மாற்றி ஆடுகின்ற (சிவபெருமான் இயற்றியதாகிய ‘இறையனார் அகப்பொருள்’ என்ற நூலுக்கு)

ஏழேழு பேர்கள் கூற வரு பொருள் அதிகாரம் ... (சங்கப் புலவர்கள்) நாற்பத்தொன்பது பேர்கள் சொன்ன பொருளதிகாரத்தின் (சரியான பொருள் இதுதான் என்று தெளிவுபடுத்துவதற்காக)

ஈடாய ஊமர் போல வணிகரில் ஊடாடி ... (ஊமர்போல ஈடாய வணிகர் என்று அன்வயம்) தகுதியுள்ளதான வணிகர் குலத்திலே ஊமைப்பிள்ளையாகத் தோன்றி

(சோமசுந்தரேசர் சொற்படி மதுரையில் தனபதி செட்டியார் என்பவருடைய மகனாக வந்து அவதரித்து உருத்திரசென்மர் (ருத்ரஜன்மர்) என்ற பெயர் படைத்த சிறுவனை அழைத்துத் தொழுது சங்கப் பலகையில் அமர்த்தி இந்தக் கேள்வியை அவன் முன் வைக்க, நக்கீரர், கபில பரணர் ஆகிய மூவரின் உரையே சிறந்தது என்று முகக்குறிப்பால் உணர்த்திய செய்தி சொல்லப்படுகிறது—இதை சேவல் விருத்தத்தின் நான்காம் பாடலிலும் பார்த்தோம்.)

ஆலவாயில் விதி செய்த லீலா விசார தீர வரதர குருநாதா ... ஆலவாய் எனப்படும் தலமாகிய மதுரையில் உண்மையான பொருளை நிலைநாட்டிய திருவிளையாடலைப் புரிந்த தீரனே, வரங்களைத் தருபவனே, குருநாதனே!

முன் வீய நினைபவன் ஈடேறுமாறு கூர் ஆழியால் பாநு
மறைவு செய் ... முன்னர் (பாரதப் போரின்போது) இறந்து போக எண்ணியவனான அர்ச்சுனன் உய்வடையும்று, தன்னுடைய சுதர்சன சக்கரத்தால் சூரியனை மறையச் செய்த

கோபாலராய நேயம் உள திரு மருகோனே ... கோக்களை (மாடுகளை) பாலனம் செய்யும் இடையர்களுடைய ராஜனாக வந்த கண்ணனாக அவதரித்த திருமாலுடைய நேசத்தைப் பெற்றவனான மருமகனே!

கோடாமல் ஆரவார அலை எறி காவேரி ஆறு பாயும்
வயலியில் ... இடைவிடாமல் ஆரவாரித்தபடி அலைகளை வீசிப் பாயும் காவேரி ஆறு பாய்கின்ற வயலூரிலும்,

கோனாடு சூழ் விராலி மலை உறை பெருமாளே. ... கோனாடு என்னும் தலத்தைச் சூழ்ந்திருப்பதான விராலி மலையிலும் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

மதுரையில் வெள்ளியம்பலத்தில் கால்மாற்றி ஆடும் சிவபெருமான் இயற்றிய நூலுக்குச் சங்கப் புலவர்கள் நாற்பத்தொன்பது பேர் இயற்றிய உரையில் சிறந்தது எது என்பதை முகக்குறிப்பால் உணர்த்திய, வணிககுலத்தில் ஊமையாய் அவதரித்த திருவிளையாடலை நடத்திய தீரனே, குருநாதனே! பாரதப் போர் நடக்கும்போது (ஜெயத்ரதனை மறுநாள் சூரிய அத்தமனத்துக்குள் கொல்லாவிட்டால், தான் தீப்பாயப் போவதாய்) இறக்கவும் துணிந்த அர்ச்சுனன் உய்வடையுமாறு தன்னுடைய சக்கரப் படையால் சூரியனை மறைத்த கண்ணனாக அவதரித்த திருமாலுடைய நேசத்துக்கு உரிய மருமகனே! காவேரி பாயும் வயலூரிலும், கோனாடு என்னும் தலத்தைச் சூழ்ந்திருக்கும் விராலிமலையிலும் வீற்றிருப்பவனே!

வரிசையானதும், மணிகள் பொருந்தியதுமான உன்னுடைய மகுடத்தையும்; பல்வகையான தேவர்கள் போற்றுகின்ற ஆற முகங்களையும்; வீரலட்சுமி குடியிருப்பதான பன்னிரு தோள்களையும்; வண்டுகள் இசைபாடி ரீங்கரித்துப் பொலிகின்ற கடப்ப மலர்களால் அர்ச்சிக்கப்பட்ட (அந்த மலர்களுடைய வாசம் கமழ்கின்ற) உன் திருப்பாதங்களையும்; உன்மேல் அளவற்ற காதல் கொண்டவர்களான குறமகள் வள்ளியும், இந்திரன் திருமகள் தேவசேனையும், அடியார்களுக்குப் பற்றுக் கோடாக உன்னுடைய இரண்டு பக்கங்களிலும் உறைந்திருக்கும் திருக்கோலக் காட்சியையும்; வேலையும் மயிலையும்; உன்னுடைய மெய்ஞ்ஞனா சொரூபத்தையும், கடையேனாகிய நான்கூட மனத்துள் என்றும் இருத்தித் தவறாமல் தியானிக்கும் பேற்றை அருள வேண்டுகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அடைபட்ட நீா்வழிப்பாதைகளால் குளங்களில் நீா் நிரம்புவதில் சிக்கல்
நாகப்பட்டினம் புதிய கடற்கரை மேம்படுத்தப்படுமா?

முதல் நாள் அறிவிப்பு; மறுநாளே ரத்து! பேசுபொருளாகும் விஜய்யின் பிரசாரம்!
இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில்...
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை