மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தாஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!

பகுதி - 149

வலிய பகைவர்களுடைய தாடையில் குத்தி, அம்புசெலுத்தி அவர்களுடைய பற்களை உதிர்ப்பவனே!

Updated On :11 பிப்ரவரி 2016, 10:28 am

பதச் சேதம்

சொற் பொருள்

எற்றா வற்றா மட்டாக தீயில் காய் செம் கண் பிறை வாள் எற்றா: எற்றி, உதைத்து மோதி; வற்றா, மட்டாகத் தீயில் காய்: தீயும் குறைவுபடும்படி வற்றாத தழலாகத் தகிக்கும்;
எயிற்றார் கை பாசத்தே கட்டு ஆடி கோபித்து கொடு போ முன் எயிற்றார்: பல்லை உடையவர்; கைப்பாசத்தே: கையிலுள்ள பாசக் கயிற்றால்; கொடு போமுன்: கொண்டு போகும் முன்;
உற்றார் பெற்றார் சுற்றா நிற்பார் ஒட்டோம் விட்டு கழியீர் என்று சுற்றாநிற்பர்: சுற்றிலும் நிற்பவர்கள்; ஒட்டோம்: பிரிவைத் தாங்க மாட்டோம்; விட்டுக் கழியீர்: எங்களைப் பிரிந்து போய்விடாதீர்கள்;
உற்று ஓதுற்றே பற்றா நிற்பார் அ காலத்துக்கு உறவு ஆர் தான் உற்று: நெருங்கி; ஓது உற்றே: சொல்லியே; பற்றா நிற்பர்: பற்றியபடி நிற்பர்; அக்காலத்துக்கு: யமன் கொண்டுபோகும் காலத்துக்கு;
பற்றார் மல் தாடைக்கே குத்தா பல் தான் அப்பில் களைவோனே பற்றார்: பகைவர்கள்; மல்: வலிமையுடைய; குத்தா: குத்தி; அப்பில்: அம்பில்—வலித்தல் விகாரம்; களைவோனே: நீக்குபவனே, உதிர்ப்பவனே;
பச்சு ஏனல் கானத்தே நிற்பாள் பொன் பாதத்தில் பணிவோனே பச்சு: பசிய; ஏனல் கானத்தே: தினைப்புனத்தில்; நிற்பாள்: வள்ளியின்;
முற்றா வற்றா மெய் போதத்தே உற்றார் சித்தத்து உறைவோனே முற்றா: முதிர்ந்து; வற்றா: வற்றாத; மெய்போதத்தே உற்றார்: மெய்ஞான நிலையில் நின்றார்;
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே. முத்தா: முக்தனே; முத்தீ அத்தா: முத்தழல் நாயகனே; சுத்தா: பரிசுத்தனே; முத்தா முத்தி: மேலான முக்தியை அளிக்கும்;

எற்றா வற்றா மட்டாகத் தீயில் காய் செம் கண் ... எற்றி உதைப்பவர்கள்; நெருப்புகூட இவர்களுடைய கண்களின் சிவப்புக்கு முன்னால் குறைந்து போகும்படி சிவந்த விழிகளை உடையவர்கள்;

பிறைவாள் எயிற்றார் கைப் பாசத்தே கட்டு ... பிறையைப் போல வளைந்து கூர்மையான பற்களை உடையவர்களான யமதூதர்கள், தங்களுடைய கையிலுள்ள பாசக் கயிற்றால் கட்டி,

ஆடிக் கோபித்துக் கொடுபோமுன் ... ஆட்டி வைத்து, கோபத்துடன் (அதட்டியபடி) என்னைக் கொண்டுபோவதற்கு முன்பாக

உற்றார் பெற்றார் சுற்றா நிற்பார் ஒட்டோம் விட்டுக் கழியீர் என்று ... உற்றார், உறவினர், நண்பர்கள் பெற்றோர், சூழ்ந்துகொண்டு நிற்பவர்கள் எல்லோரும், ‘உங்களுடைய பிரிவைத் தாங்கமாட்டோம், பிரிந்து போகாதீர், போகாதீர் என்று—

உற்று ஓதுற்றே பற்றா நிற்பார் ... அருகில் நெருங்கி நின்றபடிச் சொல்லியவண்ணம் பற்றோடு அன்புகாட்டியபடி நிற்பார்கள்;

அக் காலத்துக்கு உறவு ஆர்தான் ... (யமதூதர்கள் வந்து கொண்டுபோகின்ற) அந்தச் சமயத்துக்குத் தேவரீரை அல்லாமல் வேறு யார்தான் உறவாக நிற்பார்கள், நிற்கமுடியும்?

பற்றார் மல் தாடைக்கே குத்தா பல் தான் அப்பில் களைவோனே ... வலிய பகைவர்களுடைய தாடையில் குத்தி, அம்புகளைச் செலுத்தி அவர்களுடைய பற்களை உதிர்ப்பவனே!

பச்சு ஏனல் கானத்தே நிற்பாள் பொற பாதத்திற் பணிவோனே ...பசிய தினைப்புனத்தைக் காத்தபடி நிற்பவளான வள்ளியின் அழகான பாதங்களில் பணிந்து வணங்குபவனே!

முற்றா வற்றா மெய்ப்போ தத்தே யுற்றார் சித்தத் துறைவோனே ... முதிர்ச்சி பெற்றதும்; என்றும் வற்றாததுமான மெய்ஞ்ஞான நிலையில் நீங்காமலிருப்பவர்களுடைய மனத்தில் வீற்றிருப்பவனே!

முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே. ...முக்தனே, முத்தை ஒத்தவனே!  (ஆகவனீயம், காருகபத்தியம், தட்சிணாக்கினி என்ற) மூன்று வகைத் அக்கினிக(ளால் செய்யப்படும் வேள்விக்குத்) தலைவனே! முக்தியை அருளுகின்ற பெருமாளே!

சுருக்க உரை

வலிய பகைவர்களுடைய தாடையில் குத்தி, அம்புசெலுத்தி அவர்களுடைய பற்களை உதிர்ப்பவனே!  பசிய தினைப்புனத்தைக் காத்து நின்றவளான வள்ளியம்மையை வணங்குபவனே!  முதிர்ச்சி பெற்றதும், என்றும் குறைவுபடாததுமான மெய்ஞ்ஞான நிலையில் இருப்பவர்களுடைய மனங்களில் வீற்றிருப்பவனே! முத்தை ஒத்தவனே!  மூன்று அக்கினிகளால் செய்யப்படும் வேள்விகளின் தலைவனே!  முக்தியை அருளும் பெருமாளே!

எட்டி உதைப்பவர்களும்; நெருப்பும் தன் ஒளியில் மட்டுப்படுமாறு சிவந்த விழிகளை உடையவர்களும்; பிறைபோல வளைந்த கூர்மையான பற்களை உடையவர்களுமான யம தூதர்கள் என்னைக் கொண்டுபோவதற்கு முன்னாலே, சுற்றத்தாரும், பெற்றோரும், சுற்றி நிற்பவர்களும், ‘உங்களைப் பிரிவதை எங்களால் தாங்க முடியாது.  ஆகவே பிரியாதீர், பிரியாதீர்’ என்று என்னைப் பிரிய மனமின்றிச் சுற்றி நிற்கும் அந்த இறுதிக் கட்டத்திலே உம்மைத் தவிர எனக்கு உறவென்று யார்தான் இருப்பார்கள், இருக்கமுடியும்?

இப்படியொரு மரணம் சம்பவிப்பதற்கு முன்னர் எனக்கு உற்ற துணையாக வந்து தேவரீரே நின்றருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.