மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தாஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!
/

பகுதி - 150

போரில் பகைவென்று சினந்தணிந்து நின்ற தலமான திருத்தணித் திருப்புகழ் இது.  திருப்புகழுடைய ஆற்றல் எப்படிப்பட்டது என்பதைச் சொல்கிறது.  இது யாருக்கெல்லாம்

Updated On :11 பிப்ரவரி 2016, 10:38 am

போரில் பகைவென்று சினந்தணிந்து நின்ற தலமான திருத்தணித் திருப்புகழ் இது.  திருப்புகழுடைய ஆற்றல் எப்படிப்பட்டது என்பதைச் சொல்கிறது.  இது யாருக்கெல்லாம் நெருப்பு, யாரையெல்லாம் அணைத்துக் காப்பது என்று பாடுகிறது இந்தப் பாடல்.  நூலின் உள்ளேயே, நூலின் பெயரான ‘திருப்புகழ்’ என்பது விளங்கித் தோன்றும்படியாக நிற்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. 

நாம் தொடக்கத்திலேயே குறிப்பிட்டதுபோல, இன்று விளங்கி வரும் பெருமைக்குரிய பல நூல்களுக்கு அந்த நூலின் ஆசிரியர்கள் வைத்த பெயர் இன்று நிலவி வரவில்லை.  திருக்குறளுக்கு அதன் ஆசிரியர் பெயரே சூட்டவில்லை; பின்னால் வந்தவர்கள் அதன் இலக்கணத்தின் அடிப்படையில், குறள், திருக்குறள் என்று பெயர் வைத்தார்கள்.  அதன்பெயர் காலந்தோறும் மாறி வந்திருக்கிறது. 

கம்பன் தன் காவியத்துக்கு வைத்த இராமகாதை என்ற பெயரே மறைந்துபோய் அவன் பெயராலேயே இன்று அந்நூல் அறியப்படுகிறது.  திருப்புகழுடைய பெயர் இறைவன் வைத்தது என்பதால், நூல் உருவாகிக்கொண்டிருக்கும்போதே, முற்றுப்பெறாத சமயத்திலேயே அதற்குத் திருப்புகழ் என்ற பெயர் சூட்டப்பட்டுவிட்டது என்பதைக் காட்டும் பாடல்களில் ஒன்று இது.  இந்தப் பாடல் தரும் உறுதிமொழி யாரைத்தான் வசீகரிக்காது!

தனத்தன தனத்தந் தனத்தன தனத்தந்
தனத்தன தனத்தந் - தனதான

சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்
  செகுத்தவ ருயிர்க்குஞ் - சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
  திருப்புகழ் நெருப்பென் - றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
  நிசிக்கரு வறுக்கும் - பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
  நிறைப்புக ழுரைக்குஞ் - செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
  தகுத்தகு தகுத்தந் - தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
  தளத்துட னடக்குங் - கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
  சிரித்தெரி கொளுத்துங் - கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
  திருத்தணி யிருக்கும் - பெருமாளே.

</p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/246508452&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.