பதச் சேதம் | சொற் பொருள் |
| சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும் செகுத்தவர் உயிர்க்கும் சினமாக | சினத்தவர்: கோபித்தவர்; முடிக்கும்: தலைக்கும்; பகைத்தவர்: பகைகொண்டவர்; குடிக்கும்: குலத்துக்கும்; செகுத்தவர்: கொல்பவர்களுடைய, வாட்டுபவர்களுடைய; |
| சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பு என்று அறிவோம் யாம் | |
| நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும் நிசி கரு அறுக்கும் பிறவாமல் | நிசிக்கரு: இருண்டதாகிய பிறவி என்னும் கரு; பிறவாமல் அறுக்கும். |
| நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் இடிக்கும் நிறை புகழ் உரைக்கும் செயல் தாராய் | பொருப்பு: மலை; |
| தனத்தன.......தன பேரி | பேரிகையின் முழக்கம். |
தடுட்டுடு............துடி முழக்கும் தளத்துடன் நடக்கும் கொடு சூரர் | துடி என்னும் உடுக்கைப் பறையின் முழக்கம் தளத்துடன்: போருக்கான சேனைகளுடன்; கொடு சூரர்: கொடிய சூரர்களை; |
| சினத்தையும் உடல் சங்கரித்து அ மலை முற்றும் சிரித்து எரி கொளுத்தும் கதிர் வேலா | உடல் சங்கரித்து: உடலை ஸம்ஹரித்து, அழித்து; அ மலை: அந்த மலை(போன்ற உடற்குவியல்); |
| தினை கிரி குற பெண் தனத்தினில் சுகித்து எண் திருத்தணி இருக்கும் பெருமாளே. | தினைகிரி: தினை விளையும் மலையில்; எண் திருத்தணி: எண்ணப்படும், போற்றப்படும் திருத்தணி |

சினத்தவர் முடிக்கும் ... (அடியவர்களிடத்திலே) சினம்கொள்பவர்களுடைய தலைக்கும்;

பகைத்தவர் குடிக்கும் ... (அந்த அடியவர்களைப்) பகைப்பவர்களுடைய குலத்துக்கும்;

செகுத்தவர் உயிர்க்கும் ... (அந்த அடியவர்களுடைய உயிரை) வாட்டுபவர்களுடைய உயிருக்கும்;

சினமாகச் சிரிப்பவர் தமக்கும் ... (அடியவர்களைப் பார்த்துக்) கோபமாகச் சிரிப்பவர்களுக்கும்,

பழிப்பவர் தமக்கும் ... அவர்களைப் பழிக்கின்றவர்களுக்கும்

திருப்புகழ் நெருப்பென்று அறிவோம்யாம் ...... திருப்புகழே நெருப்பாக எழுந்து (அவர்களை வேரறக் களையும்) என்று நாம் நன்கறிவோம்.

நினைத்தது மளிக்கும் ... (அடியார்கள்) நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் தரவல்லதும்;

மனத்தையு முருக்கும் ... (பாடுபவர், கேட்பவர்) மனங்களை உருக்கவல்லதும்;

பிறவாமல் நிசிக்கரு அறுக்கும் ... இனி ஒரு தாய்வயிற்றில் பிறக்காமல், இருள் நிறைந்ததான கருக்குழியில் விழுவதான துன்பத்தை வேரறுப்பதும்;

நெருப்பையு மெரிக்கும் ... எதைவேண்டுமானாலும் பொசுக்கக்கூடிய நெருப்பையே பொசுக்கக்கூடியதும்;

பொருப்பையு மிடிக்கும் ... மலைகளையும் இடித்துத் தூளக்க வல்லதும்;

நிறைப்புகழ் ... அனைத்துப் பொருளும் நிறைந்து விளங்கும் திருப்புகழை

உரைக்குஞ் செயல்தாராய் ... ஓதுகின்ற நற்செயலைப் பணித்து அருள்வாய்.

தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந் தகுத்தகு தகுத்தந்தன ... என்ற ஒலியோடு

பேரி ... பேரிகைகள் முழங்க;

தடுட்டுடு டுடுட்டுண் டென ... என்ற ஒலியோடு

துடி முழக்கும் ... உடுக்கைப் பறைகள் முழங்க;

தளத்துட னடக்கும் ... சேனைகளுடன் போருக்கு அணிவகுத்து வந்த

கொடுசூரர் சினத்தையும் ... கொடிய சூரன் முதலான அசுரர்களுடைய கோபத்தையும்,

உடற்சங் கரித்தம லைமுற்றும் ... அவர்களுடைய உடல்களையும் ஒன்றுபோல அறுத்து எறிந்து கொன்று குவித்திருக்கும் பிணமலை எல்லாவற்றையும்,

சிரித்தெரி கொளுத்தும் கதிர்வேலா ... வெறும் புன்னகை பூத்து அதனாலே முற்றிலும் எரித்துச் சாம்பலாக்கிய ஒளிபடைத்த வேலை ஏந்துபவனே!

தினைக்கிரி குறப்பெண் ... தினை விளையும் மலையைச் சேர்ந்த குறப்பெண்ணான வள்ளியை,

தனத்தினில் சுகித்து ...மார்போடு தழுவிக்கொண்டு மகிழ்பவனே

எண் திருத்தணி யிருக்கும் பெருமாளே. ... எண்ணிப் போற்றப்படும் திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே

சுருக்க உரை

பேரிகை, உடுக்கைப்பறை இவற்றின் பேரொலி முழங்க, படைகளைத் திரட்டிக்கொண்டு போருக்கு வந்த சூரர்களை அழித்து, (அதனால் குவிந்த) பிணமலையை ஒரு புன்னகையால் கொளுத்தி எரித்தவனே! தினைவிளையும் மலைகளைச் சேர்ந்த குறப்பெண்ணான வள்ளியை மார்பு இறுகத் தழுவிக்கொண்டு மகிழ்பவனே! உயர்ந்தோர் மதித்துப் போற்றும் திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே!

அடியாரிடம் கோபம் கொள்பவர்களுடைய தலைக்கும்; பகைமை கொண்டவர்களுடைய குலத்துக்கும்; உயிரை வதைப்பவர்களுடைய உயிருக்கும்; சிரிப்பவர்களுக்கும் பழிப்பவர்களுக்கும் திருப்புகழே நெருப்பாக எழுந்து வினையாற்றும் என்பதை நாம் அறிவோம். இந்தத் திருப்புகழ் அடியார் நினைத்ததை எல்லாம் தரும்; பாடுபவர், கேட்பவர் மனங்களையெல்லாம் உருக்கும்; இருண்ட கருக்குழியில் விழாமல் பிறப்பை அறுக்கும்; நெருப்பையும் எரிக்கும்; மலைகளை இடித்துப் பொடியாக்கும் என்பதையெல்லாமும் அறிவோம்.

எனவே முருகப்பிரானே, உன்னுடைய திருப்புகழை எப்போதும் ஓதுகின்ற பணியைத் தந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அடைபட்ட நீா்வழிப்பாதைகளால் குளங்களில் நீா் நிரம்புவதில் சிக்கல்
நாகப்பட்டினம் புதிய கடற்கரை மேம்படுத்தப்படுமா?

முதல் நாள் அறிவிப்பு; மறுநாளே ரத்து! பேசுபொருளாகும் விஜய்யின் பிரசாரம்!
இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில்...
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை