பதச் சேதம் | சொற் பொருள் |
| சாவா மூவா வேளே போல்வாய் தாள் ஆவேனுக்கு அருள் கூரும் | சாவா: சாவாத; மூவா: மூப்பு அடையாத; வேள்: மன்மதன்; தாள் ஆவேன்: (உன்) திருப்பாதத்துக்கு ஆட்பட்ட; |
| தாதாவே ஞாதாவே கோவே சார்பு ஆனார்கட்கு உயிர் போல்வாய் | தாதா: கொடையாளி; ஞாதா: அறியத் தக்கவன், ஞான பண்டிதன்; கோ: தலைவன்; |
| ஏவால் மாலே போல்வாய் காரே போல்வாய் ஈதற்கு எனை ஆள் கொண்டு | ஏ: அம்பு; ஏவால்: அம்பைச் செலுத்துவதில்; காரே போல்வாய் ஈதற்கு: வழங்குவதில் மேகம் போன்றவன்; |
| ஏயா பாடா வாழ்வோர் பாலே யான் வீணே கத்திடலாமோ | ஏயா: இயையாத—செல்வர்களை அடைந்து; பாடா வாழ்வோர்: அவர்களுக்கு ஏற்ற வகையில் பாடி வாழ்வோர்; |
| பாவா நாவாய் வாணீ சார்வார் பாராவாரத்து உரகேச | பாவா: பாடலாக; நாவாய்: நாவில் பொருந்தி; பாராவாரம்: கடல், பாற்கடல்; உரகேச: உரக ஈச—ஆதிசேடன்; |
| பாய் மீதே சாய்வார் காணாதே பாதாள ஆழத்து உறு பாத | பாதாள ஆழத்து உறு பாத: மாலும் காண முடியாதபடி பாதாளத்தில் தன் பாதத்தைப் பதித்த பரமேச்வரர்; |
| சே ஆம் மா ஊர் கோமான் வாழ்வே சீமானே செச்சைய மார்பா | சே: இடபம்; மா: விலங்கை; ஊர்: வாகனமாக உடைய; செச்சைய: வெட்சி மாலை அணிந்தவன; |
| சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே. | சேயே: பாலகனே; வேளே: செவ்வேளே, முருகவேளே; பூவே: அழகனே; கோவே: தலைவனே; தேவே: தேவனே |

சாவா மூவா வேளே போல்வாய் ... சாதலும், வயது முதிர்ந்து மூத்தலும் இல்லாதவனும், மன்மதனைப் போன்றவனும்;

தாள் ஆவேனுக்கு அருள் கூரும் தாதாவே ஞாதாவே கோவே ... உன் திருப்பாதத்துக்கு ஆட்பட்ட எனக்கு அருள்சுரக்கும் கொடையாளியே, அறியத் தக்கவனே (ஞான பண்டிதனே), தலைவனே!

சார்பு ஆனார்கட்கு உயிர் போல்வாய் ... உன்னையே சரண்புகுந்து அண்டியிருப்பவர்களுக்கு உயிர் போல விளங்குபவனே!

ஏவால் மாலே போல்வாய் காரே போல்வாய் ஈதற்கு எனை
ஆள் கொண்டு ... அம்பை எய்வதில் திருமாலை நிகர்த்தவனே! அளிப்பதில் மேகத்தை ஒத்தவனே! என்னை உனக்கு ஆளாகக் கொண்டவனே (என்றெல்லாம்),

ஏயா பாடா வாழ்வோர் பாலே யான் வீணே கத்திடலாமோ ... தனக்கு இசையாதவர்களிடம் சென்று துதிபாடி, (இப்படிப் பட்ட போற்றிப் பாடல்களைக் கேட்பதையே இன்பமாகக் கொண்டுள்ள செல்வந்தர்களை அண்டிய நானும் வீணாக (மற்ற புலவர்களைப் போல) கூக்குரலிட விடுவாயோ?

பாவா நாவாய் வாணீ சார்வார் ... தன்னுடைய நாவிலே பாடல்களின் வடிவமாக உறைகின்ற கலைமகளோடு சார்ந்திருக்கும் பிரமனும்,

பாராவாரத்து உரகேச பாய் மீதே சாய்வார் காணாதே ... பாற்கடலில் பாம்புகளின் அரசனான (உரக ஈச) பாய்மேலே சாய்ந்திருப்பவரான திருமாலும் காணமுடியாதபடி,

பாதாள ஆழத்து உறு பாத சே ஆம் மா ஊர் கோமான் வாழ்வே ... பாதாளத்துக்கும் ஆழமான இடத்தில் தன் திருவடிகளை வைத்தவரும்; ரிஷபமான நந்தியை வாகனமாகக் கொண்டவருமான சிவபெருமான் பெற்ற செல்வமே!

சீமானே செச்சைய மார்பா ... செல்வப் பிரபுவே! வெட்சிமாலை விளங்கும் மார்பை உடையவனே!

சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் பெருமாளே. ... சிவனுடைய குமாரனே! முருகவேளே! அழகனே! தலைவனே! தேவர்களுடைய பெருமாளே!

சுருக்க உரை

தன் நாவிலே பாடல்களின் வடிவமாக உறையும் சரஸ்வதியோடு சார்ந்திருக்கும் பிரனும்; பாற்கடலில் பாம்பணையில் துயில் கொள்ளும் திருமாலும் காணமுடியாத (முடியையும்); பாதாளத்தைக் கடந்த அடியையும் உடையவரும்; ரிஷப வாகனருமான பரமேஸ்வரன் பெற்ற செல்வமே! வெட்சி மாலையைச் சூடியவனே! கந்தவேளே! தேவர்களுடைய பெருமாளே!

சாதலும் மூத்தலும் இல்லாமல் என்றென்றும் மன்மதனைப் போன்ற அழகுடையவனே! உன்னுடைய தாளுக்கே ஆட்பட்டவனான அடியவனுக்கு அருளைத் தரும் கொடையாளியே! ஞான பண்டிதனே! உன்னையே அண்டியோர்களுக்கு உயிரானவனே!

அம்பெய்வதில் திருமாலை நிகர்த்தவனே என்றும்; என்னை ஆளாகக் கொள்ளும் கொடை வண்மையில் மேகத்தை ஒத்தவனே என்றும் (இவ்வாறெல்லாம் வீண் பாராட்டுகளைப் பாடுவோரின் மொழிகளைக்) கேட்டு வாழும் செல்வந்தர்களிடத்தினே சென்று நானும் வீணாகக் கூச்சலிட்டு (பிற புலவர்களைப் போலப்) பாடி வாழ்வது நன்றா? (அவ்வாறு விட்டுவிடாமல் என்னை ஆட்கொள்ள வேண்டும்.)

இந்தக் கருத்தில்தான் குருநாதர் தன்னுடைய திருச்செந்தில் வகுப்பில்,

சந்த பந்த முந்து விந்தை செஞ்சொ லின்ப்ர பந்த நந்து

சங்க மங்க லம்பொ ருந்து தமிழ்பாடியே

தஞ்ச மென்று சென்று சென்று நஞ்சு விஞ்சு நெஞ்ச வஞ்சர்

தங்கண் முன்பு நின்று நின்று மெலிவோ தியே

சிந்தை நொந்து நொந்து நைந்து நைந்து வெம்பி வெம்பி யங்கி

சிந்தி யிந்த வெங்கு டம்பை அழிபோதுமா

சிங்க முன்பு குந்த தந்தி யின்கு லங்க லங்கு பண்பொ

சிந்த துன்ப மென்றொ ழிந்து கரையேறுவேன்

என்று பாடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அடைபட்ட நீா்வழிப்பாதைகளால் குளங்களில் நீா் நிரம்புவதில் சிக்கல்
நாகப்பட்டினம் புதிய கடற்கரை மேம்படுத்தப்படுமா?

முதல் நாள் அறிவிப்பு; மறுநாளே ரத்து! பேசுபொருளாகும் விஜய்யின் பிரசாரம்!
இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில்...
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை