பதச் சேதம் | சொற் பொருள் |
| காதி மோதி வாது ஆடு நூல் கற்றிடுவாரும் காசு தேடி ஈயாமல் வாழ பெறுவோரும் | காதி: காதுதல்—வெட்டுதல்; வெட்டுவதைப் போலப் பேசி; வாதாடு நூல்: தர்க்கம் செய்ய உரிய நூல்கள்; |
| மாது பாகர் வாழ்வே எனா நெக்கு உருகாரும் மாறு இலாத மா காலன் ஊர் புக்கு அலைவாரே | மாதுபாகர்: மாதொருபாகன், சிவன்; நெக்குருகார்: மனம் கசிந்து உருகாதவர்கள்; மாறு இலாத: மாறுபாடு இல்லாத, நீங்காத, தொலையாத; மா: பெரிய; காலன் ஊர்: யமலோகம்; புக்கு: புகுந்து; |
| நாத ரூப மா நாதர் ஆகத்து உறைவோனே நாக லோகம் ஈரேழு பாருக்கு உரியோனே | நாத ரூப: நாதமே வடிவான; ஆகத்து: (ஆகம்—மார்பு, நெஞ்சு, உள்ளம்) உள்ளம்; நாகலோகம்: சொர்க்கம் (இன்னொரு பொருள்); ஈரேழு பார்: பதினான்கு உலகங்களுக்கும்; |
| தீது இலாத வேல் வீர சேவல் கொடியோனே தேவ தேவ தேவாதி தேவ பெருமாளே. |

காதி மோதி வாதாடு ... வெட்டி வீழ்த்திவிடுவதுபோல (ஆக்ரோஷத்துடன்) தர்க்கம் செய்வதற்கு உரிய

நூல்கற்றிடுவோரும் ... நூல்களைப் பயில்பவர்களும் (போயும் போயும் இத்தகைய நூல்களைப் படித்துக் கொண்டிருப்பவர்களும்);

காசு தேடி ஈயாமல் ... பணத்தைத் தேடிச் சேர்த்து வைத்துக் கொண்டு, பிறருக்கு எதுவும் கொடுக்காமல்

வாழப் பெறுவோரும் ... தங்களுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர்களும்;

மாதுபாகர் வாழ்வே யென ... உமையைத் தன் இடதுபாகத்தில் கொண்டவரான சிவபெருமானுடைய செல்வமே என்று,

நெக்குருகாரும் ... (உன்னை நினைப்பதாலே) மனம் கசிந்து, நெகிழ்ந்து உருகாதவர்களும்;

மாறிலாத மாகாலனூர் ... என்றென்றும் மாறாததாகிய யமதர்மப் பட்டணத்துக்கு (அல்லது, என்றென்றும் தர்ம நெறிகளில் மாறாததாகிய யமலோகத்துக்குச்)

புக்கலைவாரே ... சென்று புகுந்தும் (அதன்பின்னர் மீண்டும் பிறப்பெடுத்தும், மீண்டும் யமலோகம் சென்றும் என) திரிந்துகொண்டிருப்பார்கள்.

நாத ரூப ... நாதமே வடிவாக உள்ளவனே!

மாநாதர் ஆகத்து உறைவோனே ... மகாதேவரான சிவபெருமானுடைய உள்ளத்தில் வீற்றிருப்பவனே!

நாகலோக மீரேழு பாருக்கு உரியோனே ... சொர்க்கம் முதலாகிய பதினான்கு லோகங்களுக்கும் உரியவனாக விளங்குபவனே!

(நாகலோகம் என்பதற்குப் பாதாள லோகம் என்றும் சொர்க்கலோகம் என்றும் இரண்டு பொருளும் உண்டு)

தீதி லாத வேல்வீர ... தீமைகளை இல்லாமல் செய்யும் வேலை ஏந்தும் வீரனே!

சேவற்கொடியோனே ... சேவலைக் கொடியாக உயர்த்தியவனே,

தேவ தேவ ... தேவ தேவனே,

தேவாதி தேவப் பெருமாளே. ... தேவாதி தேவர்களுக்கெல்லாம்
பெருமாளே.

சுருக்க உரை

நாதமே வடிவாக உள்ளவனே! மகாதேவரான சிவபெருமானுடைய உள்ளத்தில் வீற்றிருப்பவனே! சொர்க்கம் முதலான ஈரேழு பதினான்கு உலகங்களுக்கும் உரியவனே! தீமைகளை அழிக்கும் வேலை ஏந்துபவனே! சேவலைக் கொடியாகக் கொண்டவனே! தேவதேவனே! தேவாதி தேவர்களுக்கெல்லாம் தேவனாக விளங்குகின்ற பெருமாளே!

வெறுமனே ஒருவரையொருவர் தாக்கிப் பேசுவதற்காகவும் தர்க்கம் செய்வதற்காகவும் (மட்டுமே) (பயனற்றனவான) தர்க்க சாத்திர நூல்களைப் பயின்றுகொண்டிருப்பவர்களும்; பாடுபட்டுப் பொருளைத் தேடி, ஒருவருக்கும் கொடுக்காமல் பதுக்கிவைத்துக் கொள்பவர்களும்; மாதொருபாகனான சிவபெருமானுடைய செல்வமே என்று உன்னை நினைத்து மனம் நெகிழ்ந்து உருகாதவர்களும்—இவர்கள் அனைவரும், மாறுதல் இல்லாத தர்மம் நிலைத்து விளங்குவதான யமலோகத்துக்குப் போயும், மீண்டும் பிறந்தும், மீண்டும் யமலோகத்தை அடைந்தும் என்று அலைச்சலுறுவார்கள். (ஆகவே நான் இப்படிப்பட்ட வாதங்களில் சிக்கிக் கொள்ளாமல்; உன்னையே நினைத்து மனமுருகியபடி நிற்க அருள வேண்டும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அடைபட்ட நீா்வழிப்பாதைகளால் குளங்களில் நீா் நிரம்புவதில் சிக்கல்
நாகப்பட்டினம் புதிய கடற்கரை மேம்படுத்தப்படுமா?

முதல் நாள் அறிவிப்பு; மறுநாளே ரத்து! பேசுபொருளாகும் விஜய்யின் பிரசாரம்!
இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில்...
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை