‘பக்கரை விசித்ர மணி’ திருப்புகழில் ‘செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு செப்பெனஎ னக்கருள்கை மறவேனே’ என்று சுவாமிகள் எழுச்சியோடு பாடிய தலம் வயலூர். செய்ப்பதி என்பதும் இதுவே. செய் என்றால் வயல் என்று பொருள். எனவே செய்ப்பதி என்பது வயலூரைக் குறித்தது. ‘அருணகிரி, நீ வயலூருக்கு வருக’ என்று முருகன் அசரீரியாகச் சொல்ல, குருநாதர் வயலூருக்குக் கிளம்பிச் செல்கிறார். இதை வாரியார் சுவாமிகள்,
நாள்சில கழிந்தபினர் நம்பன் திருமகனார்
ஆட்சி அருளாலே அல்லல்தீர் மைந்தாநீ
மாட்சிமிக நாம்வாழ் வயலூருக்கு எய்திடென
நீட்சிமிகு சொற்கள் நேர்ந்த அசரீரியதா…
(சில நாட்கள் கழிந்த பின்னால், சிவபெருமானுடைய திருக்குமரனாகிய கந்தனின் அருளாலே, அருணகிரி நாதருக்குக் கேட்கும்படியாக ‘வாட்டம் தீர்ந்த மகனே, நமது வாழிடமான வயலூருக்கு வா’ என்று வானொலி எழுந்தது.)
என்று தன்னுடைய ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் புராணத்தில் குறிக்கிறார்.
‘முத்தைத்தரு பத்தித் திருநகை’ என்ற முதற்பாடலைப் பாடிய சிலகாலத்தில் இது நடந்தது. எனவே, திருவண்ணாமலைத் தலத்தில் முருகனைப் பாடிய பிறகு அருணகிரி நாதர் திருப்புகழ் பாடிய முதல் தலம் வயலூர். வாரியார் சுவாமிகளுடைய திருவாக்கிலே ஓயாமல் எழுந்த பெயர் வயலூர். இன்று நாம் காண்பது வயலூர்த் திருப்புகழ். சலனப்படாத, உறுதி நிறைந்த ஞானத்தைக் கேட்கிறது பாடல்.
தனதத்த தானான தனதத்த தானான
தனதத்த தானான - தந்ததான
கமையற்ற சீர்கேடர் வெகுதர்க்க கோலாலர்
களையுற்று மாயாது - மந்த்ரவாதக்
கடைகெட்ட ஆபாத முறுசித்ர கோமாளர்
கருமத்தின் மாயாது - கொண்டுபூணுஞ்
சமயத்த ராசார நியமத்தின் மாயாது
சகளத்து ளேநாளு - நண்புளோர்செய்
சரியைக்ரி யாயோக நியமத்தின் மாயாது
சலனப்ப டாஞானம் - வந்துதாராய்
அமரிற்சு ராபான திதிபுத்ர ராலோக
மதுதுக்க மேயாக - மிஞ்சிடாமல்
அடமிட்ட வேல்வீர திருவொற்றி யூர்நாதர்
அருணச்சி காநீல - கண்டபார
மமபட்ச மாதேவ ரருமைச்சு வாமீநி
மலநிட்க ளாமாயை - விந்துநாதம்
வரசத்தி மேலான பரவத்து வேமேலை
வயலிக்குள் வாழ்தேவர் - தம்பிரானே.
</p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/252551086&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p> </p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டியா? முதல்வர் ஸ்டாலின் பதில்!

தேர்தல் பிரசாரம்: தமிழகம் வரும் நிதின் நபின்!

சொல்லப் போனால்... நயத்தக்க நாகரிகம் வேண்டாவா?

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! ஜே.டி.வான்ஸ்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

